கனவில் எந்த கடவுள் வந்தால் என்ன பலன்
கனவில் எந்த கடவுள் வந்தால் என்ன பலன்
கனவு என்பது ஒவ்வொருவரும் வாழ்விலும் இயல்பாக வரும் ஒன்றாகும்.ஒருவர் நல்ல விஷயங்களை மட்டும் நினைத்துக் கொண்டு இருக்கும்போது அவர்களுக்கு அந்த கனவு நன்மையான கனவாக வரும்.சிலர் தீய எண்ணங்களை நினைத்துக்கொண்டு இருக்கும்பொழுது அவர்களுக்கு தீய கனவு வர வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் இறைவனை மட்டுமே நினைத்துக்கொண்டு இருக்கும் நபர்களுக்கு இறைவன் கனவில் காட்சி தர வாய்ப்பிருக்கிறது.நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது. கனவானது இரவு 1.00 மணி அளவில் வந்தால் அந்த கனவு ஒரு வருடத்தில் நடக்கும். இரவு 2 மணி அளவில் கனவு வந்தால் மூன்று மாதங்களில் நடக்கும். அதிகாலையில் கண்ட கனவு ஆனது உடனே நடக்கும் என சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.
சிவலிங்கம் – தொடர்ச்சியான தியானம் மேற்கொள்ள வேண்டும்
முருகன் – நினைத்த காரியம் நிறைவேறும்
விநாயகர் – புதிதாக தொடங்கும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்
விஷ்ணு – செல்வந்தராக ஆவதற்கு ஆன அறிகுறி
அம்பாள் – வீட்டில் விசேஷங்கள் ஏற்படும்
குல தெய்வம் – குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும், சுபிட்சமான வாழ்வு ஏற்படும்
கோபுரம் – சுபிட்சமான வாழ்வு ஏற்படும்
யானை துரத்துவது போல் – நேத்தி கடனை செலுத்த வேண்டும்
Recent Comments