இன்றைய ராசிபலன் | Today Rasi Palan | 13/03/2022

இன்றைய ராசிபலன் | Today Rasi Palan | 13/03/2022

13-03-2022 இன்றைய தினம் பிலவ வருடம் மாசி மாதம் 29 தேதி ஞாயிற்றுக்கிழமை ( Today Rasi Palan )

வளர்பிறை, திதிஇன்று காலை10:19 வரை தசமி பின்பு ஏகாதசி
நட்சத்திரம்இன்று மாலை 5:39 வரை திருவாதிரை பின்பு புனர்பூசம்
யோகம்இன்று முழுவதும் சித்தயோகம்
நல்ல நேரம்நல்ல நேரம் காலை 8:30 மணி முதல் 9:00 மணி வரை
மாலை 03:30 மணி முதல் 04:30 மணி வரை
கௌரி நல்ல நேரம்காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரையும்
மதியம் 1:30 மணி முதல் 2:30 மணி வரை
ராகுகாலம்மாலை 04:30 மணி முதல் 6:00 மணி வரை
குளிகைமாலை 3 மணி முதல் 4:30 மணி வரை
எமகண்டம்12 மணி முதல் 1:30 மணி வரை
கரணம்மதியம் 12 மணி முதல் 1:30 மணி வரை
சூரிய உதயம்காலை 6:23
சூலம்மேற்கு
சந்திராஷ்டமம்கேட்டை, மூலம்
மேஷம்

மேஷம் இன்றைய தினம் உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். பணியிடத்தில் சக பணியாளர்கள் உதவி இன்று கிடைக்கும். உங்கள் பணிகளை எளிதாக சிறப்பாக முடிப்பீர்கள். வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள். இருவருக்கும் இடையே புரிந்துணர்வு அதிகமாக இருக்கும். ( Today Rasi Palan ) நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணவரவு சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை வடமேற்கு, அதிர்ஷ்டமான எண் 4, அதிர்ஷ்டமான நிறம் சாம்பல் நிறம்.

ரிஷபம்

ரிஷபம் இன்றையதினம் எதிலும் பதற்றம் ஏற்படும் நாளாகும். பணியிடத்தில் பணிகளை திட்டமிட்டு செய்யப் பாருங்கள். வாழ்க்கைத் துணையிடம் அமைதியாக பேசி பழக பாருங்கள். நிதி நிலைமையை பொறுத்த வரைக்கும் பண வரவு சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் லாபம் கிடைக்கும். இன்றைய தினம் உங்களுக்கு திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை வடக்கு, அதிர்ஷ்டமான என் 7, அதிர்ஷ்டமான நிறம் இளநீலம்.

மிதுனம்

மிதுனம் இன்றைய தினம் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லதாகும். பணியிடத்தில் உங்கள் பணியில் சில சவால்கள் இருக்கும். வாழ்க்கை துணையிடம் அனைத்து விஷயங்களையும் லேசாக எடுத்துக் கொண்டு அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். ( Today Rasi Palan ) நிதி நிலைமை பொருத்தவரைக்கும் கவனம் தேவை உத்தியோகத்தில் சக ஊழியர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவீர்கள். இன்றைய தினம் உங்களுக்கு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை தெற்கு, அதிஷ்டமான எண் 9,
அதிர்ஷ்டமான நிறம் இளஞ்சிவப்பு.

கடகம்

கடகம் இன்றைய தினம் உங்களுக்கு பொறுப்புகள் நிறைந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் திட்டமிட்டு செய்தால் மட்டுமே குறித்த நேரத்தில் வேலைகளை செய்து முடிக்க முடியும். வாழ்க்கை துணையிடம் மனம் திறந்து பேச பாருங்கள். நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணவரவு ஏற்றம் இறக்கமாக இருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். இன்றைய தினம் உங்களுக்கு நிதானத்துடன் இருந்து வெற்றி அடையும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு, அதிர்ஷ்டமான எண் 2, அதிர்ஷ்டமான நிறம் இளநீலம்.

சிம்மம்

சிம்மம் இன்றையதினம் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். பணியிடத்தில் உங்கள் வேலைகளை சிறப்பாகச் செய்வீர்கள். உங்கள் பணிக்கான பாராட்டுகளும் கிடைக்கும். வாழ்க்கைத் துணையிடம் உங்கள் மனதில் உள்ள காதலை வெளிப்படுத்துவார்கள். நிதி நிலைமையை பொறுத்தவரைக்கும் உங்களிடம் இருக்கும் பணம் உங்களுக்கு போதுமானதாக இருக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். இன்றைய தினம் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை தென்கிழக்கு, அதிர்ஷ்டமான எண் 1, அதிர்ஷ்டமான நிறம் இளம் சிவப்பு.

கன்னி

கன்னி இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். வாழ்க்கை துணையிடம் வீட்டில் குடும்ப முன்னேற்றத்தை பற்றி கலந்துரையாடுவீர்கள். ( Today Rasi Palan ) நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணவரவு நீங்கள் எதிர்பார்த்தபடி இருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களை எல்லோரும் மதிப்பார்கள் இன்றைய தினம் உங்களுக்கு நன்மையான நாளாக இருக்கும் அதிர்ஷ்டமான திசை வடமேற்கு, அதிர்ஷ்டமான எண் 9, அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு.

துலாம்

துலாம் இன்றைய தினம் உங்களுக்கு தொட்டது துலங்கும் நாளாகும். பணியிடத்தில் உங்கள் பணிகளை சிறப்பாக செய்கிறீர்கள். குறித்த நேரத்தில் பணிகளை செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத் துணையிடம் புரிந்துணர்வு சிறப்பாக இருக்கும். நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணவரவு அதிகமாக இருக்கும். வியாபாரம் செழிப்பாக நடக்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். இன்றைய தினம் உங்களுக்கு நினைத்தது செய்து முடிக்கும் நாள் ஆகும். அதிஷ்டமான திசை மேற்கு, அதிர்ஷ்டமான எண் 5, அதிர்ஷ்டமான நிறம் சாம்பல் நிறம்.

விருச்சிகம்

விருச்சிகம் : இன்றைய தினம் முயற்சிகள் தேவைப்படும் நாளாகும். பணியிடத்தில் இன்று சிறப்பான பலன்கள் கிடையாது. பணிகள் இன்று நிலுவையில் இருக்க வாய்ப்பு உள்ளது. கவனமாக திட்டமிட்டு செயல்பட பாருங்கள். கணவன் மனைவிக்கு இடையே பேச்சில் நிதானம் தேவை, புரிந்துணர்வு குறைந்தே இருக்கும். ( Today Rasi Palan ) நிதி நிலைமை பொறுத்தவரைக்கும் பணம் வரவு கிடையாது. வியாபாரத்தில் சில ரகசியங்களை யாரிடமும் கூறாதீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் இன்று உங்களை அலைக்கழிக்க பட வாய்ப்பு உள்ளது. இன்றைய தினம் உங்களுக்கு சிந்தித்து செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை வடக்கு, அதிர்ஷ்டமான எண் 8, அதிர்ஷ்டமான நிறம் மயில் நீலம்.

தனுசு

தனுசு : இன்றைய தினம் எதிலும் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டிய நாளாகும். பணியிடத்தில் பணி சுமை குறைந்து சற்று அதிகமாகவே இருக்கும் சகபணியாளர்களிடம் சற்று அனுசரித்து செல்வது நல்லது. வாழ்க்கைத் துணையுடன் அன்பு அதிகரிக்க பேச்சில் நிதானம் தேவை நிதி நிலைமையை பொருத்த வரைக்கும் பணவரவு சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தேகத்தில் அதிகாரிகளின் உதவிகள் சிலருக்கு கிடைக்கும். இன்றைய தினம் உங்களுக்கு தன்னம்பிக்கை தேவைப்படும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை தெற்கு, அதிர்ஷ்டமான நிறம் 6, அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு.

மகரம்

மகரம் : இன்றைய தினம் எதிலும் வெற்றி கிடைக்கும் நாளாகும். பணியிடத்தில் உங்கள் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சியாக பேசி பழகுவீர்கள். அவர் வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்து லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இன்றைய தினம் உங்களுக்கு நல்லது நடக்கும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை தெற்கு, அதிர்ஷ்டமான எண் 8, அதிர்ஷ்டமான இளநீலம்.

கும்பம்

கும்பம் : இன்றைய தினம் எதிர்பாராத வாய்ப்புகள் தேடி வரும் நாளாகும். பணியிட பணியிடத்தில் உங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே நட்பான அணுகுமுறை இருக்கும் நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணப்புழக்கம் இன்று மகிழ்ச்சியாக இருக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபம் அதிகரிக்கும் உத்தியோகத்தில் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் கிடைக்கும். இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை கிழக்கு, அதிர்ஷ்டமான எண் 9, அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு.

மீனம்

மீனம் : இன்றைய தினம் உங்களுக்கு சாதகமான பலன்களே கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள், அதனால் அனைவரிடமும் பாராட்டை பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையிடம் மகிழ்ச்சியாக பழகுவீர்கள். இருவருக்கும் இடையில் நல்லிணக்கம் அதிகரிக்கும். ( Today Rasi Palan ) நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணவரவு நீங்கள் எதிர்பார்த்தபடி இருக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் நீங்கள் எதிர்பார்த்தபடி இருக்கும். இன்றைய தினம் உங்களுக்கு நினைத்தது நிறைவேறும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை மேற்கு, அதிர்ஷ்டமான எண் 6, அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.