இன்றைய ராசிபலன் | Today Rasi Palan | 12/03/2022

இன்றைய ராசிபலன் | Today Rasi Palan | 12/03/2022

12-3-2022 இன்றைய தினம் பிலவ வருடம் மாசி மாதம் 28 தேதி சனிக்கிழமை. ( Today Rasi Palan )

வளர்பிறை, திதிஇன்று காலை 8:22 வரை நவமி பின்பு தசமி
நட்சத்திரம்இன்று மாலை 5:39 வரை திருவாதிரை பின்பு புனர்பூசம்
யோகம்இன்று முழுவதும் சித்தயோகம்
நல்ல நேரம்காலை 07:30 மணி முதல் 8:30 மணி வரை
மாலை 04:30 மணி முதல் 05:30 மணி வரை
கௌரி நல்ல நேரம்காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை
மாலை 09:30 மணி முதல் 10:30 மணி வரை
ராகுகாலம்காலை 9 மணி முதல் 10:30 மணி வரை
குளிகைகாலை 06:00 மணி முதல் 07:30 மணி வரை
எமகண்டம்மதியம் 09:30 மணி முதல் 3:00 மணி வரை
கரணம்மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூரிய உதயம்காலை 06.25 மணி
சூலம்கிழக்கு திசை
சந்திராஷ்டமம்அனுஷம், கேட்டை

மேஷம்

மேஷம் இன்றையதினம் அமைதியை கடைபிடிக்க பாருங்கள். இடத்தில் முக்கியமான பணிகளை முடிக்க முடியாமல் போகலாம் சிறு தாமதங்கள் ஏற்படலாம். வாழ்க்கைத்துணையை திருப்திப்படுத்த இன்று கூடுதல் முயற்சி தேவைப்படும். நிதி நிலைமை பொருத்தவரைக்கும் அதிர்ஷ்டம் சற்று குறைந்தே இருக்கும் வியாபாரத்தில் கடன்கள் அடைக்கப்படும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை முழுமையாக நம்புவார்கள். ( Today Rasi Palan ) இன்றைய தினம் உங்களுக்கு முயற்சியால் முன்னேறும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை வடமேற்கு, அதிர்ஷ்டமான என் 4, அதிர்ஷ்டமான நிறம் சாம்பல் நிறம்.

ரிஷபம்

ரிஷபம் இன்றைய தினம் மகிழ்ச்சியுடனும் அமைதியுடனும் இருக்கும் நாளாகும். பணியிடத்தில் உங்கள் பணிகளை சிறப்பாக மேற்கொள்வீர்கள் கணவன் – மனைவிக்கு இடையே புரிந்துணர்வு சிறப்பாக இருக்கும். நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் சேமிக்கும் ஆற்றல் அதிகரிக்கும் பணவரவு உண்டு வியாபாரத்தில் இழுபறியான வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இன்றைய தினம் உங்களுக்கு நினைத்தது நிறைவேறும் நாளாக இருக்கும் அதிர்ஷ்டமான திசை வடக்கு, அதிஷ்டமான எண் 7,
அதிர்ஷ்டமான நிறம் இளநீலம்.

மிதுனம்

மிதுனம் இன்றைய தினம் உங்கள் மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும் நாளாகும். பணியிடத்தில் பணி வளர்ச்சி சற்று குறைந்தே இருக்கும். வாழ்க்கை துணையுடன் பேசும்போது பேச்சில் நிதானம் தேவை. நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பண வரவு சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும் வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் பணிகளை போராடி முடிக்க வேண்டி இருக்கும் இன்றைய தினம் உங்களுக்கு அதிக உழைக்க வேண்டிய நாளாகும். அதிர்ஷ்டமான திசை தெற்கு, அதிர்ஷ்டமான எண் 9, அதிர்ஷ்டமான நிறம் இளஞ்சிவப்பு.

கடகம்

கடகம் இன்றைய தினம் உங்களை நீங்களே மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளப் பாருங்கள். பணியிடத்தில் உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் செய்ய முடியாமல் போகலாம் . திட்டமிட்டு பணிகளை செய்து முடிக்க பாருங்கள். வாழ்க்கைத்துணையுடன் நல்லிணக்க உடன் பழக அவர்களுடன் அனுசரித்து செல்ல பாருங்கள். நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் எதிர்பாராத பண மாற்றம் அடையலாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளப் பாருங்கள் இன்றைய தினம் உங்களுக்கு சற்று அலைச்சல் ஆன நாளாக இருக்கும். அதிஷ்டமான திசை தென்மேற்கு, அதிர்ஷ்டமான எண் 2, அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை.

சிம்மம்

சிம்மம் இன்றையதினம் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள் ஆகும் பணியிடத்தில் பணிச்சுமை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் வாழ்க்கை துணையை புரிந்து நடந்து கொள்ளுங்கள் அவர்களின் விருப்பத்தை இன்று நிறைவேற்றுங்கள் நிதி நிலைமையை பொறுத்தவரைக்கும் பயணம் செல்லும்போது பணத்தை பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும் வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு உடன் செயல்படுவார்கள் உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கான அங்கீகாரம் இன்று கிடைக்கும் இன்றைய தினம் உங்களுக்கு உழைப்பால் உயரும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை, தென்கிழக்கு அதிர்ஷ்டமான எண் 1, அதிர்ஷ்டமான நிறம் இளஞ்சிவப்பு.

கன்னி

கன்னி இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் நீங்கள் செய்யும் பணிகள் நல்ல வளர்ச்சி இருக்கும். கணவன் – மனைவிக்கு இடையே நல்ல புரிந்துணர்வு இருக்கும் இன்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதி நிலைமை பொருத்தவரைக்கும் பணவரவு உண்டு. வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்புடன் நடந்து கொள்வார்கள் இன்றைய தினம் உங்களுக்கு மாற்றமான சூழ்நிலை உண்டாகும் நாளாக இருக்கும். அதிஷ்டமான திசை வடமேற்கு, அதிர்ஷ்டமான எண் 9, அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு.

துலாம்

துலாம் இன்றைய தினம் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். பணியிடத்தில் சாதகமான பலன்கள் உங்களுக்கு இன்று கிடைக்கும் பணிகளை விரும்பி செய்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே புரிந்துணர்வு அதிகமாக இருக்கும். நிதி நிலைமையை பொருத்த வரைக்கும் பணவரவு உண்டு. சேமிக்கும் எண்ணம் அதிகரிக்கும் வியாபாரத்தில் கடன்கள் வசூலாகும் உத்தியோகத்தில் அமைதியான சூழல் நிலவும். இன்றைய தினம் உங்களுக்கு எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை மேற்கு, அதிர்ஷ்டமான எண் 5, அதிர்ஷ்ட நிறம் சாம்பல் நிறம்.

விருச்சிகம்

விருச்சிகம் : இன்றைய தினம் உங்கள் எதிர்மறை எண்ணங்களை வெளிப்படுத்துவீர்கள். இடத்தில் உங்கள் பணியில் சில தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கவனத்துடன் செயல்படப் பாருங்கள் வாழ்க்கைத் துணையுடன் அன்பான உணர்வுகளை மட்டும் வெளிப்படுத்துங்கள், கோபத்தை கட்டுப்படுத்துங்கள். நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும், உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். இன்றைய தினம் உங்களுக்கு எதிலும் பொறுமைத் தேவைப்படும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் 5, அதிர்ஷ்டமான நிறம் மயில் நீலம்.

தனுசு

தனுசு : இன்றைய தினம் அனைத்து விஷயங்களையும் லேசாக எடுத்து பாருங்கள் பணியிடத்தில் வேலை சுமை அதிகமாக இருக்கும். உங்கள் பணியில் சில தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடன் நட்பான அணுகுமுறை ஏற்பட பாருங்கள் நிதி நிலைமையை பெருத்த வரைக்கும் செலவுகள் இன்று அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். உத்யோகத்தில் சில காலதாமதம் ஏற்படும். இன்றைய தினம் உங்களுக்கு கூடுதல் முயற்சி ஏற்படும் நாளாக இருக்கும். ( Today Rasi Palan ) அதிர்ஷ்டமான திசை தெற்கு, அதிர்ஷ்டமான என் 6, அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு.

மகரம்

மகரம் : இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் பணி வேலையாக வெளியூர் செல்வீர்கள் உங்கள் வாழ்க்கைத் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். நிதி பொருத்தவரைக்கும் எதிர்பாராத பணவரவு உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். ( Today Rasi Palan ) இன்றைய தினம் உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும் அதிர்ஷ்டமான திசை தெற்கு, அதிர்ஷ்டமான எண் 8 , அதிஷ்ட நிறம் இளநீலம்.

கும்பம்

கும்பம் : இன்றையதினம் எதிலும் நல்ல பலன்கள் கிடைக்கும். பணி யிடத்தில் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்கள் பணிகளை எல்லோரும் கவரும் வண்ணம் செய்வீர்கள். வாழ்க்கைத் துணையிடம் அன்பாக பழகுவீர்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து இருப்பீர்கள். நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணவரவு சிறப்பாக இருக்கும். ( Today Rasi Palan ) வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும் உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை முழுமையாக நம்புவார்கள். இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை கிழக்கு, அதிர்ஷ்டமான என் 9, அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு.

மீனம்

மீனம் : இன்றைய தினம் ஆன்மீக மற்றும் இறை வழிபாடு செய்வது நல்லது. பணியிடத்தில் பணிகளின் போது சில பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாழ்க்கை துணையிடம் உணர்ச்சிவசப்படுவது தவிர்த்து விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளப் பாருங்கள். நிதி நிலைமையை பொறுத்த வரைக்கும் பணம் வரவு சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள்.( Today Rasi Palan ) உத்தியோகத்தில் சக பணியாளர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். இன்றைய தினம் உங்களுக்கு தடைகளை தகர்த்தெறியும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை மேற்கு, அதிர்ஷ்டமான எண் 6 ,அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.