10/03/2022 இன்றைய ராசிபலன் | Today Rasi Palan

10/03/2022 இன்றைய ராசிபலன் | Today Rasi Palan

10-3-2022 இன்றைய தினம் பிலவ வருடம் மாசி மாதம் 26 ஆம் தேதி வியாழக்கிழமை ( Today Rasi Palan )

வளர்பிறை திதிஇன்று அதிகாலை 4:20 வரை சப்தமி பின்பு அஷ்டமி
நட்சத்திரம்இன்று பிற்பகல் 12:35 வரை ரோகிணி பின்பு மிருகசீரிஷம்
யோகம்இன்று அதிகாலை 6:26 வரை சித்தயோகம் பின்பு மரணயோகம்
நல்ல நேரம்நல்ல நேரம் காலை 10:30 மணி முதல் 11:30
கௌரி நல்ல நேரம்மதியம்12:30 மணி முதல் 1:30 வரை
மாலை 6:30 மணி முதல் 07:30 மணி வரை
ராகுகாலம்மதியம் 1:30 முதல் 3:00 மணி வரை
குளிகைகாலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
எமகண்டம்காலை 06:00 மணி முதல் 07:30 மணி வரை
கரணம்மாலை 03:00 மணி முதல் 4:30 மணி வரை
சூரிய உதயம்அதிகாலை 6:25
சூலம்தெற்கு
சந்திராஷ்டமம்சுவாதி, விசாகம்

மேஷம்

மேஷம் : இன்றைய தினம் உங்களை நீங்களே மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளப்பாருங்கள். பணியிடத்தில் கவனச்சிதறல் ஏற்பட வாய்ப்பு இருப்பதினால் உங்கள் பணியில் தாமதம் ஏற்படும். வாழ்க்கைத்துணையுடன் சலிப்பான அணுகுமுறையை தவிர்த்து மகிழ்ச்சியாக பழக பாருங்கள். நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் செலவு சற்று அதிகமாக இருக்கும் வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் ஓரளவுக்கு இருக்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். ( Today Rasi Palan ) இன்றைய தினம் உங்களுக்கு தடைகளை தாண்டி முன்னேறும் நாளாக இருக்கும். அதிஷ்ட திசை கிழக்கு, அதிர்ஷ்டமான எண் 3, அதிர்ஷ்டமான நிறம் இளம்பச்சை.

ரிஷபம்

ரிஷபம் : இன்றைய தினம் அமைதியுடன் மகிழ்ச்சியுடன் இருக்கப் பாருங்கள். பணியிடத்தில் சக பணியாளர்களிடம் நல்லுறவை பராமரிக்க பாருங்கள் வாழ்க்கைத் துணையுடன் பேசும்போது அமைதியை இழந்து பேசுவீர்கள். நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பண வரவு சற்று குறைந்தே இருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள் உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்ல பாருங்கள் இன்றைய தினம் உங்களுக்கு தெளிவான சிந்தனைகள் தேவைப்படும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு, அதிர்ஷ்டமான எண் 7, அதிர்ஷ்டமான நிறம் இளம் மஞ்சள் நிறம்.

மிதுனம்

மிதுனம் : இன்றைய தினம் உணர்ச்சிவசப்படுவது தவிர்க்கப்பாருங்கள். பணியிடத்தில் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளப் பாருங்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் திறமை உங்கள் கையில்தான் உள்ளது. வாழ்க்கைத் துணையிடம் புரிந்துணர்வு சற்று குறைந்தே இருக்கும் . கணவன் மனைவிக்கு இடையில் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. ( Today Rasi Palan ) நிதி நிலைமை பொருத்தவரைக்கும் இன்று சுமாராக இருக்கும். வியாபாரத்தில் சகவியாபாரிகளின் போட்டிகளை சமாளிக்க தாக இருக்கும். எதிலும் சற்று நிதானத்துடன் செயல்படப்பாருங்கள். இன்றைய தினம் உங்களுக்கு எதிலும் நிதானம் தேவைப்படும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை வடக்கு, அதிர்ஷ்டமான எண் 2, அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு.

கடகம்

கடகம் : இன்றைய தினம் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். பணியிடத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் இன்று கொஞ்சம் அதிகமாக இருக்கும். நிதி நிலைமை பொருத்தவரை நீங்கள் எதிர்பார்த்தபடி இருக்கும் வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமையில் இருப்பவரின் ஆதரவு கிடைக்கும். இன்றைய தினம் உங்களுக்கு யோகமான நாளாக இருக்கும் . அதிர்ஷ்டமான திசை தென்கிழக்கு, அதிர்ஷ்டமான எண் 8, அதிர்ஷ்டமான நிறம் ஊதா.

சிம்மம்

சிம்மம் : இன்றைய தினம் உங்கள் முயற்சியால் வெற்றி கிடைக்கும் நாளாகும். இடத்தில் உங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள் திட்டமிட்டு செய்வதினால் உங்கள் பணி கடினமான பணியும் எளிதாக முடிப்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே நல்ல புரிதல் ஏற்படும். இன்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள் நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் இன்று பண வரவு அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். இன்றையதினம் மொத்தத்தில் கனவு நனவாகும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு, அதிர்ஷ்டமான எண் 1, அதிர்ஷ்டமான நிறம் பழுப்புசிவப்பு

கன்னி

கன்னி : இன்றைய தினம் உங்களுக்கு சாதகமான தினமாக இருக்கும். பணியிடத்தில் இன்று உங்களுக்கு சாதகமாகவும் குறித்த நேரத்தில் உங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வாழ்க்கை துணை இன்று உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவார்கள். நிதி நிலைமை பொருத்தவரைக்கும் பண வரவு சற்று அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள் இன்றைய தினம் உங்களுக்கு தேவைகள் பூர்த்தியாகும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு, அதிர்ஷ்டமான எண் 9, அதிர்ஷ்டமான நிறம் நீலம்.

துலாம்

துலாம் : இன்றையதினம் எதிலும் கவனம் தேவைப்படும் நாளாகும். பணியிடத்தில் நன்மையான பலன்கள் கிடைக்க சற்று காலதாமதம் ஆகும். சகபணியாளர்களின் தொந்தரவு இன்று கொஞ்சம் இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் உணர்ச்சிவசப்படாமல் பேச பாருங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள். நிதிநிலைமை பொருத்தவரைக்கும் இன்று உங்கள் தேவையை பூர்த்தி செய்ய பணம் இருக்காது வியாபாரத்தில் வசூல் சற்று மந்தமாகவே இருக்கும். உத்யோகத்தில் மறதியால் சில பிரச்சனைகள் ஏற்படும் இன்றைய தினம் உங்களுக்கு சற்று நிதானம் தேவைப்படும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை வடக்கு, அதிர்ஷ்டமான எண் 6, அதிஷ்ட மான நிறம் ஆரஞ்சு.

விருச்சிகம்

விருச்சிகம் : இன்று தினம் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள். பணியிடத்தில் பணியிட சூழல்கள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. சக பணியாளர்களிடம் கொஞ்சம் அனுசரித்து செல்லுங்கள் வாழ்க்கை துணையிடம் புரிந்துணர்வு சற்று குறைவாக இருக்கும். நிதி நிலமைபொறுத்த வரைக்கும். பணம் வரவு சற்று குறைவாக இருக்கும் வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்ல பாருங்கள். இன்றைய தினம் உங்களுக்கு நிதானத்துடன் செயல்பட்டு முன்னேறும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமானதிசை மேற்கு, அதிர்ஷ்டமான அதிஷ்ட எண் 4, அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள்.

தனுசு

தனுசு : இன்றைய தினம் நண்பர்களால் ஆதாயம் பெறும் நான் ஆகும். பணியிடத்தில் உங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள் எளிதில் வெற்றி கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் நட்பாக பழகி வீர்கள் இருவருக்கும் இடையே காதல் உணர்வு அதிகமாக இருக்கும். நிதிநிலமைபொறுத்த வரைக்கும் பணம் வரவு நீங்கள் எதிர்பார்த்தபடி இருக்கும் வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.( Today Rasi Palan ) இன்றைய தினம் உங்களுக்கு தொட்டது துலங்கும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை தெற்கு, அதிர்ஷ்டமான எண் 5, அதிர்ஷ்டமான நிறம் இளஞ்சிவப்பு.

மகரம்

மகரம் : இன்றைய தினம் எதிலும் தைரியம் தேவைப்படும் நாளாகும். பணியிடத்தில் பணிச்சுமை சற்று கூடுதலாகவே இருக்கும். திட்டமிட்டுபணிகளை செய்யஇன்று உங்களை அவசியம் தேவை வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சியுடன் பழக பாருங்கள் நிதிநிலமை பொருத்தவரைக்கும் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும் இன்றைய தினம் உங்களுக்கு தடைகளை தாண்டி முன்னேறும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு, அதிர்ஷ்டமான எண் 2, அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை நிறம்.

கும்பம்

கும்பம் : இன்றைய தினம் உங்களுக்கு கடினமான சூழ்நிலையையும் எளிதாக கையாளுவீர்கள். பணியிடத்தில் இன்று நீங்கள் கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத் துணையுடன் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் பழகுவீர்கள். ( Today Rasi Palan ) நிதி நிலமை பொருத்தவரைக்கும் இன்று அதிக பணம் கிடைக்கும் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் விமர்சனங்களை தாண்டி முன்னேறுவீர்கள் இன்றைய தினம் உங்களுக்கு எதிர்பார்ப்பு கள் பூர்த்தியாகும் நாளாகும். அதிர்ஷ்டமான திசை கிழக்கு, அதிர்ஷ்டமான எண் 4, அதிர்ஷ்டமான நிறம் சாம்பல் நிறம்.

மீனம்

மீனம் : இன்றைய தினம் புதிய முடிவுகள் உங்களுக்கு வளர்ச்சியை ஏற்படுத்தி தரவும் பணியிடத்தில் உங்கள் பணிகளை மிக ஆர்வத்துடன் செய்வீர்கள். வாழ்க்கைத் துணையுடன் அணுகுமுறையில் சாந்தமாக இருப்பீர்கள். நிதிநிலைமையை பொருத்தவரைக்கும் பணவரவு நீங்கள் எதிர்பார்த்தபடி இருக்கும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ( Today Rasi Palan ) உத்தியோகத்தில் உங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள் இன்றைய தினம் உங்களுக்கு புதிய மாற்றங்கள் ஏற்படும் நாளாகும். அதிர்ஷ்டமான திசை தெற்கு, அதிர்ஷ்டமான எண் 9, அதிர்ஷ்டமான நிறம் அடர் சிவப்பு.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.