08/03/2022 இன்றைய ராசிபலன் | Today Rasi Palan

 • 08-03-2022 இன்றைய தினம் பிலவ வருடம் மாசி மாதம் 24 ஆம் தேதி, செவ்வாய் கிழமை
 • வளர்பிறை திதி : இன்று அதிகாலை 12:50 வரை பஞ்சமி பிறகு சஷ்டி
 • நட்சத்திரம் : இன்று அதிகாலை 7:52 வரை பரணி பின்பு கிருத்திகை
 • யோகம் : இன்று முழுவதும் சித்தயோகம்
 • நல்லநேரம் : காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை மாலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை
 • கௌரி நல்ல நேரம் : காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை மாலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை
 • ராகுகாலம் : மாலை 3:00 மணி முதல் 4 30 மணி வரை
 • குளிகை : மதியம் 12 மணி முதல் 1:30 மணி வரை
 • எமகண்டம் : காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
 • கரணம் : 7:30 மணி முதல் 9 மணி வரை
 • சூரிய உதயம் : காலை 6:26
 • சூலம் : வடக்கு
 • சந்திராஷ்டமம் : சித்திரை
மேஷம்

மேஷம்: இன்றைய தினம் உங்களுக்கு இறைவழிபாடு மேற்கொண்டால் மன அமைதி கிடைக்கும். பணி இடத்தில் வேலை சுமை அதிகமாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் நட்பான அணுகுமுறையை ( Today Rasi Palan ) கடைபிடிக்கப் பாருங்கள். பண வரவு சற்று குறைந்தே இருக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் உதவி கிடைக்கும். இன்றைய தினம் உங்களுக்கு பேச்சில் நிதானம் தேவைப்படும் நாள். அதிர்ஷ்டமான திசை தெற்கு, அதிர்ஷ்டமான எண் 9, அதிர்ஷ்டமான நிறம் இளஞ்சிவப்பு.

ரிஷபம்

ரிஷபம் : இன்றைய தினம் உங்களுக்கு நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும். நாள். பணியிடத்தில் திட்டமிட்டு வேலை செய்யவும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சாந்தமான அணுகுமுறையை மேற்கொள்ள பாருங்கள் பணவரவு குறைவு ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சில புதுமைகளை செய்வீர்கள் இன்றைய தினம் உங்களுக்கு கூடுதலாக உழைக்கும் நாள். அதிர்ஷ்டமான திசை மேற்கு, அதிர்ஷ்டமான எண் 5, அதிர்ஷ்ட நிறம் இளஞ்சிவப்பு.

மிதுனம்

மிதுனம் : இன்றைய தினம் உங்களுக்கு எதிலும் கவனம் தேவைப்படும் நாள். பணியிடத்தில் திட்டமிட்டு பணிகள் செய்வது நல்லது வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சியாக இருக்கப் பாருங்கள் பணவரவுகள் குறைவு செலவுகள் அதிகம். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை தெரிந்து கொள்வீர்கள் உத்தியோகத்தில் சக பணியாளர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள் இன்றைய தினம் உங்களுக்கு முயற்சியால் முன்னேறும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை தெற்கு, அதிர்ஷ்டமான எண் 1, அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு.

கடகம்

கடகம் : இன்றைய தினம் உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாளாகும். பணியிடத்தில் உங்களுக்கான அங்கீகாரமும் பாராட்டுகளும் இன்று கிடைக்கும். வாழ்க்கைத் துணையிடம் உங்கள் உணர்வுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்வீர்கள். பண வரவு உண்டு தேவைகள் ( Today Rasi Palan ) பூர்த்தியாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள் இன்றைய தினம் உங்களுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும் நாளாகும். அதிர்ஷ்டமான திசை வடக்கு, அதிஷ்ட எண் 6, அதிர்ஷ்டமான நிறம் இளம்பச்சை.

சிம்மம்

சிம்மம் : இன்றைய தினம் உங்களுக்கு முக்கியமான முடிவுகளை துணிந்து எடுக்கும் நாளாகும். பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையிடம் உங்கள் அன்பை பரிமாறிக் கொள்வீர்கள் பணவரவு உண்டு. உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இன்றைய தினம் உங்களுக்கு புதுமை படைக்கும் நாள் ஆகும். அதிர்ஷ்டமான திசை வடக்கு, அதிஷ்ட எண் 7, அதிஷ்ட நிறங்கள் பழுப்பு நிறம்.

கன்னி

கன்னி : இன்றையதினம் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும் நாளாகும். பணியிடத்தில் பணிகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். உங்கள் பணிகளை திட்டமிட்டு செய்வது நல்லது. வாழ்க்கைத் துணையிடம் அமைதியான அணுகுமுறையை மேற்கொள்ள பாருங்கள் பணவரவு குறைவு வியாபாரத்தில் வரவு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் அடுத்தவர்கள் செய்யும் தவறை சுட்டிக் காட்டுவதை தவிர்க்கவும் இன்றைய தினம் உங்களுக்கு விழிப்புணர்வுடன் செயல்படும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை தென் மேற்கு, அதிஷ்டமான எண் 6, அதிர்ஷ்ட நிறம் வெளிர் நீலம்.

துலாம் : இன்றைய தினம் உடல் பயிற்சி மற்றும் தியானம் செய்வதால் மனதிற்கு நன்மையான நாளாகும். பணியிடத்தில் உங்கள் திறமைகளை நிரூபிக்க சில வாய்ப்புகள் கிடைக்கும். ( Today Rasi Palan ) வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது. உங்கள் கையில்தான் உள்ளது வாழ்க்கைத் துணையிடம் நட்பான அணுகு முறையை பின்பற்ற பாருங்கள் செலவு அதிகம் வியாபாரத்தில் புதிய வேலையாட்களை சேர்ப்பீர்கள் உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமடைவீர்கள் இன்றைய தினம் உங்களுக்கு முயற்சியால் முன்னேறும் நாளாக இருக்கும் அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு, அதிர்ஷ்டமான எண் 9, அதிர்ஷ்ட நிறம் இளம் மஞ்சள்.

விருச்சிகம்

விருச்சிகம் : இன்றைய தினம் உங்களுக்கு நல்ல சிறப்பான முன்னேற்றம் இருக்கும். பணியிடத்தில் உங்கள் பணிகள் சிறப்பாக முடிப்பீர்கள். வாழ்க்கைத் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். ( Today Rasi Palan ) பணவரவு உண்டு வியாபாரத்தில் வரவு உயரும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள் இன்றைய தினம் உங்களுக்கு தொட்டது துலங்கும் நாளாகும். அதிர்ஷ்டமான திசை வடக்கு, அதிஷ்டமான எண் 7, அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் நிறம்.

தனுசு

தனுசு: இன்றைய தினம் நீங்கள் அதிக ஆர்வத்துடனும் உற்சாகத்துடன் இருக்கும் நாளாகும். பணியிடத்தில் புதிய பணிக்கான வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் அதிகமாக இருக்கும். பணவரவு உண்டு. வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் கைகூடும். இன்றைய தினம் உங்களுக்கு நினைத்ததை முடிக்கும் நாளாக இருக்கும் . அதிர்ஷ்டமான திசை தெற்கு, அதிர்ஷ்டமான எண் 3, அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் நிறம்.

மகரம்

மகரம் : இன்றைய தினம் அதிகமான சிந்தனைகளை செய்வதைத் தவிர்க்கவும். பணியிடத்தில் உங்கள் பணியை கொஞ்சம் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். வாழ்க்கைத் துணையுடன் கடுமையாக நடந்து கொள்வதை தவிர்த்து விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளப் பாருங்கள். பணவரவு ஓரளவு இருக்கும்படி. வியாபாரத்தில் சில மாற்றங்களைச் செய்வீர்கள் உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவு கிடைக்கும். இன்றைய தினம் சற்று நிதானத்தோடு இருந்து செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை கிழக்கு, அதிர்ஷ்டமான எண் 2, அதிர்ஷ்டமான நிறம் பொன் நிறம்.

கும்பம்

கும்பம் : இன்றைய தினம் உங்கள் மனதில் சில குழப்பங்கள் ஏற்படும் நாளாக இருக்கும். பணியிடத்தில் சில சவால்களை சமாளிப்பீர்கள். வாழ்க்கைத்துணையுடன் தேவையில்லாத பேச்சுகளை தவிர்த்து நிதானத்துடன் செயல்பட பாருங்கள். பணவரவு வரவும் செலவும் இருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும் இன்றைய தினம் திடீர் திருப்பம் ஏற்படும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு,
அதிர்ஷ்டமான எண் 5, அதிர்ஷ்டமான நிறம் பொன்நிறம்.

மீனம்

மீனம் : இன்றைய தினம் நீங்கள் நினைத்ததை முடிப்பீர்கள். பணியிடத்தில் உங்கள் திறமைகளை வெளிக்காட்டி பாராட்டுகளைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் உண்மையாக இருப்பீர்கள். ( Today Rasi Palan ) பணவரவு அதிகம் புதிய தொழில்கள் சிலர் தொடங்குவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இன்றைய தினம் உங்களுக்கு திறமைகள் வெளிப்படும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை வடக்கு, அதிர்ஷ்டமான எண் 6, அதிர்ஷ்டமான நிறம் ஊதா.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.