06/03/2022 இன்றைய ராசிபலன் | Today Rasi Palan

 • இன்றைய தினம் பிலவ வருடம் மாசி மாதம் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை.
 • வளர்பிறை, திதி : இன்று இரவு 11:40 வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி.
 • நட்சத்திரம் : இன்று அதிகாலை 4:38 வரைக்கும் ரேவதி பின்பு அஸ்வினி நட்சத்திரம்.
 • யோகம் : அதிகாலை 6:28 அமிர்தயோகம் பின்பு மரணயோகம்.

( Today Rasi Palan )

 • நல்ல நேரம்: காலை 7:30 முதல் 8 30 வரை மாலை 3:30 முதல் 4:30 வரை
 • கௌரி நல்ல நேரம் : காலை 10:30 முதல் 11:30 வரை
 • ராகு காலம் 4:30 முதல் 6 மணி வரை
 • குளிகை : மாலை 3.00 முதல் 4:30 வரை
 • எமகண்டம் : மதியம் 12 முதல் 1:30 வரை
 • கரணம் :காலை 10 முதல் 12 வரை
 • சூரிய உதயம் காலை 6:27
 • சூலம் :மேற்கு
 • சந்திராஷ்டமம் :உத்திரம்

மேஷம் : ( Today Rasi Palan ) இன்றையதினம் கூடுதல் உற்சாகம் தேவைப்படும் நாள். பணியிடத்தில் கூடுதல் பணிச்சுமை ஏற்படும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பணவரவு சுமாராக இருக்கும். வியாபாரத்தில் தொடர்புடைய முயற்சிகள் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இன்றைய தினம் உங்களுக்கு எதிலும் பொறுமைத் தேவைப்படும் நாள். அதிஷ்டமான திசை: வடக்கு அதிஷ்ட எண் : 9 அதிஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு

ரிஷபம் : இன்றையதினம் எதிலும் சற்று நிதானம் தேவைப்படும் நாள். பணியிடத்தில் வளர்ச்சியான பலன்கள் கிடையாது, பணிச்சுமை கூடுதலாக இருக்கும். உங்கள் பணியில் சில தவறுகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே உறவை பராமரிக்க வெளிப்படையாக பேசுங்கள், கருத்து வேறுபாடுகளை தவிர்க்கவும். பணவரவு சுமாராக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடு அதிகரிக்கும். இன்றையதினம் சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு, அதிர்ஷ்டமான எண்: 5, அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு.

மிதுனம்: இன்றைய தினம் உங்களுக்கு சாதகமான நாள். பணியிடத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். மேல் அதிகாரிகளிடம் இருந்து பாராட்டைப் பெறுவீர்கள். வாழ்க்கை துணையுடன் நல்ல புரிதல் ஏற்படும் நாளாகும். பண வரவு உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். இன்றைய தினம் வெற்றி பெறும் நாள். அதிர்ஷ்டமான திசை: வடக்கு, அதிஷ்ட எண்: 2, அதிஷ்டமான நிறம் : நீலம்

கடகம் : ( Today Rasi Palan ) இன்றைய தினம் உங்களுக்கு லட்சியம் நிறைவேறும். பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கணவன்-மனைவிக்கு நல்ல புரிதல் ஏற்படும். பண வரவு உண்டு. வியாபாரத்தில் உங்கள் முயற்சிகள் எல்லாம் நிறைவேறும். வெளியூர் இருந்து பணவரவு உண்டு. இன்றைய தினம் தேவைகள் பூர்த்தியாகும். அதிர்ஷ்ட திசை : வட மேற்கு அதிஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

சிம்மம் : இன்றையதினம் எதிலும் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியாக பழகுவீர்கள், அதனால் நல்ல புரிதல் ஏற்படும். பண வரவு உண்டு. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் உங்களை தேடி வருவார்கள். இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாள். அதிர்ஷ்டமான திசை : தெற்கு அதிஷ்ட எண் : 4 அதிஷ்ட நிறங்கள் : பொன் நிறம்.

கன்னி : இன்றைய தினம் உங்களுக்கு சாதகமற்ற நாள். பணியிடத்தில் பணிச்சுமை கூடுதலாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் வீண் விவாதம் தவிர்க்கவும். பேச்சில் நிதானம் தேவை. பண விஷயத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். இன்றைய தினம் முன்யோசனை தேவைப்படும் நாள். அதிர்ஷ்டமான திசை :கிழக்கு அதிஷ்ட எண் :2 அதிஷ்ட நிறங்கள் : மஞ்சள்

துலாம் : ( Today Rasi Palan )இன்றைய தினம் உங்களுக்கு சிறப்பான நாள். பணியிடத்தில் குறித்த நேரத்தில் பணிகளை செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்கு இடையே நல்ல புரிதல் ஏற்படும். பணவரவு திருப்தி உண்டாகும். வியாபாரத்தில் அதிரடி திட்டங்களை செய்வீர்கள். புதிய நட்புகள் கிடைக்கும். இன்றைய தினம் அமோகமான நாள். அதிஷ்டமான திசை :தென்கிழக்கு அதிர்ஷ்டமான எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: சந்தன நிறம்

விருட்சிகம்: இன்றைய தினம் உங்களுக்கு திருப்தியான நாள். பணியிடத்தில் உங்கள் பணிகளை சிறப்பாக செய்வீர்கள். வாழ்க்கைத்துணையுடன் உங்கள் தகவல் பரிமாற்றம் சிறப்பாக இருக்கும். பணவரவு உண்டு. வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இன்றைய தினம் கனவு நினைவாகும் நாள். அதிர்ஷ்டமான திசை : வடகிழக்கு அதிர்ஷ்டமான எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

தனுசு: இன்றைய தினம் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள். பணியிடத்தில் பணிகள் கூடுதலாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே பேச்சில் நிதானம் தேவை. பணவரவை கிடையாது. வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். இன்றைய தினம் திறமைகள் வெளிப்படும் நாள். அதிர்ஷ்டமான திசை : கிழக்கு அதிஷ்ட எண் : 8 அதிஷ்ட நிறங்கள் மஞ்சள்

மகரம்: இன்றைய தினம் உங்களுக்கு உற்சாகம் நாள். பணியிடத்தில் சிறப்பான வளர்ச்சி இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே மகிழ்ச்சியாக இருப்பீர்கள் பணவரவு உண்டு. வியாபாரத்தில் சில புதிய திட்டங்களை செய்வீர்கள். இன்றைய தினம் உங்களுக்கு நினைத்தது நடக்கும் நாள். அதிர்ஷ்டமான திசை : தெற்கு அதிர்ஷ்டமான எண் : 6 அதிர்ஷ்டமான நிறம் : பச்சை

கும்பம்: ( Today Rasi Palan )இன்றைய தினம் சிறப்பான வெற்றி கிடைக்கும் நாள். பணியிடத்தில் மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கை துணையுடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். இன்றைய தினம் கனவு நனவாகும் நாள். அதிர்ஷ்டமான திசை: மேற்கு அதிஷ்டமான எண் : 7 அதிர்ஷ்ட நிறம் வெளிர் பச்சை

மீனம்: இன்றைய தினம் எளிதில் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் சக பணியாளர்கள் உதவி கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே நட்பான அணுகுமுறை கையாளுவீர்கள். பண வரவு உண்டு. வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். இன்றைய தினம் உங்களுக்கு சாதனை படைக்கும் நாள். அதிர்ஷ்டமான திசை :தெற்கு அதிர்ஷ்டமான என் : 9 அதிர்ஷ்டமான நிறம் : மஞ்சள்

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published.