இன்றைய ராசிபலன் | Today Rasi Palan | 18-3-2022

இன்றைய ராசிபலன் | Today Rasi Palan | 18-3-2022

18-3-2022 இன்றைய தினம் பிலவ வருடம் பங்குனி மாதம் 4 ம் தேதி வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரம் தேய்பிறை ( Today Rasi Palan )

திதிமாலை 1:48 வரை பவுர்ணமி பின்பு பிரதமை
நட்சத்திரம்அதிகாலை 1:25 வரை பூரம் பிறகு உத்திரம்
யோகம்சித்த யோகம் மற்றும் அமிர்தயோகம்
நல்ல நேரம்மதியம் 12:30 முதல் 1:30 வரை
மாலை 4 மணி முதல் 5 மணி வரை
கௌரி நல்ல நேரம்மதியம் 01:30 மணி முதல் 2:30 மணி வரை
மாலை 06:30 மணி முதல் 07:30 மணி வரை
ராகுகாலம்காலை 10:30 மணி முதல் 12 மணிவரை
குளிகைகாலை 7:30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்மதியம் 3 மணி முதல் 4:30 மணி வரை
கரணம்மதியம் 01:30 மணி முதல் 3 மணி வரை
சூரிய உதயம்காலை 6:21
சூலம்மேற்கு
சந்திராஷ்டமம்அவிட்டம், சதயம்
மேஷம்

மேஷம் இன்றைய தினம் உங்களுக்கு முக்கியமான முடிவுகளை துணிந்து எடுப்பீர்கள். பணியிடத்தில் உங்கள் பணிக்கு அங்கீகாரம் கிடைக்கும். கடினமான பணிகளையும் எளிதாக முடிப்பீர்கள் வாழ்க்கை துணையிடம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இருவருக்கும் இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும் நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணவரவு உண்டு. ( Today Rasi Palan ) வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இன்றைய தினம் உங்களுக்கு முன்னேற்றகரமான நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு, அதிர்ஷ்டமான எண் ஐந்து, அதிர்ஷ்டமான நிறம் சாம்பல் நிறம்.

ரிஷபம்

ரிஷபம் இன்றைய தினம் எதார்த்தமான அணுகுமுறையை கையாளுவீர்கள். பணியிடத்தில் உங்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்வீர்கள் சக பணியாளர்களிடம் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதி நிலைமை பொருத்தவரைக்கும் கூடுதல் பணவரவு உண்டு. வியாபாரத்தில் லாபம் உயரும் உத்தியோகத்தில் சக பணியாளர்கள் உங்களை மதிப்பார்கள். இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை வடக்கு, அதிர்ஷ்டமான எண் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள்.

மிதுனம்

மிதுனம் இன்றைய தினம் உங்களுக்கு யோசித்துச் செயல்பட வேண்டிய நாள், பணியிடத்தில் உங்கள் பணிகளை சிறப்பாக செய்ய திட்டமிடுதல் அவசியம் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்ல பாருங்கள் கோபத்தை தவிர்க்கவும். நிதி நிலைமை பொருத்தவரைக்கும் பணவரவு இல்லை. ( Today Rasi Palan ) வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள் உத்தியோகத்தில் சக பணியாளர்களிடம் ஆதரவாக பேசுங்கள். இன்றைய தினம் உங்களுக்கு திறமைகள் வெளிப்படும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை கிழக்கு அதிர்ஷ்டமான, எண் ஐந்து, அதிர்ஷ்டமான நிறம் சில்வர் நிறம்.

கடகம்

கடகம் இன்றைய தினம் உங்களுக்கு அதிக உற்சாகத்துடன் இருக்கும் நாளாகும். பணியிடத்தில் உங்கள் பணிக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் கடின உழைப்புக்கு இன்று ஊக்கத்தொகை பெறுவீர்கள். வாழ்க்கை துணையிடம் மகிழ்ச்சியாக பழகுவீர்கள் இருவருக்கும் புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலைமை பொருத்தவரைக்கும் எந்தவித தடைகளும் இன்றி பணவரவு உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள் உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இன்றைய தினம் உங்களுக்கு திடீர் திருப்பங்கள் ஏற்படும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை-தெற்கு, அதிர்ஷ்டமான எண் 6 , அதிர்ஷ்டமான அடர்பச்சை.

சிம்மம்

சிம்மம் இன்றைய தினம் பொறுமை தேவைப்படும் நாளாக இருக்கும். பணியிடத்தில் சிறப்பாக பணியை செய்ய திட்டமிடுதலும் பொறுமையும் அவசியம். வாழ்க்கை துணையிடம் கருத்துவேறுபாடு ஏற்படுவதால் நிதானமாக பேசவேண்டும். ( Today Rasi Palan ) நிதி நிலைமையை பொறுத்த வரைக்கும் பணம் வரவு சற்று குறைந்தே இருக்கும். வியாபாரத்ததில் போட்டிகளைத் தாண்டி ஓரளவு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வீர்கள். இன்றைய தினம் உங்களுக்கு தடைகளை தாண்டி முன்னேறும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு, அதிர்ஷ்டமான எண் 9, அதிர்ஷ்டமான நிறம் அடர்பச்சை.

கன்னி

கன்னி இன்றைய தினம் உங்களுக்கு எதிர்பாராத சில தடைகள் ஏற்படும். பணியிடத்தில் கவனமாக செயல்படுங்கள். யாரிடமும் கோபத்தை வெளிக் காட்டாதீர்கள் கேட்டல் வாழ்க்கை துணையுடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். நிதி நிலைமையை பொறுத்த வரைக்கும் பணம் வரவு சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சில மாற்றங்களை ஏற்படுத்தும். இன்றைய தினம் உங்களுக்கு தடைகளை தாண்டி முன்னேறும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை கிழக்கு, அதிர்ஷ்டமான எண் 4, அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள்.

துலாம்

துலாம் இன்றைய தினம் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. பணியிடத்தில் உங்கள் பணிக்கான முன்னேற்றத்திற்கு கூடுதல் கவனம் தேவை. வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இருவரும் லேசாக எடுத்துக் கொள்ளுங்கள் நிதி நிலைமையை பொறுத்த வரைக்கும். ( Today Rasi Palan ) செலவுகளை குறைக்கவும் வியாபாரத்தில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். உத்தியோகத்தில் வேலைகளை கவனமாக செய்யுங்கள் இன்றைய தினம் உங்களுக்கு கடமை உணர்வுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை கிழக்கு, அதிர்ஷ்டமான எண் 5, அதிர்ஷ்டமான நிறம் வெளிர் நீலம்.

விருச்சிகம்

விருச்சிகம் இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணிக்கான பாராட்டுகளையும் பெறுவீர்கள். வாழ்க்கைத்துணையுடன் இன்று சிறப்பாக பொழுதைக் கழிப்பீர்கள். இருவருக்கும் இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணவரவு உண்டு. ( Today Rasi Palan ) வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களை மதிப்பார்கள் இன்றைய தினம் உங்களுக்கு முன்னேற்றகரமான நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை தெற்கு, அதிர்ஷ்டமான எண் 4, அதிர்ஷ்டமான நிறம் வெளிர் நீலம்.

தனுசு

தனுசு இன்றைய தினம் உங்கள் திறமையை வெளிப்படுத்தும் நாளாகும். பணியிடத்தில் வெற்றி பெறுவீர்கள் பணியிட சூழலும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கணவன்-மனைவிக்கிடையே நல்லுறவு நீடிக்கும் இருவரும் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள். நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணவரவு உண்டு. ( Today Rasi Palan ) வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள்.
உத்தியோகத்தில் அமைதியான சூழல் நிலவும் இன்றைய தினம் உங்களுக்கு உயர்வான நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை வடக்கு, அதிர்ஷ்டமான எண் 6, , அதிர்ஷ்டமான நிறம் பச்சை.

மகரம்

மகரம் இன்றைய தினம் எதிர்காலத்திற்காக திட்டமிடுவீர்கள். பணியிடத்தில் குறித்த நேரத்தில் வேலை செய்து முடிப்பதை கடினமாக உணருவீர்கள். அவசரமமில்லாமல் திட்டமிட்டு செயல்படுங்கள். வாழ்க்கை துணையிடம் உங்கள் கருத்துக்களை மென்மையாக சொல்ல பாருங்கள். நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் எதிர்பாராத செலவுகள் ஏற்படும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் வருகை சற்று குறையும் உத்தியோகத்தில் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். இன்றைய தினம் உங்களுக்கு எதிலும் கவனம் மற்றும் நிதானம் தேவைப்படும் நாள் ஆகும். அதிர்ஷடமான திசை கிழக்கு, அதிர்ஷ்டமான எண் 5, அதிர்ஷ்டமான நிறம் பொன் நிறம்.

கும்பம்

கும்பம் இன்றைய தினம் உங்களுக்கு நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும். பணியிடத்தில் சக பணியாளர்களிடம் கொஞ்சம் அனுசரித்து செல்ல பாருங்கள். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால். நிதானத்தை கடைபிடியுங்கள் நிதி நிலைமை பொறுத்த வரைக்கும். ( Today Rasi Palan ) பணம் வரவு சற்று குறைவு வியாபாரத்தில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். இன்றைய தினம் உங்களுக்கு கடினமான உழைப்பு தேவைப்படும் நாளாகும். அதிர்ஷ்டமான திசை வடக்கு, அதிர்ஷ்டமான எண் 1, அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு.

மீனம்

மீனம் : இன்றைய தினம் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் வாய்ப்புகள் தேடிவரும் கிடைக்கும். வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள் இருவருக்கும் இடையே புரிந்துணர்வு சரியாக இருக்கும். நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணவரவு உண்டு. வியாபாரத்தில் லாபம் உயரும் உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களை நம்பி சில பொறுப்புகளை தருவார்கள். இன்றைய தினம் உங்களுக்கு தொட்டது துலங்கும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை வடமேற்கு, அதிர்ஷ்டமான எண் 5, அதிர்ஷ்ட நிறம் சாம்பல் நிறம்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.