இன்றைய ராசிபலன் | Today Rasi Palan | 16/03/2022

இன்றைய ராசிபலன் | Today Rasi Palan | 16/03/2022

16-3-2022 இன்றைய தினம் பிலவ வருடம் பங்குனி மாதம் 2ஆம் தேதி புதன்கிழமை. ( Today Rasi Palan )

வளர்பிறை, பிரதோஷம்,
திதி
இன்று பிற்பகல் 1:55 வரை திரியோதசி பின்பு சதுர்த்தசி
நட்சத்திரம்இன்று இரவு 11:37 வரை ஆயில்யம் பின்பு மகம்
யோகம்இன்று முழுவதும் சித்தயோகம்
நல்ல நேரம்காலை 09:30மணி முதல் 10:30 மணி வரை
மாலை 4:30மணி முதல் 5:30 மணி வரை
கௌரி நல்ல நேரம்காலை 1:30 மணி முதல் 2 30 மணி வரை
மாலை 06:30 மணி முதல் 07:30 மணி வரை
ராகுகாலம்மதியம் 12 மணி முதல் 1:30 மணி வரை
குளிகைகாலை 10:30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்காலை 07:30 மணி முதல் 9 மணி வரை
கரணம்காலை 06:00 மணி முதல் 07:30 மணி வரை
சூரிய உதயம்காலை 6:23
சூலம்வடக்கு
சந்திராஷ்டமம்உத்திராடம், திருவோணம்
மேஷம்

மேஷம் இன்றைய தினம் ஆன்மீக ஈடுபட்டால் மேன்மை அடையும் நாளாகும். பணியிடத்தில் வேலை சுமை சற்று அதிகமாக இருக்கும். சக ஊழியரிடம் அனுசரித்துப் போவது நல்லது. வாழ்க்கை துணையிடம் நட்புடன் பழக பாருங்கள். நிதி நிலைமையை பொருத்த வரைக்கும் பண வரவு சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். ( Today Rasi Palan ) வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் உங்களை தேடி வருவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இன்றையதினம் உங்களுக்கு நிதானத்துடன் இருந்து வெற்றிபெறும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை கிழக்கு, அதிர்ஷ்டமான எண் 9, அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.

ரிஷபம்

ரிஷபம் இன்றைய தினம் அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள். பணியிடத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும் . உங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வாழ்க்கை துணையிடம் சமநிலையுடன் பழகுவீர்கள் இருவருக்கும் இடையே புரிந்துணர்வு அதிகமாக இருக்கும். நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணவரவு உண்டு. வியாபாரத்தில் திடீர் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளைச் சிறப்பாக முடிப்பீர்கள். ( Today Rasi Palan ) இன்றைய தினம் உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு, அதிர்ஷ்டமான எண் 6, அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை.

மிதுனம்

மிதுனம் இன்றையதினம் எதிலும் வெற்றி அடையும் நாள். பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் தேடிவரும் அனைத்திலும் வெற்றி அடைவீர்கள். வாழ்க்கை துணையிடம் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். நிதி நிலைமையை பொருத்த வரைக்கும் பணவரவு உண்டு. எதிர்காலத்திற்காக சேமிப்பீர்கள். ( Today Rasi Palan ) வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். அதிஷ்டமான திசை மேற்கு, அதிர்ஷ்டமான எண் 5, அதிர்ஷ்டமான நிறம் சாம்பல் நிறம்.

கடகம்

கடகம் இன்றைய தினம் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் பணி சுமை அதிகமாக இருந்தாலும் சக ஊழியர்களின் ஆதரவால் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வாழ்க்கை துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இருவருக்கும் இடையே புரிந்துணர்வு அதிகமாக இருக்கும். நிதி நிலைமை பொருத்தவரைக்கும் பணவரவு உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை எல்லாம் தீரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். இன்றைய தினம் உங்களுக்கு உயர்வான நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை வடக்கு, அதிர்ஷ்டமான எண் 2, அதிர்ஷ்டமான நிறம் நீலம்.

சிம்மம்

சிம்மம் இன்றைய தினம் விழிப்புணர்வு தேவைப்படும் நாளாகும். பணியிடத்தில் அதிக வேலைப்பளுவை சுமையாக உணர்வீர்கள். வாழ்க்கை துணையிடம் உணர்ச்சிவசப்படுவது தவிர்த்து அமைதியான போக்கை கடைபிடிக்கவும். நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் வரவுசெலவு இரண்டுமே சமமாக இருக்கும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. இன்றைய தினம் உங்களுக்கு இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை வடமேற்கு, அதிர்ஷ்டமான எண் 5, அதிர்ஷ்டமான நிறம் இளஞ்சிவப்பு.

கன்னி

கன்னி இன்றைய தினம் பதற்றமான சூழல் சூழல்களை தவிர்த்து அமைதியான பேச்சைக் கடைப் பிடியுங்கள். பணியிடத்தில் உங்கள் பணிகளை செய்வதில் சில தடங்கல்கள் ஏற்படும். அதனால் திட்டமிட்டு பணிகளை செய்ய பாருங்கள். வாழ்க்கைத் துணையுடன் உங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவதை நகைச்சுவையுடன் வெளிப்படுத்துங்கள். ( Today Rasi Palan ) நிதி நிலைமை பொருத்தவரைக்கும் தேவையில்லாத செலவுகள் வரும் வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். இன்றைய தினம் உங்களுக்கு முயற்சியால் முன்னேறும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை தெற்கு, அதிர்ஷ்டமான எண் 6, அதிர்ஷ்டமான நிறம் சாம்பல் நிறம்.

துலாம்

துலாம் இன்றைய தினம் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். இடத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும் புதிய வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. வாழ்க்கை துணையிடம் புரிதல் இன்று அதிகமாக இருக்கும். இருவருக்கும் அன்யோன்யம் அதிகரிக்கும் நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணவரவு உண்டு. வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். இன்றையதினம் உங்களுக்கு நிறைவான நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை தென்கிழக்கு, அதிர்ஷ்டமான எண் 9, அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் நிறம்.

விருச்சிகம்

விருச்சிகம் : இன்றைய தினம் மன உறுதியுடனும் தன்னம்பிக்கையுடன் இருக்கும் நாள். பணியிடத்தில் உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத்துணையிடம் மகிழ்ச்சியாக பழகுவீர்கள். இருவருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு இருக்கும். ( Today Rasi Palan ) நிதி நிலைமையை பொருத்த வரைக்கும் பணவரவு உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை வடக்கு, அதிர்ஷ்டமான எண் 1, அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு.

தனுசு

தனுசு : இன்றைய தினம் பதட்டமான சூழ்நிலை தவிர்த்து நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். பணியிடத்தில் பணிச்சுமை சற்று கூடுதலாக இருக்கும். நிதி நிலைமையை பொருத்த வரைக்கும் இன்று பணவரவு சுமாராக இருக்கும். வியாபாரத்தில் மந்த தன்மை குறையும் உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். ( Today Rasi Palan ) இன்றைய தினம் உங்களுக்கு முயற்சியால் முன்னேறும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை மேற்கு, அதிஷ்ட எண் 3, அதிஷ்ட நிறம் மஞ்சள்.

மகரம்

மகரம் : இன்றைய தினம் முக்கியமான முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். பணியிடத் தில் உங்கள் பணிக்கான பாராட்டுகள் கிடைக்காது. பணியில் கவனம் தேவை. வாழ்க்கைதுணையுடன் நட்பாக பழகுகிறார்கள் இருவருக்கும் இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணம் வரவு கிடையாது. வியாபாரத்தில் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத் தில் அதிகாரிகளால் நீங்கள் அலைக்கழிக்கப் பட வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் கிடைக்கும். இன்றையதினம் எதிலும் கவனம் தேவைப்படும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை தெற்கு, அதிஷ்ட எண் 8 ,அதிர்ஷ்டமான நிறம் நீலம்.

கும்பம்

கும்பம் : இன்றைய தினம் அதிக மனஉறுதி நிறைந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் பணிகளை எளிதாக செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத் துணையிடம் நகைச்சுவை உணர்வுடன் பழகுவீர்கள். நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் உங்கள் சேமிப்பு உயரும். வியாபாரத்தில் பங்குதாரர்களில் பிரச்சினைகள் எல்லாம் தீரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும் இன்றைய தினம் உங்களுக்கு நிறைவான நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை வடக்கு, அதிர்ஷ்டமான எண் 7, அதிர்ஷ்டமான நிறம் பழுப்பு நிறம்.

மீனம்

மீனம் : இன்றைய தினம் நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பணியிடத்தில் பணி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வாழ்க்கை துணையிடம் மகிழ்ச்சியான அனுபவங்களை பகிர்ந்து கொள்வீர்கள். நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணவரவு உண்டு. உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். இன்றைய தினம் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை தெற்கு, அதிர்ஷ்டமான எண் 4, அதிர்ஷ்டமான நிறம் ரோஸ்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.