இன்றைய ராசிபலன் | Today Rasi Palan | 15/03/2022

இன்றைய ராசிபலன் | Today Rasi Palan | 15/03/2022

15-03-2022 இன்றையதினம் பிலவ வருடம் பங்குனி மாதம் 1 ஆம் தேதி செவ்வாய்கிழமை. ( Today Rasi Palan )

வளர்பிறை, பிரதோஷம்,
திதி
இன்று மதியம் 1:08 வரை துவாதசி பின்பு திரயோதசி
நட்சத்திரம்இன்று இரவு 11:37 வரை ஆயில்யம் பின்பு மகம்
யோகம்இன்று முழுவதும் சித்தயோகம்
நல்ல நேரம்காலை 007:30 மணி முதல் 8:30 மணி வரை
மாலை 04:30 மணி முதல் 05:50 மணி வரை
கௌரி நல்ல நேரம்காலை 1:30 மணி முதல் 2:30 மணி வரை
மாலை 04:30 மணி முதல் 6:00 மணி வரை
ராகுகாலம்ராகுகாலம் மதியம் 3 மணி முதல் 4:30 மணி வரை
குளிகைமதியம் 12 மணி முதல் 1:30 மணி வரை
எமகண்டம்காலை 9 மணி முதல் 10:30 மணி வரை
கரணம்காலை 07:30 மணி முதல் 9 மணி வரை
சூரிய உதயம்காலை 6:23
சூலம்வடக்கு
சந்திராஷ்டமம்பூராடம், உத்திராடம்
மேஷம்

மேஷம் இன்றையதினம் முக்கியமான முடிவுகளை தவிர்ப்பது நல்லதாகும். பணியிடத்தில் உங்கள் பணிகளை செய்வதற்கு கடினமாக உணருவீர்கள். வாழ்க்கைத் துணையிடம் அகந்தையான பேச்சை தவிர்ப்பது நல்லது. ( Today Rasi Palan ) நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணவரவு சற்று குறைவு வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றியடையும். இன்றையதினம் உங்களுக்கு உழைப்பால் உயரும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு, அதிர்ஷ்டமான எண் 5, அதிர்ஷ்ட நிறம் சாம்பல் நிறம்.

ரிஷபம்

ரிஷபம் இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். வாழ்க்கை துணையிடம் மகிழ்ச்சியாக பழகுவீர்கள் இருவருக்குமிடையில் புரிதல் அதிகமாக இருக்கும். நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணவரவு உண்டு. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். இன்றைய தினம் உங்களுக்கு தேவைகள் பூர்த்தியாகும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை தென்கிழக்கு, அதிஷ்ட எண் 1, அதிஷ்ட நிறம் சிவப்பு.

மிதுனம்

மிதுனம் இன்றைய தினம் எதிலும் பொறுமைத் தேவைப்படும் நாள் ஆகும். பணியிடத்தில் மன உளைச்சல் ஏற்படும் கூடுதல் பொறுப்புகள் ஏற்க நேரிடும். வாழ்க்கை துணையிடம் அழுத்தமான உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள்.( Today Rasi Palan ) நிதி நிலைமை பொருத்தவரைக்கும் பணவரவு குறைவு. வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் தேவை இன்றைய தினம் உங்களுக்கு விடாமுயற்சி தேவைப்படும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமானடமான திசை கிழக்கு, அதிஷ்டமான எண் 7, அதிர்ஷ்டமான நிறம். மஞ்சள்

கடகம்

கடகம் இன்றைய தினம் உணர்ச்சிவசப்படுவது தவிர்த்து அமைதியான போக்கை கையாளுங்கள். பணியிடத்தில் வேலை சுமை அதிகமாக இருக்கும் சகப்பணியாளர்களிடம் வீண் விவாதத்தை தவிர்க்கவும். வாழ்க்கைத்துணையுடன் வீண் விவாதம் வந்து போகும். உணர்ச்சிவசத்தஐ தவிர்க்கவும். நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணவரவு சுமாராக இருக்கும். பணத்தை தக்க வைக்கவும். இன்றைய தினம் உங்களுக்கு நிதானத்துடன் செயல்பட்டு முன்னேறும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை தெற்கு, அதிர்ஷ்டமான எண் 6, அதிர்ஷ்டமான நிறம் நிலம் நீலம்.

சிம்மம்

சிம்மம் இன்றைய தினம் அதிர்ஷ்டத்தின் மேல் நம்பிக்கையை வைப்பது தவிர்த்து உங்கள் உழைப்பின் மீது நம்பிக்கை வைக்கும் நாளாகும். பணியிடத்தில் பணியிட சூழல் அவ்வளவு நன்றாக இருக்காது. பணியிடத்தில் வேலை சுமை அதிகமாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் நிதானத்தை கையால பாருங்கள் பேச்சில் நிதானம் தேவை நிதி நிலைமை பொருத்தவரைக்கும் பணவரவு ஓரளவு இருக்கும். ( Today Rasi Palan ) பணத்தை சிக்கனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் போட்டிகள் சற்று குறையும் இன்றைய தினம் உங்களுக்கு விழிப்புணர்வு தேவைப்படும் நாளாக இருக்கும். அதிஷ்டமான திசை, வடகிழக்கு அதிர்ஷ்டமான எண் 4, அதிஷ்ட நிறம் வெளிர் நீலம்.

கன்னி

கன்னி இன்றைய தினம் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். பணியிடத்தில் பணியிட சுழல்கள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். இன்று நல்ல பெயர்களை எடுப்பீர்கள். வாழ்க்கைத் துணையுடன் நல்ல புரிதல் ஏற்படும் இருவருக்கும் இடையே புரிந்துணர்வு இன்று அதிகமாக இருக்கும். நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணவரவு உண்டு வியாபாரத்தில் வேலையாட்கள் கடமை உணர்வோடு செயல்படுவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள். இன்றைய தினம் உங்களுக்கு மதிப்பு கூடும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை வடக்கு, அதிர்ஷ்டமான எண் 1, அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள்.

துலாம்

துலாம் இன்றைய தினம் மகிழ்ச்சியான சூழல் நிலவும் நாளாகும். பணியிடத்தில் உங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அனைவரிடமும் நன்மதிப்பை பெறுவீர்கள். வாழ்க்கை துணையிடம் இன்று மகிழ்ச்சிகரமாக பழகுவீர்கள் இருவருக்கும் புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் பணம் வரவு உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். இன்றைய தினம் உங்களுக்கு திடீர் யோகம் கிட்டும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை வடக்கு, அதிர்ஷ்டமான எண் 9, அதிர்ஷ்ட நிறம் கருஞ்சிவப்பு.

விருச்சிகம்

விருச்சிகம் : இன்றைய தினம் உணர்ச்சிவசப்படுவது தவிர்த்து பொறுமையுடனும் நிதானத்துடனும் செயல்படப்பாருங்கள். பணியிடத்தில் உங்கள் பணியில் கவனத்துடன் செயல்பட பாருங்கள் பணி சுமை அதிகமாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து மோதல் ஏற்படும். அவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள பாருங்கள். நிதி நிலைமையை பொறுத்த வரைக்கும் பணம் வரவு குறைவு. வியாபாரத்தில் புதிய வேலையாட்கள் அமைவார்கள் உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு சற்று குறைவாக கிடைக்கும். இன்றைய தினம் உங்களுக்கு நிதானம் தேவைப்படும் நாளாக இருக்கும்.( Today Rasi Palan ) அதிர்ஷ்டமான திசை மேற்கு, அதிர்ஷ்டமான எண் 4, அதிர்ஷ்டமான நிறம் இளஞ்சிவப்பு.

தனுசு

தனுசு : இன்றைய தினம் ஆன்மீக வழிபட்டால் மன நிம்மதி அடையும் நாளாகும். பணியிடத்தில் வேலை சுமை சற்று அதிகமாக இருக்கும். உங்கள் பணிகளை திட்டமிட்டு செய்யப் பாருங்கள். வாழ்க்கை துணையிடம் அமைதியான அணுகுமுறையை கையாள பாருங்கள். நிதி நிலைமை பொருத்தவரைக்கும் செலவுகள் இன்று அதிகமாக இருக்கும். பணம் வரவு சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும் . இன்றைய தினம் உங்களுக்கு இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை-தெற்கு, அதிர்ஷ்டமான எண் 8, அதிர்ஷ்டமான நிறம் சந்தன நிறம்.

மகரம்

மகரம் : இன்றைய தினம் எதிலும் சற்று நிதானம் தேவைப்படும் நாள் ஆகும். பணியிடத்தில் உங்கள் பணிகளை உற்சாகத்துடன் செய்யப் பாருங்கள். பணியிட சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்காது. கணவன் மனைவிக்கு இடையே வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.. நிதி நிலைமை பொருத்தவரைக்கும் இன்று பணவரவு சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். வியாபாரத்தில் பணியாளர்கள் மற்றும் பங்குதாரர்களால் சில சங்கடங்களை சந்திக்க நேரிடும். இன்றைய தினம் உங்களுக்கு மன அமைதி தேவைப்படும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை கிழக்கு, அதிர்ஷ்டமான எண் 3, அதிஷ்ட நிறம் மஞ்சள்.

கும்பம்

கும்பம் : இன்றைய தினம் நிதானத்துடன் இருந்து வெற்றி அடைய முயற்சி செய்யுங்கள். பணியிடத்தில் வளர்ச்சி இன்று சற்று குறைவாக இருக்கும். உங்கள் பணிகளை திட்டமிட்டு செய்யப் பாருங்கள். வாழ்க்கை துணையிடம் நட்பான அணுகுமுறையை கையாள பாருங்கள். ( Today Rasi Palan ) நிதி நிலைமை பொருத்தவரைக்கும் பணம் வரவு சற்று குறைவாக இருக்கும். வியாபாரம் இன்று சற்று குறைவாகவே இருக்கும். உத்தியோக பணியில் சிலர் நுட்பமாக செயல்பட்டு பாராட்டுகளைப் பெறுவீர்கள். இன்றைய தினம் உங்களுக்கு முயற்சியால் முன்னேறும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை கிழக்கு, அதிர்ஷ்டமான எண் 7 , அதிர்ஷ்ட நிறம் பச்சை.

மீனம்

மீனம் : இன்றைய தினம் உங்களுக்கு நன்மை தீமை இரண்டும் கலந்த பலன்களே கிடைக்கும். பணியிடத்தில் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. வாழ்க்கை துணையிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் தேவையில்லாத செலவுகளை குறைக்கவும். பணவரவு சுமாராக இருக்கும். வியாபரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகமாக கிடைக்கும் இன்றைய தினம் உங்களுக்கு தடைகளை தாண்டி முன்னேறும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டமானச திசை கிழக்கு, அதிர்ஷ்டமான எண் 9, அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.