அமேசான் | Amazon | Tamil Page
அமேசான் | Amazon | Tamil Page
அமேசான் நிறுவனமானது உலகளாவிய இணையதள அங்காடி ஆகும் இந்த அமேசான் இணையதளம் 1994 ஆம் ஆண்டு துவங்கி 1995 ஆம் ஆண்டு செட் பிரீ பி பிசாசு அவரால் வெளியிடப்பட்டது. அமேசான் நிறுவனமானது அமெரிக்கா நாட்டில் சியாட்டல் வாஷிங்டன் எனுமிடத்தில் அமைந்துள்ளது.

அமேசான் இணையதளம் முதலில் புத்தகங்களை விற்பனை செய்து வந்தது. அதற்கு காரணம் முதலில் நமது இணையதளத்தில் எந்த பொருளை விற்கலாம் என்பது குறித்து மிகப்பெரிய ஆலோசனைக்குப் பிறகு புத்தகங்களை விற்கலாம் என்ற முடிவுக்கு வந்தார்.
ஏனெனில் அமெரிக்க மக்கள் புத்தகங்களை படிப்பதற்கு ஆர்வம் காட்டி கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து, இந்த இணையதளத்தில் புத்தகங்களை விற்க ஆரம்பித்தார். பிறகு பொருட்களை விற்பனை செய்வதன் முக்கியத்துவத்தை அறிந்து பலதரப்பட்ட பொருட்களை தற்போது வரை விற்பனை செய்து வருகிறது. அமேசான் உலக நாடுகளில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கின்றது.
இணையதளம் மூலம் பொருட்களை மக்களுக்கு விற்க வேண்டுமென்றால் முதலில் பிராண்டிங் என்பது மிக மிக முக்கியம் என்பதை உணர்ந்த இவர் உலகிலேயே மிக பெரிய நதியான அமேசான் பெயரை தனது இணையதளத்திற்கு சூட்டினார்.
இதற்கு அர்த்தம் உலகிலேயே அமேசான் நிறுவனம் மிகப்பெரிய இணையதளம் என்பதை வெளிப்படுத்தும் வகையாக அமைத்தார். இதன் லோகோவில் உள்ள A மற்றும் Z இடையில் ஒரு அம்புக்குறி இருக்கும். இதற்கு அர்த்தம் அமேசான் இணையதளத்தில் அனைத்து வகையான பொருட்களும் கிடைக்கும் என்பதாகும், அதாவது A to Z வரை அனைத்து பொருட்களும் கிடைக்கும் என்பதாகும்.
2020ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் வருமானமானது 386.06 பில்லியன் ஆகும். இந்த நிறுவனத்தில் பணிபுரியும் வேலையாட்கள் ஏறக்குறைய 14,68,000 ஆகும்.
Amazon : | http://www.amazon.com |
Amazon India : | https://www.amazon.in |
Recent Comments