மார்ச் 20 உலக சிட்டுக்குருவி நாள்

சிட்டுக்குருவி தினம் மார்ச் 20 அன்று விமர்சையாக உலகமெங்கும் சமூக ஆர்வலர்கள் மூலமாக பெரிதும் கொண்டாடப்படுகிறது.

இந்த தினம் சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் நோக்கத்தோடு மற்றும் சிட்டுக் குருவிகளைப் பற்றி விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையிலும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

உலக சிட்டுக்குருவி நாள்

சிட்டுக்குருவிகள் மிகவும் ஒரு அற்புதமான பறவையினம் இந்த பறவை இனத்தின் மூலமாக உணவுச் சங்கிலி மிகவும் சீராக உள்ளது. இந்த சிட்டுக்குருவி சிறிய பூச்சிகளை கொசுக்கள் போன்றவற்றை உண்டு வாழ்கிறது.

இவை பெரும்பாலும் மனிதர்கள் வாழும் பகுதிகளிலேயே அதிகமாக காணப்படும் காரணம் உணவு தானியங்கள் எளிமையாக கிடைக்கும் பகுதிகளிலும், பூச்சிகள் மற்றும் கொசுக்கள் போன்றவை இருக்கும் இடங்களை தேர்வு செய்து அந்த இடத்திற்கு இடப்பெயர்ச்சி ஆகிறது.

பெரும்பாலும் இந்த வகை பறவைகள் தினை போன்ற தானியங்களை விரும்பி உண்ணும் மேலும் இது வீடுகளின் சுவர்களில் உள்ள சிறிய பொந்துகள் போன்ற இடைவெளிகளில் பெரும்பாலும் வசித்து வருகிறது.

இந்த தினம் 2010ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது, இதன் முக்கிய நோக்கமாக “வீட்டு சிட்டுக்குருவிகளை பாதுகாப்போம்”

நாம் அன்றாட பயன்படுத்தும் அறிவியல் தொழில்நுட்பங்கள் மூலமாக இயற்கை வளங்கள் மற்றும் பலவகையான ஜீவராசிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. இதில் முக்கியமாக சிட்டுக்குருவிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது.

இவைகள் நாம் கண்ணுக்கு தெரியாத வண்ணம் நடந்து கொண்டிருக்கிறது. இவற்றையெல்லாம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த சிறிய உயிரினத்தை பாதுகாக்கவும் இந்த நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நாளன்று இந்த உயிரினங்களை பற்றி பேசுவதோடு மட்டுமல்லாமல் அதற்காக சில வழிமுறைகளை நாம் கடைபிடித்து வந்தால் நமது இயற்கை வளங்கள் மற்றும் உணவுச்சங்கிலி போன்ற இயற்கை சார்ந்த விஷயங்கள் நமக்கு அடுத்துவரும் சந்ததியினர் களுக்கு தூய்மையாக கொண்டு செல்லவும் முடியும்.

  • இந்த சிட்டுக்குருவிகளுக்கு நாம் செய்ய வேண்டியவை தினமும் உணவு தானியங்களை வீட்டு வாசல்களில், வீட்டின் மொட்டை மாடியில், தோட்டம் ஆகியவற்றில் வைத்து உண்ண செய்யலாம்.
  • மேலும் வெயில் காலங்களில் ஒரு சிறிய பாத்திரத்தில் தினமும் தண்ணீர் வைத்து அவர்களின் தாகத்தைத் தீர்க்கலாம்.
  • ஒரு சிறிய பானை சுவற்றில் வைத்து அதற்கு தங்கும் இடத்தை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.

இதுபோன்ற சிறிய உதவிகளை நாம் இந்த உயிர்களுக்கு செய்யும் பொழுது அவள் அவைகள் மிக சிறப்பாக ரூம் சிறப்பாகவும் சந்தோஷமாக வாழ்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.