நவராத்திரி கொலு பற்றிய சிறந்த தகவல் | Tamil Page

நவராத்திரி கொலு பற்றிய சிறந்த தகவல்

நவம் என்பது ஒன்பது என்கின்ற எண்ணை  குறிக்கின்றது  என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் அல்லது வழிபடப்படும் ஒரு பண்டிகையைப் பற்றி தான் நாம் இப்பொழுது இங்கு காணவிருக்கிறோம்.

நவராத்திரி

மனிதனின் வாழ்க்கைக்கு மிக முக்கியமான முப்பெரும் பொருள்களை வழிபடும் விழாவே  நவராத்திரி ஆகும்.  முப்பெரும் பொருட்களான கல்வி, செல்வம், வீரம் ஆகியவற்றை போற்றுகின்ற பெரும் விழாவாக நவராத்திரி திகழ்கின்றது. நவராத்திரியானது இந்தியாவின் அனைத்து பகுதியிலும் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான விழா. வட இந்தியாவில் நவராத்திரி தசரா என்ற பெயருடன் கொண்டாடப்படுகிறது.

நவராத்திரியும் நம்பிக்கையும்

இச்சை, ஞானம், கிரியா ஆகிய மூன்றும் பெரும் சக்திகளாக கருதப்பட்டது. இறைவன் உலகத்தை உருவாக்க எண்ணியபோது இச்சை என்ற சக்தி உருவாக்கியதாகவும் அந்த இச்சை சக்தி எவ்வாறு உண்டாகிறது என்று அறிய விரும்பிய இறைவன் ஞான சக்தியை கண்டறிந்ததாகவும் இந்த உலகத்தை கிரியா என்ற சக்தியை கொண்டு உருவாக்கியதாகவும் முன்னோர்கள் கருதினர்.

நவராத்திரி

இச்சை என்றால் விருப்பம் அல்லது ஆசை என்று பொருள்படும். ஞானம் என்றால் அறிவு ஆகும். கிரியா என்பதே ஆக்கள் அல்லது செய்தல் என்பதை உணர்த்துகிறது. உலகத்தை உருவாக்க விரும்பிய இறைவனுக்காக நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் இச்சை சக்தி  அதாவது துர்க்கையை தொழுகின்றனர். அடுத்த மூன்று நாட்களும் ஞானத்தின் அதிபதியான லட்சுமியை வணங்குகின்றனர்.கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியை தொழுகின்றனர்.

நவராத்திரி நாட்கள்

ஒன்பது நாட்களும் கல்வியின் அதிபதி, வீரத்தின் அதிபதி, செல்வத்தின் அதிபதி ஆகிய தெய்வங்களை வணங்கின்றனர். தமிழ் மாதத்தில் ஆறாவது மாதம் புரட்டாசி. அந்த மாதத்தில் வரும் அமாவாசையை மகாளய அமாவாசை என்று அழைப்பர். புரட்டாசி மாதத்தில் வரும் பிரதமை திதியை அடுத்து வரும் பத்து நாட்களில்தான் நம் முன்னோர் கொலு வைத்தனர்.

நவராத்திரி

அதுவே இன்றும் பின்பற்றப்படுகிறதுமுதல் மூன்று நாள்கள் வீரத்தின் அதிபதியான துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் செல்வத்தின் அதிபதியான லெட்சுமியையும், அடுத்த மூன்று நாட்கள் கல்வியின் அதிபதியான சரசுவதியையும் வழிபடுகின்றனர், பத்தாவது நாள் விஜயதசமி ஆகும்.

கொலு வைக்கும் முறை

ஓரறிவு ஜீவன்களில் இருந்து முனிவர்கள், தெய்வங்கள் வரை படிகளில் வைக்கப்படுகின்றன. இன்றைய நாட்களில் சமூகப் பிரச்சனைகளை கூட தங்கள் வீட்டுக் கொலுக்களில் வைக்கும் பழக்கம் பெருகி வருகிறது. கொலுவில் பொம்மைகள் படிக்கட்டுகளில் அடுக்கப்பட்டிருக்கும் என்பது நாம் அறிந்ததே. அந்தப் படிகள் ஆனது 5 அல்லது 7 அல்லது 9 போன்ற ஒற்றைப்படை எண்களில் அடிப்படையில் இருக்க வேண்டும்.

நவராத்திரி

படிகளில் வைக்கப்படும் பொம்மைகள் பெரும்பாலும் களிமண்ணால் செய்யப்பட்டவையாகும். கொலுவில் முதல் படியில் ஓரறிவு உயிரினங்கள்  இடம் பெற்றிருக்க வேண்டும். அதாவது மரம் ,கொடி, புல் ஆகியன ஓரறிவு உயிரினத்திற்கு எடுத்துக்காட்டுகளாகும். கொலுவின் இரண்டாவது படியில் ஈரறிவு உயிரினங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். நத்தை சங்கு ஆகிய உயிரினங்கள் ஈரறிவு உயிரினத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும்.கொலுவின் மூன்றாவது படியில் மூன்றறிவு கொண்ட உயிரினங்கள் இடம் பெறவேண்டும். கரையான், எறும்பு ஆகியன இதில் மூன்று அறிவு உயிரினம் ஆகும்.

கொலு

நான்காவது படியில் வண்டு, நண்டு ஆகிய நான்கு அறிவு உள்ள உயிரினங்கள் அமைக்க வேண்டும். ஐந்தாவது படியில் பறவைகள், விலங்குகள் ஆகியவை அமைக்கப்படுகின்றன. ஏனெனில் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் ஐந்தறிவு ஆகும்.ஆறாவது படியில் மனிதர்கள் இடம்பெற வேண்டும். அதாவது மனிதர்களின் திருமணம் நடைபெறுவது, கோவில் விழாக்கள் நடைபெறுகிறது, நடனமாடுவது இசைப்பது போன்ற மனித நிகழ்வுகள் இடம்பெற வேண்டும். ஏழாவது படி இது மனிதனைக் காட்டிலும் உயர்ந்த மகான்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். எட்டாவது படியில் கடவுள்களின் அவதாரங்களை அமைப்பது சிறந்தது.ஒன்பதாவது படியில் நவராத்திரியின் அதிபதிகளான லட்சுமி, துர்க்கை, சரஸ்வதி இடம்பெற்றிருக்க வேண்டும். கொலுவில் அமைக்கப்பட்டிருக்கும் மிக உயர்ந்த படியிலோ அல்லது அடியிலோ கலசம் இடம் பெற்றிருக்க வேண்டும்.

கொலு வழிபடும் முறை

கொலு வைத்திருக்கும் இந்த ஒன்பது நாட்களும் விரதமிருந்து மாலை நேரங்களில் நவதானியங்களை சமைத்து கொலுவை காண வரும் அனைவருக்கும் வழங்க வேண்டும். கொலுவிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் இட்ட தாம்பூலத்தினை வழங்கலாம்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.