முதுகு வலி காரணங்கள் | reason for back pain

முதுகு வலி காரணங்கள் | reason for back pain | Tamil Page

இன்றைய அளவில் மக்களை பெரிய அளவில் பாதிப்படையச் செய்கின்ற முக்கியமான தொந்தரவு என்று கூறினால் அது மூட்டு வலியும் , முதுகு வலியுமே ஆகும்.. இன்றைய நவ நாகரீக வாழ்க்கையில் மனிதர்களின் வாழ்க்கை பல்வேறு வழிகளில் மாறியுள்ளது.நாம் செய்கின்ற பெரும்பாலான கடின வேலைகளை இன்றைய நாகரீக வாழ்க்கை அறிவியல் வளர்ச்சியின் காரணமாக மாற்றியுள்ளது.

பண்டைய காலத்தில் பெண்கள் உடல் உழைப்பை முழுவதுமாக ஈடுபடுத்தி தான் தங்களுடைய சமையலறையில் வேலை செய்யும் நிலை இருந்து வந்தது. உதாரணமாக பண்டைய காலத்தில் பெண்கள் ஒரு உணவு சமைக்க வேண்டும் என்றால் அதனை தயார் செய்வதற்கு அனைத்து வேலைகளையும் உடல் ரீதியாகவே செய்ய வேண்டிய நிலை இருந்துள்ளது.அம்மி ,ஆட்டுக்கல் ,குந்தாணி செக்கு போன்ற கருவிகளை பயன்படுத்தியும், உடலுழைப்பை பயன்படுத்தியும் செய்யும் வேலைகள் தான் அதிகமாக இருந்து வந்துள்ளது.

முதுகு வலி காரணங்கள்

ஆண்களைப் பொருத்தவரையில் விவசாயத்திலும் ,தொழிற்சாலைகளிலும், தங்களின் உழைப்பை செலுத்தி வேலை செய்யும் நிலை இருந்துள்ளது.அவ்வாறு முழு பலத்தையும் வேலையில் ஈடுபடுத்தி இருந்தாலும் அவர்கள் அனைவரும் எவ்வித பிணியும் இன்றி நிம்மதியாக தான் வாழ்ந்துள்ளனர்.காலையில் பணிக்குச் சென்றுவிட்டு தங்கள் உடல் உழைப்பை முழுவதுமாக செழுத்தி மாலை வீட்டிற்கு திரும்பி வந்தவுடன் இரவில் தூங்குவது என்று ஒரு ஒழுங்கான வாழ்க்கை முறையை பின்பற்றி வந்துள்ளனர். அவர்களின் உணவு இயற்கையோடு ஒத்து அமைந்துள்ளது. ஆனால் இன்று நம் அனைவரையும் மிகவும் வருத்தும் ஒன்றாக மாறியுள்ளது முதுகு வலி.

முதுகு வலிக்கான காரணங்கள்:

 • அதிக உடல் எடை முதுகு வலிக்கான முக்கியமான காரணமாக கூறப்படுகிறது . தங்களின் உயரத்திற்கு ஏற்ற எடையைக் காட்டிலும் அதிகமாக உடல் பருமன் கொண்டவர்களை முதுகு வலி பெருமளவில் தாக்குகின்றது.
 • அதிக எடை கொண்ட பொருளை ஒழுங்கற்ற முறையில் தூக்குவதன் மூலம் நமது தண்டுவடப் பகுதியில் மிக அதிக அளவில் அழுத்தம் ஏற்பட்டு முதுகு வலியை உண்டாகுகிறது.சில நேரங்களில் ஒழுங்கற்ற முறையில் அதிக எடைகளை தூக்குவதால் ஜவ்வு விலகல் , எலும்பு விலகல் போன்ற பின் விளைவுகள் ஏற்படுகின்றன.
 • அதிக நேரம் ஒரே இடத்தில் நின்று கொண்டிருப்பதாலும் முதுகு வலி ஏற்படுகின்றது. அதேபோல் ஒரு இடத்தில் அதிக நேரம் அமர்ந்து இருப்பதால் முதுகு வலி ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
 • அதிக அளவில் உடற்பயிற்சி செய்வதாலும் சிலருக்கு முதுகு வலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
 • அதிக மன அழுத்தம் , கவலை, படபடப்பு போன்ற காரணங்களால் முதுகுவலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.
 • பெண்களை பொறுத்தமட்டில் கர்ப்ப காலத்திலும், மாதவிடாய் காலத்திலும் முதுகு வலி ஏற்படுகிறது.
 • உடலில் கால்சியம் பற்றாக்குறையின் காரணமாக எலும்புகள் தேய்மானம் அடைந்தும் முதுகு எலும்பு பகுதிகளில் வலி உணர்வை ஏற்படுத்துகிறது. வயது மூப்பின் காரணமாக உடலில் ஏற்படும் மாற்றங்களால் முதுகுப்பகுதி பலவீனமடைகிறது.
 • ஆண்களை பொருத்த மட்டில் அதிக அளவில் ஒழுங்கற்ற முறையில் புகை பிடிப்பது முதுகுவலி ஏற்படுவதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.
 • வாகனங்களில் அதிக நேரம் பயணம் செய்யும் நபர்களுக்கு முதுகுவலி ஏற்படுகின்றன . ஏனென்றால் அவர்கள் பல மணி நேரத்திற்கு சிறிதுகூட அசையாமல் ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பதாலும் அவர்களுக்கு முதுகு பகுதியில் வலி உணர்வு ஏற்படுகின்றது.
முதுகு வலி காரணங்கள்
 • இன்றைய காலகட்டங்களில் வயதானவர்களுக்கு மட்டும் தான் முதுகு வலி ஏற்படுகின்றது என்று கூற இயலாது. பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களுக்கு கூட முதுகு வலி உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
 • முதுகுப் பகுதியில் உள்ள தசை பிடிப்பு, தசை மடங்குதல் போன்றவற்றின் காரணமாக முதுகு வலி ஏற்படுகின்றன.
 • சிலருக்கு வைரஸ் காய்ச்சல் வந்து சென்றாலும் எலும்பு பகுதிகள் மூட்டு பகுதிகளில் வலி உணர்வு இருப்பதை உணர்வார்கள் . இத்தகைய வலிகள் வைரசின் தாக்குதலால் உடல் பலவீனம் அடைந்தது உணர்த்துகிறது .
 • உடல் சோர்வின் காரணமாக ஏற்படும் முதுகு வலிக்காக அதிக நேரம் தூங்க வேண்டும் என்று அவசியமில்லை.
 • மேற்கூறிய காரணங்கள் எல்லாம் மிக சிறிய தாக்கத்தை ஏற்படுத்தும் சாதாரண முதுகுவலியை சேர்ந்தவை.
 • ஆனால் முதுகு தண்டுவடப் பகுதியில் ஏற்படும் புற்றுநோய்க்கும் ,பெண்களுக்கு மார்பகப் பகுதியில் ஏற்படும் புற்றுநோய்க்கும் முதற்கட்ட அறிகுறியாக முதுகு பகுதியில் வலி ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். முதுகு தண்டுவட புற்றுநோய் என்பது மிக அரிதான நோய் ஆகும். இப்பகுதியில் ஏற்படும் புற்றுநோய் செல்கள் அப்பகுதியில் உள்ள தண்டு பகுதியை அரித்து தேய்மானம் அடைவதால் முதுகு பகுதியில் வலி ஏற்பட்டதாகவும் கூறுகின்றனர்.

பல்வேறு வகையான முதுகு வலிகள்:

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான முதுகுவலி ஏற்படலாம். சிலருக்கு நடக்கும்போது மட்டும் முதுகு பகுதியில் வலி உணர்வு ஏற்படும். சிலருக்கு உட்காரும்போது வலி உணர்வு ஏற்படும். நேராக படுத்து உறங்கும் போதும் சிலருக்கு முதுகு பகுதியில் வலி உணர்வு ஏற்படுவதை உணர்வார்கள். ஒரு சிலரோ சிறிது தூரம் நடந்தவுடன் தங்கள் முதுகு பகுதியில் வலி உணர்வு ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
தினந்தோறும் உடற்பயிற்சிகள் செய்வதன் மூலமே இன்றைய நடைமுறை வாழ்க்கையில் நாம் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.