முதுகு வலி குணமாக பாட்டி வைத்தியம் | Tamil Page
முதுகு வலி குணமாக பாட்டி வைத்தியம் | Tamil Page
தற்போதைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கின்ற பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது முதுகுவலி.நம் தமிழ்நாட்டை பொறுத்தவரை எவ்வித நோய்க்கும் நம் முன்னோர்கள் வீட்டு வைத்தியத்தை விட்டு சென்று தான் இருப்பார்கள்.

நம் வீட்டில் உள்ள வயதில் மூத்த பாட்டியிடம் அதனை கேட்டால் அவர்கள் வீட்டில் சமையலறையில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு பிணியிலிருந்து விடுபடலாம் என்று நமக்கு உணர்த்துவார்கள். அப்படிப்பட்ட முதுகுவலிக்கான பாட்டி வைத்தியத்தை தான் நாம் இங்கு காண இருக்கின்றோம்.
பாட்டி வைத்தியம் 1:
இக்குறிப்பில் நீங்கள் உங்கள் வீட்டு அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் பொருட்களை கொண்டே முதுகுவலிக்கான கசாயத்தை எப்படி தயார் செய்யலாம் என்பதை அறிய இருக்கின்றீர்கள்.
தேவையான பொருட்கள்: 200 மிலி தண்ணீர், 5 மிளகு, 5 கிராம் சுக்கு, 5 கிராம்பு.
செய்முறை : ஒரு பாத்திரத்தில் 200 மில்லி தண்ணீரை ஊற்றி அதனுள் 5 மிளகு ,5 கிராம்பு,சுக்கு ,ஆகியவற்றை போட்டு சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.கொதிக்க வைத்த நீரை தினமும் பருகி வந்தால் முதுகு வலியில் இருந்து நீங்கள் விடுபடலாம்.
பாட்டிவைத்தியம் 2:
தேவையான பொருள்கள்: தேங்காய் எண்ணெய், 2 வெற்றிலை.
செய்முறை : இரண்டு வெற்றிலையை எடுத்து அதனை கசக்கி நன்கு சாறு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு சிறிதளவு தேங்காய் எண்ணெய் உடன் அச்சாற்றினை ஊற்றி மிதமான சூட்டில் சூடு படுத்தவும்.இவ்வாறு சூடுபடுத்திய தேங்காய் எண்ணெயை மிதமான சூட்டில் எடுத்துக்கொண்டு எவ்விடத்தில் நீங்கள் வலி கொண்டு இருக்கிறீர்களோ அங்கு இதமாக அழுத்தி தேய்த்து வரவேண்டும் .இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் முதுகு வலியிலிருந்து விடுபடலாம்.
பாட்டி வைத்தியம் 3:
தேவையான பொருள்கள்: வாதநாராயண இலை, சிறிதளவு விளக்கெண்ணெய். செய்முறை : கிராமப்புறங்களில் அதிக அளவில் காணப்படும் வாதநாராயணன் இலையை எடுத்துக் கொண்டு அதை சிறிதளவு விளக்கெண்ணெயில் வதக்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறு வதக்கிய பின் அதனை எடுத்து முதுகு வலி உள்ள இடத்தில் மெதுவாக ஒத்தடம் கொடுத்துக் கொண்டு வரவும்.
பாட்டி வைத்தியம் 4
தேவையான பொருட்கள்: 400 மிலி தண்ணீர், இரண்டு தேக்கரண்டி சீரகம். செய்முறை : 2 தேக்கரண்டி சீரகத்தை எடுத்துக் கொண்டு அதனை நன்கு வறுத்துக் கொள்ளவும் .பின்பு 400ml தண்ணீரை எடுத்து அதனை கொதிக்க வைக்கவேண்டும் .கொதிக்கும் நீரில் வறுத்த சீரகத்தை சேர்த்து கொதிக்க வைக்கவும்.கொதிக்க வைத்த நீரை மிதமான சூடு வரும் வரை ஆற வைத்துக் கொள்ள வேண்டும் . பின்பு அந்த நீரை ஒரு சிறிய அளவில் பருத்தி துணியில் நனைத்து முதுகு வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்துவர முதுகு வலி நீங்கும்.
பாட்டி வைத்தியம் 5
தேவையான பொருட்கள் :பூண்டு 5, நல்லெண்ணெய் 50 மிலி.
செய்முறை : 5 பூண்டுப் பற்களை எடுத்து கொண்டு அதனை50 மில்லி அளவு நல்லெண்ணெயில் போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும் .வதக்கிய பின்பு அதனை எடுத்து வலி உள்ள இடத்தில் தொடர்ந்து ஒத்தடம் செய்து வரவும் . இவ்வாறு செய்வதன் மூலம் வலி சிறிது சிறிதாக குறைய தொடங்கும்.
பாட்டி வைத்தியம் 6
தேவையான பொருட்கள்: சிறிதளவு நல்லெண்ணெய், ஒரு கைப்பிடி கல் உப்பு.
செய்முறை : சிறிதளவு நல்லெண்ணெய் எடுத்துக் கொண்டு அதனை மிதமாக சூடு படுத்திக் கொள்ள வேண்டும்.மிதமான சூட்டில் உள்ள நல்லெண்ணெயில் சிறிது அளவு கல் உப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை தொடர்ந்து வலி உள்ள இடத்தில் தேய்த்து வருவதன் மூலம் முதுகு வலி நீங்கும்.
பாட்டி வைத்தியம் 7:
செய்முறை : மிதமான சூட்டில் உள்ள வெந்நீரில் முதுகுப்பகுதி நனையும்படி சிறிது நேரத்திற்கு அமரலாம். அதன் மூலமாகவும் வலியுள்ள இடத்தில் இருந்து வலி நீங்க தொடரும்.
மேற்கூறிய அனைத்தும் நமது முன்னோர்கள் வலியை நீக்குவதற்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்து வந்த பாட்டி வைத்தியம் ஆகும்.மேற்கூறிய முறைகளை பின்பற்றியும் வழி நீங்கவில்லை என்றால் மருத்துவரை அணுகுவதே மிகச்சிறந்த செயல்முறை ஆகும். முறையான உணவு பழக்கம் மற்றும் தினசரி உடற் பயிற்சிகள் செய்வதன் மூலமும் பிணியிலிருந்து நீங்கி நல்வாழ்வு வாழலாம்.
Visit to : முதுகு வலி ஏற்படுவதற்கான காரணங்கள்
Recent Comments