தமிழ்நாடு வரலாறு | Tamil Page

தமிழ்நாடு வரலாறு

இன்றைய தமிழ் நாடு என்று நாம் அனைவராலும் அறியப்படும் நம் மாநிலம் சங்க காலத்தில் ஒரே மாகாணமாக ஒரே பகுதியாக விளங்கியது அல்ல. கிமு ஆறாம் நூற்றாண்டு முதல் கிபி 2 ஆம் நூற்றாண்டு வரை நம் தமிழ் நாடு பல பகுதிகளாக பல மன்னர்களால் பிரித்து ஆட்சி அமைக்கப்பட்டு வந்தது.

தமிழ்நாடு மேப்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ்நாட்டை ஆண்ட முக்கிய மன்னர் வம்சங்கள் சேரர், சோழர், பாண்டியர் ஆகும். சேரர்கள் கொங்கு மண்டலத்திலும், சோழர்கள் தஞ்சை மண்டலத்தையும் , பாண்டியர்கள் மதுரை மண்டலத்தையும் மூன்று பகுதிகளாக பிரித்து ஆட்சி புரிந்து வந்தனர். பல்லவர்கள் வடதமிழகத்தை ஆட்சி புரிந்து வந்தனர்.

பல்வர்கள் முழு தமிழகப்பகுதியையும் சிறிதுகாலம் ஆட்சி செய்து வந்தனர். பின்பு தமிழகத்தை நோக்கி படையெடுத்து வந்த களப்பிரர்கள் கையில் தமிழகம் சிறிது காலம் இருந்தது. பின்பு கிபி 900 ஆம் ஆண்டிற்கு பின்பு தான் சோழர்கள் மீண்டும் தமிழகத்தில் தங்களது ஆட்சியை மீட்டெடுத்தனர். பின்பு சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இடையே ஏற்பட்ட பல போர்களின் காராணமாக இரண்டு பேரரசுகளும் பலவீனமடைந்து விஜயநகர பேரரசின் கையில் சென்றது.

பின்பு தமிழகம் சிறிது காலம் மராத்தியர்கள், முகலாயர்கள் ,ஆங்கில அரசின் கீழ் இருந்து வந்தது. 18ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வருகை தந்த ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோர்களின் பிடியில் சிக்கியது. வாணிகம் செய்வதற்காக இந்தியா வந்த ஐரோப்பியர்கள் இந்தியாவை ஆளும் எண்ணம் கொண்டு இந்தியாவை கைப்பற்றி ஆட்சி செய்தனர். பல்வேறு மொழிகளைப் பேசும் இந்திய நாடானது மொழிகளைக் கொண்டு பல மாநிலங்களாக பிரித்து, பல மண்டலங்களாக ஆட்சி புரிந்து வந்தனர்.

1918 ஆண்டு இந்தியாவை ஆங்கிலேயர்களிடமிருந்து மீட்டெடுக்க ஏற்பட்ட புரட்சியின் பின்புதான் இந்தியா விடுதலை பெற்றது. பல்வேறு சிறு சிறு பகுதிகளாக பிரிந்து கிடந்த பல அரச மாகாணங்களை ஒன்றிணைத்து இந்தியா என்னும் நாடாக மாற்றி அமைக்கப்பட்டது. பல்வேறு மாகாணங்களாக சிதறிக் கிடந்த இந்தியாவை ஒரு பெரும் நாடாக மாற்றி அமைத்த பெருமை நம் நாட்டின் இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் பட்டேல்யே சேரும்.

இந்திய விடுதலைக்குப் பின்பும் தற்போது தமிழ்நாடு என்று அறியப்படும் நமது மாநிலம் மதராஸ் மாகாணம் என்ற பெயர் கொண்டிருந்தது. மதராஸ் என்ற பெயரை மாற்றி தமிழ்நாடு என்ற பெயரை அறிவிக்குமாறு என்ற கோரிக்கை வலுத்து வந்தது.

1967 ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணா அவர்கள் சட்டமன்றத்தில் பெயர் மாற்றத்திற்கு ஒரு தீர்மானம் கொண்டுவந்தார். 1968 ஆம் ஆண்டு தான் முறையாக தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது.

தமிழகத்தின் மாநில சின்னங்கள்

தமிழக அரசின் சின்னமாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம் விளங்குகின்றது.இந்த கோபுரமே தமிழக அரசு முத்திரையாகும். தமிழக அரசின் மாநில மலராக செங்காந்தள் மலரும் ,மாநில விலங்குகாக வரையாடும்,,மாநில விளையாட்டாக கபடியும் , மாநில நடனமாக பரதநாட்டியமும் , மாநில மரமாக பனை மரமாக  தமிழக அரசால் வகுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பரப்பளவு மற்றும்  எல்லைகள்

தமிழ்நாட்டின் நிலப்பரப்பளவு ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 508 சதுர கிலோமீட்டர் ஆகும். இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு  10 வது மிகப்பெரிய மாநிலம் ஆகும். தமிழ்நாட்டின் நிலை எல்லைகளாக வடக்கில் ஆந்திரபிரதேசம் மற்றும் கர்நாடகா மாநிலங்கள் உள்ளன.

தமிழகத்தின் மேற்கு நில எல்லையாக கேரளா அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கு நிலப்பகுதியில் கடலால் சூழப்பட்டுள்ளது.. தமிழ் நாட்டின் தெற்கில் இந்தியப் பெருங்கடலும், தமிழ்நாட்டின் கிழக்கு பகுதியில் வங்காள விரிகுடா உள்ளது.

தமிழ்நாட்டு அரசியல் பிரிவு

தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39.தமிழ்நாட்டில் உள்ள மொத்த மாவட்டங்கள் எண்ணிக்கை 38 ஆகும்.தமிழ்நாடு ஆனது இருபத்தி ஒரு மாநகராட்சிகளையும், 115 நகராட்சிகளையும்  கொண்டுள்ளது.

தமிழ்நாடு நாள்

மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்த போது தமிழ்நாடு ,ஆந்திரா, கேரளா , கர்நாடகம் என்று நான்கு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது.1957 ஆம் ஆண்டிற்கு பின்பு ஒவ்வொரு மாநிலமும் அம்மாநிலத்தின் நாளாக அனைத்து ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நாளில் கொண்டாடுகின்றன.ஆனால் 2019 ஆம் ஆண்டிலிருந்து தான் தமிழ்நாடு நாள் என்னும் நாளை கொண்டாடி வருகின்றது.ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் முதல் நாளில் தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும் என்று அன்றைய முதலமைச்சர் தெரிவித்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.