கர்ப்பிணி பெண்கள் அனைவருக்கும் செய்யக்கூடிய உண்ணதமான விழா சீமந்தம் வளகாப்பு

 

கர்ப்பிணி பெண்கள் அனைவருக்கும் செய்யக்கூடிய உண்ணதமான விழா சீமந்தம் வளகாப்பு

வளகாப்பு என்றால் சீமந்தம் என்று பொருள். இதனை கருவுற்ற கர்ப்பிணி பெண் தாய்மார்களுக்கு குழந்தை பிறக்க இருக்கும் கடைசி மாதத்தில் அதாவது ஒன்பதாம் மாதத்தில் இதனை அவர்களுக்கு அணிவிப்பார்கள்.

இந்த சடங்கை நம் முன்னோர்கள் வழியில் இருந்து இன்று வரை நடைபெற்று கொண்டு வருகிறது.

சீமந்தம் வளகாப்பு

இதனை கர்ப்பிணி தாய்மார்களுக்கு அணிவிப்பதன் மூலம் வயிற்றில் இருக்கும் குழந்தை நலமாகவும் ஆரோக்கியமாகவும் பிறக்கும் என்று கூறுகிறார்கள்.

காரணம் இந்த சடங்கில் முக்கியமான அம்சம் என்னவென்றால் பெண்களுக்கு இரு கைகளிலும் வளையல்களை அணிவிப்பதே ஆகும்.

இந்த வளையல்கள் குழந்தை பெறும் வரை அணிந்திருப்பார்கள். இந்த வளையல்களில் இருந்து வரக்கூடிய ஓசை வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கிறது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

கருவுற்ற ஒவ்வொரு தாய்க்கும் இந்த சடங்கை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஏழு வகையான அல்லது 9 அல்லது 11 வகையான உணவுகளை தயார் செய்து அதனை தாய்மார்களுக்கு தாய் வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்டு பரிமாறப்படுகிறது.

பல வண்ண நிறங்களில் வளையல்களும், பல வகையான பழங்கள் இனிப்புகள் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அளிக்கப்படுகிறது.

விழாவில் பங்கேற்கும் உற்றார் உறவினர்களுக்கு விருந்து உபசரித்து அவர்களுக்கு இனிப்புகளை வழங்குகிறார்கள்.

இந்த வளையல்களை கருவுற்ற தாய்மார்களுக்கு அணிவதற்கு முன்பு தங்கள் வீட்டில் இருக்கும் சிறிய பெண் குழந்தையின் கைகளில் அணிவித்து பிறகு கருவுற்ற பெண்களுக்கு அணிவிப்பது சிறப்பு.

 

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published.