Tamilnadu Festival | தமிழ்நாட்டின் சிறப்பு பண்டிகைகள்

Tamilnadu Festival | தமிழ்நாட்டின் சிறப்பு பண்டிகைகள்

தை பொங்கல் : தமிழ்நாட்டில் கொண்டாடக் கூடிய ஒரு முதன்மையான பண்டிகை தைத்திருநாள் அல்லது தைப்பொங்கல் ஆகும். இந்த தைத்திருநாள் தை மாதம் முதல் நாள் முதல் மூன்று நாட்கள் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த பண்டிகை தமிழர்களின் ஒரு முக்கிய பண்டிகையாக கருதப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. தைப்பொங்கல் பண்டிகையானது நெல்மணி, கதிரவன், காற்று, மழை, நிலம், கால்நடைகள் மற்றும் குலதெய்வங்கள் ஆகிய அனைத்திற்கும் நன்றி சொல்லும் வகையில் தைப்பொங்கல் வணங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.

வரக்கூடிய ஆண்டு சிறப்பாகவும் இனிமையாகவும் இருப்பதற்கு சக்கரை பொங்கலிட்டு அதை குல தெய்வங்களுக்கு படைத்து, இந்த தைப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த தைப்பொங்கல் விழா

  • போகி
  • தைப்பொங்கல்
  • மாட்டுப் பொங்கல்
  • உழவர் திருநாள்

என்று நான்கு நாட்கள் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கார்த்திகை தீபம் : இந்தத் திருவிழா தமிழ்நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கொண்டாடப்பட்டு வரும் ஒரு பழமையான பண்டிகை ஆகும். அதாவது தீபாவளி போன்ற பண்டிகை கொண்டாடுவதற்கு முன்பே கார்த்திகை தீபத்திருநாள் விழாவை தமிழ்நாட்டில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வந்துள்ளது.

Karthikai Deepam

இந்தப் பண்டிகை கார்த்திகை மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தீபம் முதலில் திருவண்ணாமலையில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவிலில் மலையின் உச்சியில் மாலை 6 மணிக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் முன்னிலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

இந்த தீபமானது ஏற்றிய பிறகு அனைத்து வீடுகளிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு திருவிழாவாக கொண்டாடுகிறார்கள். இந்த தீபமானது ஏற்றும் பொழுது இருளைப் போக்கி ஒளியை உருவாக்குவது போல, மனதில் இருக்கும் இருளை போக்கி ஒளியை உருவாக்கும் என மகான்களின் வாக்கு.

தீபம் ஏற்றும் முறை : களிமண்ணால் செய்யப்பட்ட கார்த்திகை தீப சிட்டிகையில் சிறிதளவு விளக்கு எண்ணெய் ஊற்றி இதே பத்திரிகை எண்ணெயை நனைத்து வைப்பார்கள்.

Karthikai Deepam

பிறகு திரியை நெருப்பால் பற்றவைத்து வீடு முழுவதும் கார்த்திகை விபத்தால் நிரப்பி அழகு படுத்துவார்கள் அதாவது வீட்டு வாசல் திண்ணை வீட்டு ஜன்னல்கள் படிகள் ஆடு மாடுகள் கட்டும் இடங்கள் குப்பை போடும் இடம் போன்ற அனைத்து இடங்களிலும் இந்த தீபத்தை ஏற்றி வைப்பார்கள் விபத்தால் நிரப்பப்பட்ட வீட்டை பார்க்கும் பொழுது அற்புதமான காட்சியாக இருக்கும்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *