Pongal Festival | தைபொங்கல் திருநாள்

தைப்பொங்கல் : தமிழ்நாட்டில் சிறப்பாக கொண்டாட கூடிய ஒரு மிகப்பெரிய பண்டிகை தமிழர் திருநாள் ஆகும். தமிழர் திருநாள் தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகில் வாழும் அனைத்து தமிழர்களாலும் கொண்டாடக்கூடிய ஒரு மிகப்பெரிய திருநாளாகும்.

Pongal Festival

தமிழர்களைப் பொறுத்த வரை நம் முன்னோர்கள் அதிகமாக உணவுக்கு பயன்படுத்திய உணவு தானியம் நெல். இந்த நெல்யை வேளாண்மை செய்து உணவுக்கு பயன்படுத்தினார்கள்.

நெல் மணியை விளைவிக்க பெரிதும் உறுதுணையாக இருந்த மழை, கதிரவன், நிலம், காற்று, ஆகியவற்றிற்கு நன்றி கூறும் வகையில் தை மாதம் முதல் தேதி அன்று தமிழர்களின் திருநாளான தை திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த தைப்பொங்கல் (Thai Pongal) ஆனது 4 நாட்களுக்கு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

Pongal Festival Crop

இந்த 4 நாட்களிலும் பொங்கல் திருநாள் ஆனது நமது பண்டைய காலத்தில் முறைப்படியே இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் முதல் நாள் போகிப் பண்டிகை , அதற்கு அடுத்து தை முதல் தேதி தைப்பொங்கல் (Thai Pongal) கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல் அதன்பிறகு உழவர் திருநாள் என்று நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது.

போகி பண்டிகை

இப்பண்டிகை ஆனது தை முதல் தேதிக்கு முந்தைய நாள் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையின் மக்கள் தங்கள் வீட்டில் உள்ள பழைய ஆடைகள் மற்றும் பழைய பொருட்களை தீயிட்டு எரித்து கொண்டாடப்படும் பண்டிகையாக போகி திருநாள் கொண்டாடப்படுகிறது.

தைப்பொங்கல்

தை மாதம் முதல் நாளன்று தமிழர்களின் திருநாளான தைப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தைப்பொங்கல் (Thai Pongal Festival) கொண்டாடுவதற்கு முன்பு வீடு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகிய அனைத்தும் சுத்தம் செய்து வைத்திருப்பார்கள்.

Pongal Festival Kolam

வரக்கூடிய வருடம் மிக சிறப்பாகவும், இனிமையாகவும் இருக்கவேண்டும் என்பதற்காக தைப்பொங்கல் (Thai Pongal Festival) திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை நெல் மணிக்கும், சூரிய பகவானுக்கும் நன்றி செலுத்தும் வகையில் பொங்கலிட்டு சூரியன் மற்றும் குல தெய்வங்களை வணங்கி மகிழ்கிறார்கள்.

மாட்டுப் பொங்கல்

நம் முன்னோர்களின் முக்கிய தொழில் வேளாண்மையை கொண்டிருந்தார்கள். நெல் மணியை விளைவித்து அறுவடை செய்து உணவுக்குப் பயன்படுத்துவது மிக முக்கியமான ஒன்றாக கருதப்பட்டது.

Jallikattu Festival

எனவே வேளாண்மை செய்வதற்கு பெரியதும் உதவுவதற்கு கால்நடைகளை வீடுகளில் வளர்த்து வந்தார்கள். இந்த கால்நடைகளில் மாடுகள் விவசாயம் செய்வதற்கு பெரிதும் உதவிகரமாக இருந்தது.

நிலத்தை உழுவதற்கும், வேளாண்மை பொருட்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு காளைகள் மிக உதவிகரமாக இருந்தது.

Jallikattu festival

இந்த உதவிகளுக்காக மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் மாட்டிற்கு இனிப்பு பொங்கல் மற்றும் கரும்புகள் அளித்து வணங்கி மகிழ்கிறார்கள்.

மாட்டுப்பொங்கலன்று நாட்டு மாடுகள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு விழா திருவிழாவாக மிக பிரம்மாண்டமான வகையில் கொண்டாடப்படுகிறது.

உழவர் திருநாள்

இந்நாளில் உற்றார், உறவினர்கள் வீட்டுக்குச் சென்று இனிப்பு பொங்கல் வழங்கி மகிழ்வார்கள். மேலும் ஒரு பொதுவான இடத்தில் சிறப்பு போட்டிகள், அதாவது உறியடித்தல், இளவட்டக்கல் தூக்குதல், வழுக்கு மரம் ஏறுதல், போன்ற பல வீர விளையாட்டுக்களை நடத்தி, பரிசுகள் அளித்து மகிழ்கிறார்கள்.

பொங்கல் வைக்கும் முறை

மண்ணால் செய்யப்பட்ட ஒரு புத்தம் புதிய பானையில் அரிசி மாவால் கோலம் இட்டு, மஞ்சள் கொத்தை எடுத்து பானையின் கழுத்தில் கட்டி இருக்க வேண்டும். சந்தனம் மற்றும் குங்குமம் பூசி அடுப்பில் வைப்பார்கள்.

Pongal Festival Pot

அப்பானையின் கழுத்து அளவு அரிசியை கலைந்த தண்ணீரை ஊற்றி சிறிதளவு பாலையும் சேர்ப்பார்கள். பிறகு பானை நெருப்பால் சூடேறி சிறிது நேரத்திற்குப் பிறகு பானையில் ஊற்றப்பட்ட பால் கலந்த நீரானது பொங்கி வழிந்தோடும்.

இந்நிகழ்வின் போது பொங்கப்படும் பாலானது கிழக்கு திசையை நோக்கி வழிந்தோடினால் மிக நற்பலன்கள் ஏற்படும் என்று பெரியோர்கள் கூறுவார்கள். அதோடு இந்த நிகழ்வின் போது ” பொங்கலோ பொங்கல் “ என்று ஆரவாரம் இட்டு அனைவரும் மகிழ்வார்கள்.

பிறகு ஊறவைக்கப்பட்ட பச்சரிசியை அந்தப் பானையின் அளவிற்கு ஏற்ப பானையில் போட்டு வேக வைப்பார்கள். அதோடு வெள்ளம் மற்றும் பாசிப்பருப்பு சேர்த்து நன்றாக வேக வைப்பார்கள்.

Sweet Pongal

இறுதியில் ஏலக்காய், முந்திரி, உலர் திராட்சை மற்றும் நெய் அனைத்தையும் போட்டு இறக்கி வைப்பார்கள்.தற்போது தயார் செய்யப்பட்டது சக்கரை பொங்கல்.

இந்த பொங்கலை எடுத்து வெற்றிலை, பாக்கு, தேங்காய், வாழைப்பழம் மற்றும் கரும்பு அனைத்தையும் எடுத்து சூரிய பகவான் மற்றும் குல தெய்வங்களுக்கு படையலிட்டு வணங்கி மகிழ்வார்கள்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *