History of Olympic Games | ஒலிம்பிக் போட்டியின் வரலாறு

ஒலிம்பிக் போட்டியின் வரலாறு : ஒலிம்பிக் போட்டியில் தொடங்குவதற்கான ஆதாரங்கள் புராண கதைகளில் மட்டுமே உள்ளது. மத்திய தரைக்கடலில் இருக்கக்கூடிய ஒரு நாடு கிரீஸ், பண்டைய காலத்தில் இந்த நாடு கிரேக்கம் என அழைக்கப்பட்டு, உலகத்திலேயே மிகப்பெரிய பேரரசாக விளங்கி வந்தது. இந்த பேரரசின் எல்லை பல பகுதிகளில் விரிவடைந்து இருந்தது.

கிரீஸ்

கிரீஸ் நில அமைப்பு பசுமையானது அல்ல, ஆனால் கிரீஸ் தன்மைக்கு மாறாக ஒலிம்பஸ் என்ற ஒரு பசுமையான குன்றாக விளங்கி வந்தது. புனிதமான மலை எனவும் இந்தக் குன்றை அழைப்பார்கள்.

இந்த குன்றிலிருந்து கிரேக்கக் கடவுள்கள் வந்து ஆட்சி செய்தார்கள் என்று கிரேக்க மக்கள் முழுமையாக நம்பி வந்தார்கள். அந்த குன்றின் அடிவாரத்தில் தான் ஒலிம்பியா என்ற கிராமத்தை அமைத்தார்கள். இந்த ஒலிம்பியா கிராமமானது மிக செழிப்பான பசுமையான இடமாக விளங்கி வந்தது.

கிரேக்க மக்களின் தலைமை கடவுள் ஜூயிஸ் ஆவார். ஜூயிஸ் இவரின் தந்தை பெயர் டைட்டன் க்ரோனஸ். ஜூயிஸ் கடவுள் உலகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவதற்காக தந்தையுடன் போரிட்டார். ஜூயிஸ் தந்தையுடன் போரிட்டு, அதில் வெற்றியும் பெற்றார். இந்த வெற்றியின் காரணமாக (Olympia) ஒலிம்பியா என்ற இடத்தில் போட்டிகளை நடத்தினார். என்பது ஒருவித புராணக் கதைகளில் ஒன்று. ஒலிம்பிக் விளையாட்டுகள் எந்த வருடம் தொடங்கினார்கள் என்ற சரியான விடயம் கிடையாது.

History of Olympic

அடுத்தபடியாக கிரீஸ் என்ற தீவில் எலிஸ் என்ற பகுதியின் அரசராக எக்விடாஸ் என்பவர் கிமு 9 – ம் நூற்றாண்டில் தம் நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காக டெல்பி பகுதியின் பிரியா என்ற மன்னருடன் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையானது கிரேக்க கடவுள்களின் முன்னிலையில் விளையாட்டுகளை நடத்தி அதன்மூலம் சமாதானத்தை நிலை நிறுத்துவதே இந்த உடன்படிக்கையின் நோக்கமாகும். இந்த உடன்படிக்கையின் மூலமாக ஸ்பார்ட்டா இனத்தவர்கள் யுத்தம் செய்வதை நிறுத்தி சமாதானம் நிகழ்வதற்கு ஒத்துழைத்தார்கள் என்பது மற்றொன்று புராணக் கதை ஆகும்.

இந்த ஒலிம்பிக் போட்டிகள் முன்பு இருந்தே நடத்தப்பட்டு வந்தது இந்த ஒலிம்பிக்கில் தடகளப் போட்டிகள், மல்யுத்தம் போன்ற விளையாட்டுகள் நடத்தப்பட்டு வந்தது. இருப்பினும்

1896 – இல் ( Modern day Olympics ) நவீன காலத்து ஒலிம்பிக்(Olympic) போட்டி என பெயரிட்டு, கிரீஸ் நாட்டில் எய்டன்ஸ் என்னுமிடத்தில் முதல் ஒலிம்பிக் போட்டியானது நடைபெற்றது.

Modern day Olympic

இந்த ஒலிம்பிக் போட்டியானது நான்கு ஆண்டுகளுக்கு 1 முறை நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பிக் போட்டி 1896 – இல் இருந்து தற்போது வரை 31 போட்டிகள் நடைபெற்றுள்ளது.

தற்போது 32வது ஒலிம்பிக் (Olympic) போட்டியானது 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 – ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 வரை ஜப்பான் நாட்டின் தலை நகரமான டோக்கியோவில் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டிகள் கோடை காலம் மற்றும் குளிர்காலம் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. இந்த ஒலிம்பிக் போட்டி உலகிலுள்ள நாடுகளில் இருக்கும் முக்கியமான விளையாட்டுக்களை தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த விளையாட்டுகளை ஒலிம்பிக்கில் நடத்தப்பட்டுவருகிறது.

4 வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டியானது இன்றுவரை வெவ்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது.

எண்நாடுதலைநகரம்ஆண்டு
1 கிரிஸ்எத்தன்ஸ்1896
2பிரன்ஸ்பரிஸ்1900
3USASt லுயிஸ்1904
4கிரிஸ்எத்தன்ஸ்1906
5UKலண்டன்1908
6சுவிடன்ஸ்டாக்ஹால்ன்1912
ஜெர்மனிபெர்லின் ( Canceled )1916
7பெல்ஜியம்அண்ட்வெப்1920
8பிரன்ஸ்பரிஸ்1924
9ஹாலந்துஅம்சர்டன்1928
10USAலாஸ் ஏஞ்சல்ஸ்1932
11ஜெர்மனிபெர்லின்1936
ஜப்பான்டொக்கியோ ( Canceled )1940
UKலண்டன் ( Canceled )1944
12UKலண்டன்1948
13பின்லாந்துஹெல்சின்கி1952
14ஆஸ்திரேலியாமெல்போர்ன்1956
15இதலிரோம்1960
16ஜப்பான்டொக்கியோ1964
17மெக்ஸிகோமெக்ஸிகோ நகரம்1968
18ஜெர்மனிமுனிச்1972
19கனடாமெண்ட்ரியல்1976
20USSRமாஸ்கோ1980
21USAலாஸ் ஏஞ்சல்ஸ்1984
22தென் கொரியாசியோல்1988
23ஸ்பெயின்பார்சிலோனா1992
24USAஅட்லாண்டா1996
25ஆஸ்திரேலியாசிட்னி2000
26கிரிஸ்எத்தன்ஸ்2004
27சீனா பெய்ஜிங்2008
28UKலண்டன்2012
29பிரேசில்ரியோ2016
30ஜப்பான்டொக்கியோ2021
31பிரன்ஸ்பரிஸ்2024
32USAலாஸ் ஏஞ்சல்ஸ்2028
33????2032
List of Olympic Host Countries

ஒலிம்பிக் பதக்கங்கள்

போட்டி இறுதியில் வென்ற வீரர்களை கௌரவிக்கம் மிக முக்கியமான ஒன்று பதக்கங்கள் ஆகும். இந்த பதக்கங்களை உருவாக்குவதற்கு தனி சிறப்பு போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த போட்டிகளில் கலந்து கொள்வதற்கு பல நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் பங்கு கொள்கிறார்கள். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒலிம்பிக் போட்டியில் பதக்கத்தை உருவாக்கும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டிகளில் கொடுக்கப்படும் பதக்கம் ஆனது, ஒருமுறை மட்டுமே கொடுக்கப்படும், அடுத்த முறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் புதிதாக பதக்கம் உருவாக்கப்பட்டு, ஒலிம்பிக்கில் வென்ற வீரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஒலிம்பிக் பதக்கத்தினை உருவாக்குவதற்கு மிக முக்கிய 3 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது அதில்

  • முதல் கட்டுப்பாடானது, கிரேக்க நாட்டு மக்களின் வெற்றியின் கடவுளாக கருதப்படும் நைக் என்ற பெண் கடவுளின் உருவம் இடம் பெற்றிருக்க வேண்டும்.
  • இரண்டாவது கட்டுப்பாடானது, ஒலிம்பிக் போட்டி நடத்தும் ( நாட்டின் பெயர் மற்றும் ஆண்டு) அதிகாரப்பூர்வ பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும்.
  • மூன்றாவது மிக முக்கியமான கட்டுப்பாடானது, ஒலிம்பிக் போட்டியின் ஒலிம்பிக் கொடியின் ஐந்து வண்ண வளையங்களும் அதில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

இந்த 2021 ஆண்டிற்கான ஒலிம்பிக் பதக்கத்தினை உருவாக்கும் சிறப்பு பெருமை ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஜூனிஜி கவானிஜி என்பவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பதக்கத்தின் அளவு

  • விட்டம் 85 மில்லி மீட்டர் இதன் தடிமன் குறைந்தபட்சம் 7. 7 மில்லிமீட்டர் அதிகபட்சம் 12.1 மில்லிமீட்டர் வரை இருக்கும்
  • தங்கப் பதக்கம் 550 கிராம் அளவும்
  • வெள்ளிப் பதக்கம் 556 கிராம் அளவும்
  • வெண்கலம் 450 கிராம் அளவும் இருக்கும்

ஒலிம்பிக் கொடி உருவான விதம்

ஒலிம்பிக் (Olympic) கொடியானது உலகின் அனைத்து நாடுகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், என்னும் கருத்தினை மையமாகக் கொண்டு இக்கொடியானது உருவாக்கப்பட்டுள்ளது.

Olympic Flag

இந்தக் கொடியை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த போரான்- டி – கோபிரான்டின் என்பவர் 1913 ஆம் ஆண்டு முதன் முதலில் கொடியை வடிவமைத்தார் அதன்பிறகு 1914 ஆம் ஆண்டு கொடியினை வெளியிட்டார்.

உலக நாடுகள் அனைத்தும் இக்கொடியின் பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 1920 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. போரான் – டி – கோபிரான்டின் என்பவரை ( Modern day Olympics ) நவீன கால ஒலிம்பிக்கின் தந்தை என அழைக்கப்படுகிறார்,

ஒலிம்பிக் கொடியில் உள்ள ஐந்து வளையங்களும் ஒன்றோடு ஒன்று பின்னப்பட்டு இருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அவ் 5 வளையங்களும் 5 வண்ணங்களால் உருவாக்கப்பட்டிருக்கும். ஒலிம்பிக் கொடியில் இடம் பெற்றிருக்கும் 5 வளையங்களும் உலகிலுள்ள 5 கண்டங்கள் என குறிப்பிடப்படுகிறது.

இந்த ஐந்து வளையங்களில் இடம்பெற்றிருக்கும் நிறமானது ஊதா, கருப்பு, சிவப்பு, மஞ்சள், பச்சை என்ற வண்ணங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் நிறங்கள் யாவும் அனைத்து நாடுகளில் இருக்கும் தேசியக்கொடியின் பொதுவான ஒரு வண்ணத்தினை மையமாகக் கொண்டு தேர்வு செய்து இக்கொடியானது உருவாக்கப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.