Covaxin vs Covishield |கோவிட்வெக்சின் Vs கோவிட்ஷீல்ட்

கோவிட்ஷீல்ட் தடுப்பூசியும் கோவிட்வெக்சினும்

கோவிட் தடுப்பூசி போட்டதில் இருந்து மருத்துவர்கள் முக்கியமாக பின்வரும் கேள்விகளுக்கு விடை கூறும் நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். கட்டாயமாக இந்த கோவிட் தடுப்பூசிகளை எடுத்துத்தான் ஆகவேண்டுமா?
தடுப்பூசி போடுவதாக இருந்தால் கொவிஷீல்ட் தடுப்பூசி போடுவதா இல்லை கோவெக்ஸின் தடுப்பூசி போடுவதா?

Covaxin Vs Covishield

கொரோனா தடுப்பூசிதான் போட்டு விட்டோமே இன்னும் முகக்கவசம் அணிந்து கொள்வது மற்றும் சமூக இடைவெளிகளை பேணிக் கொள்ள வேண்டுமா? என்றெல்லாம் மருத்துவர்களிடம் அடிக்கடி மக்கள் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள் இன்னும் பல சந்தேகங்களையும், கேள்விகளையும் சமூக வலைத்தளங்களிலும் பதிவிறக்கி வருகிறார்கள். இவ்வாறிருக்க, நாம் முதலில் தடுப்பூசி பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

கோவிஷீல்ட் தடுப்பூசி

கோவிஷீல்ட் தடுப்பூசியானது இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும், அஸ்ராசெனகா என்ற நிறுவனமும் இணைந்து கண்டுபிடித்ததன் விளைவுதான் இதன் ஆரம்பமாகும்.

இந்தியாவில் மட்டுமல்லாது பல நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிக் கொண்டிருக்கின்ற தடுப்பூசி வகைகளுள் இதுவும் ஒன்றாகும். கொரோனா வைரஸ் என்பது, சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பரிட்சயமான ஒரு பரவலான வைரஸாக இது காணப்படுகின்றது.

Covishield

அதனுடைய கட்டமைப்பில், உருவத்தில் உருண்டையாக காணப்படும் மேலும், வெளிப்புறமாக நீட்டிக்கொண்டிருக்கும் ஒரு புரதம்தான் சர்ஃபேஸ் புரோட்டின் எனும் ஸ்பை புரோட்டின் ஆகும். நமது உடம்பில் இருக்கும் கலங்களினுள் இவ் வைரஸ் நுழையும் போது ஸ்பை புரோட்டின் நன்றாக சென்று எமது கலத்தில் ஊடுருவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.

இதனால் இதிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக வேண்டிதான் அனைத்து தடுப்பூசிகளும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் அஸ்டாசெனிகா தயாரித்து வழங்கும் கொவிஷீல்ட் தடுப்பூசியானது வெக்டாவெக்சின் வைரஸ் எனும் ஸ்பை புரோட்டினுடைய வைரஸின் கட்டமைப்பினை ஒரு ஜெனடிக் ஆய்வு கூடத்தில் தயாரித்து அதை செட்ஒக்ஸ்-1 எனும் வைரஸ் எடிசன் வைரஸுடன் இணைத்து உடம்பினுள் செலுத்தி அந்த வைரஸினை மனித உடம்பில் செலுத்தும் முறைதான் கோவிட்ஷீல்ட் ( Covishield ) தடுப்பூசி என அழைக்கப்படுகின்றது.

இந்த வைரஸ் மனிதனுக்கு எவ்வித பாதிப்புகளையும் கொடுப்பதில்லை. இதில் இருக்கும் ஒரு வகையான புரோட்டீன் அளவு நமது உடலில் நுழைந்து உடலுக்கு தேவையான அனைத்தையும் உடலில் இருக்கும் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் உடனடியாக செயல்படுத்தி ஊக்கத்தையும் கொடுத்து வருகின்றது. இது மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றது. அனைத்து விதமான பரிசோதனையின் முடிவுகளையும், ஆய்வுகளையும் கொண்டு வெளிவந்த தடுப்பூசி கோவிட்ஷீல்ட் தடுப்பூசி ஆகும்.

கோவெக்ஸின் தடுப்பூசி

இதை நமது நாட்டில் தயாரிக்கப்படும் கோவெக்ஸின் ஆகும். இது ஹைதராபாத்தில் உள்ள பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், நேஷனல் இன்ஸ்டிடியூட் வைறோலஜி ஆகிய மூன்று அமைப்புகளும் சேர்ந்து தயாரித்து வெளியிடும் இந்த இன்டீஜீனியஸ் தடுப்பூசி ஆகும்.

இவ் கோவெக்ஸின் ஆனது ஒரு கில்ட் தடுப்பூசியாகும். முற்றிலும் செயலிழக்கப்பட்ட, உயிரற்ற வக்சின் வெனோசெல் கல்ப்டர் மூலமாக தயாரிக்கப்பட்டு, அதன் மூலமாக மனிதர்களுக்கு அவர்களின் உடம்புக்குள் செலுத்தும் முறை தான் கில்ட் வைரஸ் கோவெக்ஸின் ( Covaxin ) ஆகும்.

Covaxin

இதில் இருப்பது கில்ட் வக்சின் என்பதால் நோயை ஏற்படுத்தாது, மாறாக நோய் எதிர்ப்பு சக்தியை மாத்திரம் உண்டாக்கும் தன்மை கொண்டது. ஏற்கனவே பல வருடங்களாக தொன்றுதொட்டு போலியோ, புளு, ஹெபடைடிஸ் போன்ற நோய்களில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்காக கில்ட் வைரஸ்களினை பயன்படுத்தி வருகின்றோம்.

இது மூன்றாவது கிளினிகல் ரையலினை தாண்ட முன்னரே அவசர அவசரமாக நமது அரசாங்கமும், அறிவியலும் அங்கீகரித்து அங்கீகரிக்கப்பட்ட வக்சின் ஆகும்.

கோவிட்ஷீல்ட் தடுப்பூசியாக இருந்தாலும் சரி, கோவெக்ஸினாக இருந்தாலும் சரி இரண்டுமே சமனான செயற்பாடுகளைத்தான் செய்கின்றன. இதனை பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை. பயப்படவும் தேவையில்லை.

இன்னும் இதனை குறைந்த வெப்பநிலையில் வைக்கத் தேவையில்லை. பொதுவாக ஐஸ் பெக்யிலோ, அல்லது குளிர்சாதனப்பெட்டியிலோ 2 தொடக்கம் 8 டிகிரி செல்சியஸில் அதனை வைத்து பயன்படுத்திக்கொள்ள முடியும். இதேபோல் அமெரிக்காவில் பைஷர், பயோடெக், போன்ற இம்மாதிரியான நவீன தடுப்பூசிகளும் முழுக்க ஸ்புட்னிக் போன்ற வக்சின்களும் தயாரிக்கப்படுகின்றன.

இவ்வாறான தடுப்பூசிகள் அனைத்தும் பாதுகாப்பானவைகளாகும். சுகாதாரத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் எந்தவிதமான தீங்கும் இல்லை. ஆனால் பிரச்சினை அதனுடைய செயல்திறனில்தான் தங்கியுள்ளது. பைஷர் தடுப்பூசி, மொடொனா தடுப்பூசி ஆகியவை 93 வீதமான செயல்களை கொண்டு காணப்படுகின்றது.

Covid -19

ஆனால் கோவிட்ஷீல்ட்யில் 80 வீதமான செயல் திறன்கள்தான் உள்ளது. கோவெக்ஸினிலும் 80 வீதமான செயல்திறன்தான் உள்ளது, என்று தற்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 95 வீதமான செயல்திறனை வைத்துக் கணக்கிட்டால், 100யில் 5 பேருக்கு மாத்திரம் தான் தொற்று ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. 50வீத செயல்திறனைப் பார்த்தால் 100ல் 20 பேருக்கு மட்டும்தான் தொற்று ஏற்படலாம் என்று கூறப்படுகின்றது. எவ்வாறாயினும் பெரும்பான்மையான மக்கள் இக்கோவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுகிறார்கள் என்பது மறுக்கப்படாத உண்மையாகும்.

இச்செயல்திறனில் அரசாங்கமும், மருத்துவ அதிகாரிகளும் அதிக அளவில் அக்கரை கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். தடுப்பூசி தொடர்பாக மக்கள் மத்தியில் கேள்விகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.

வயதானவர்கள் மாத்திரம்தான் இதனை எடுத்துக் கொள்ள வேண்டும், நாங்கள் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்? என்பதற்கான விடையாக கொரோனா எமக்கு பெரியதொரு பாடத்தையும் கற்றுத் தந்துள்ளது. வயதானவர்கள் இந்த நோய் தொற்றிலிருந்து முழுமையாக வெளிவந்ததையும், காரணமே இல்லாமல் சிறுவயது உயிர்கள், மரணங்கள், உயிரிழப்புகள் பலவற்றையும் சந்திக்க நேரிட்டதையும் கவனிக்க முடிகின்றது.

வயது வேறுபாடு கோவிட் தொற்றுக்கு தடையாக, காரணமாக இல்லை என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். இந்த தடுப்பூசி ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு வைரஸ் தொற்று பரவும் வேகத்தை குறைக்கும் தன்மை கொண்டது.

கடந்த ஒன்றரை வருடங்களாக உலகத்தையே ஆட்டிப்படைத்து, உலுக்கி எடுத்த இந்த கொரோனா வைரஸினை அழிக்க வேண்டுமானால் உலக சனத்தொகையில் உள்ள மக்களில் 60 தொடக்கம் 70 வீதமான மக்கள் இந்த தடுப்பூசியை எடுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.

இதனை தவிர்ந்து கொள்ளலாம் என்பதை எடுத்துக் கொண்டால்தான் எம்மை நாம் பாதுகாக்க முடியும் என்பதே பொதுவான அறிவியல் கண்டுபிடிப்பாகும். தடுப்பூசி போட வேண்டுமா? தேவை இல்லையா? என்ற வினாவுக்கு பதில் – கட்டாயம் அனைவரும் போட்டுக் கொண்டுதான் ஆகவேண்டும்.

என்ன வகையான தடுப்பூசிகள் உங்களுக்கு கிடைத்தாலும் அதனை மறுக்காமல் போட்டுக்கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல் போனால் உங்களுடைய மருத்துவர் பரிந்துரைக்கின்றன தடுப்பூசிகளைபோட்டுக் கொள்ள முடியும்.

தடுப்பூசி போட்டபின் முகக்கவசம் அணிய வேண்டுமா? சமூக இடைவெளிகளில் பேணி நடந்து கொள்ள வேண்டுமா? என்ற கேள்வி கட்டாயம் அதனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.