அதிமதுரம் பயன்கள் | Athimathuram Benefits
அதிமதுரம் பயன்கள் | Athimathuram Benefits
தற்போதைய காலச் சூழலில் புதிது புதிதாக பெருமளவில் நோய்கள் பெருகிகொண்டிருக்கின்றன.நோய்களுக்கு தகுந்த மருந்துகளை கண்டு பிடிப்பதில் மருத்துவ வல்லுநர்கள் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த மருத்துவம் ஆயுர்வேதம், சித்த வைத்தியம் என்ற பல பெயர்களால் அழைக்கப்பட்டு வருகிறது.

நாட்டு மருத்துவத்தில் (Nattu Maruthuvam) பயன்படும் மிக முக்கியமான மூலிகை பொருள் தான் அதிமதுரம்.
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் அனைத்து விதமான நோய்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் பயன்படும் மூலிகை தான் அதிமதுரம்.
அதிமதுரத்தை பற்றி யாரும் அறிந்திராத ஒரு உண்மை இது ஒரு வேர்ப் பகுதியாகும். ஒரு தாவரத்தின் வேர் பகுதிதான் அதிமதுரம் என்றும் அந்த தாவரத்தின் பெயர் குன்றின் மணி ஆகும்.
இதன் இலைகள் வெப்பத் தன்மை உடையவை வேர்கள் குளிர்ச்சி தன்மை உடையவை. குளிர்ச்சி தன்மையுடைய வேர்களை தான் நாம் மருந்தாக பயன்படுத்தி வருகின்றோம்.
இதன் நுனியில் ஊதா நிற பூக்கள் காணப்படும். இதன் காய்கள் 30 மி.மீ வரை வளரும்.
மலைப்பகுதிகளில் தான் விளைவிக்கப்படுகின்றன. அதிமதுரம் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.வட மாநிலங்களான பஞ்சாப், காஷ்மீர்,இமாச்சல் ஆகிய பகுதிகளில் இவை அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன.

தன்னுடைய சுவையினால் “மது”கம், அதி” மது”ரம் போன்ற பெயர்களை பெற்றுள்ளது .இதன் மிகுந்த இனிப்பு சுவையின் காரணமாக அதிமதுரத்தின் வேர் லிகோரைஸ் என்று அழைக்கப்படுகிறது.
அட்டி என்றும் அழைக்கப்படுகிறது. எல்லா விதமான நோய்களுக்கும் ஏற்ற மூலிகையாக விளக்குகின்றது அதிமதுரம்.
இதற்கு சீன ஆயுர்வேத முறையில் மிக முதன்மையான மருந்து என்ற பெயர் அது மதுரத்திற்கு உண்டு. காய்ச்சல், தலைவலி, கண் எரிச்சல், மூட்டு வலி, சர்க்கரை நோய், கூந்தல் தொடர்பான பிரச்சனைகளுக்கு மிக சிறந்த நாட்டு மருந்தாக அதிமதுரம் விளக்குகின்றது.
அதிமதுரத்தின் வேரை வாயிலிட்டு வைக்க இனிப்பு சுவையுடைய ஆவி தொண்டை வழியாக இறங்குவதை நாம் உணரலாம்.அதிமதுரம் வாயினில் உமிழ்நீர் சுரப்பை அதிகரிக்க செய்கிறது.
வயிற்று புண்ணிற்கு அதிமதுரம்:
அதிமதுரத்தின் பொடியாக்கி கொள்ளவும். அப்பொடியை நீரில் போட்டு ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்துக்கொள்ள வேண்டும் . மறுநாள் காலையில் அந்நீரை அரிசி கஞ்சியுடன் சேர்த்து குடித்து வர வயிற்று புண் குணமாகும்
கர்ப்பிணி பெண்களுக்கு அதிமதுரம்:
கர்ப்பிணி பெண்களுக்கு மிகச் சிறந்த நாட்டு மருந்தாக அதிமதுரம் விளங்குகின்றது. பிரசவத்திற்கு முன்னதாக ஏற்படும் உதிரப் போக்கை சரி செய்யும் சிறந்த நாட்டு மருந்து அதிமதுரம் ஆகும்.
அதிமதுரம் மற்றும் சீரகத்தை பத்து கிராம் அளவு எடுத்துக்கொண்டு அதனை பொடியாக்கிக் கொள்ள வேண்டும். பின்பு 100 மி.லி அளவு நீரில் அப்பொடியை போட்டு பாதி அளவுக்கு அதாவது 50 மிலி அளவாக வற்ற நீரைக் கொதிக்க வைக்க வேண்டும். நீரை காலையிலே கர்ப்பிணிப்பெண்கள் மூன்று நாட்கள் குடித்துவர உதிரப்போக்கு நிற்கும்.

பிரசவத்திற்கு முன்பாக பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆக பயன்பெறும் மிகச்சிறந்த பாட்டி வைத்தியம் அதிமதுரம்.தேவாரம் அதிமதுரம் ஆகிய இரண்டையும்40 கிராம் அளவு எடுத்துக்கொண்டு அதனை மிதமான சூடு உள்ள நீரில் சேர்த்து அரைத்துஅதனை கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவ வலி வந்தவுடன்இருமுறை மட்டும் கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும்.
தொண்டை பிரச்சனைகளுக்கு அதிமதுரம்:
அதிமதுரத்தை வாயில் வைத்து இருக்கும் பொழுது சுரக்கும் உமிழ்நீரை விழுங்க தொண்டைக் கரகரப்பு, கீச் என்ற குரல் சரி ஆகிவிடும்.

மேலும் இந்த உமிழ் நீரானது சளிக் கட்டியை கரைக்கும். காலை வேளையில் அதிமதுரத்தை நீரில் கொதிக்க வைத்து சிறிதளவு பனங்கற்கண்டு, மிளகு சேர்த்து குடித்து வந்தால் குரல் இனிமையாகும்.
கூந்தல் வளர்ச்சிக்கு அதிமதுரம்:
அதிமதுரம் குளிர்ச்சித் தன்மையுடையதுஆகையால் உடலின் சூட்டைத் தணித்து கூந்தல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.இளநரை தொடர்பான பிரச்னைகளுக்கும் அதிமதுர சிறந்த மருந்தாக விளங்குகிறது.தேங்காய் எண்ணெய்களிலோ அல்லது கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் மூலிகை தைலங்களிலோ அதிமதுரத்தை சிறிதளவு சேர்ப்பதன் மூலம் உடலின் சூட்டைத் தணித்து அடர்ந்த கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
மேலும் அதிமதுர பொடியை பசும்பாலோடு சேர்த்து தலை முடியின் அடிவரை தடவிய பின் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் அலசி வந்தால் தலை முடி தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.
அற்புதமான அதிமதுரம்:
மனிதர்களின் சராசரி ஆயுட்காலத்தை நீட்டிக்க கூடிய அற்புத படைப்பை அதிமதுரம் . சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிக எளிதாக பயன்படுத்தக்கூடிய மூலிகைதான் இது.சிறிய காய்ச்சல் தொடங்கி பெரிய அளவிலான சிறுநீர் கோளாறுகள் ஆகியவற்றை அதிமதுரத்தை கொண்டு சரி செய்யலாம்.
உலகில் மிக முக்கியமாக பயன்படுத்தப்படும் முக்கிய பொருட்களில் இதுவும் ஒன்று. அனைத்து நாடுகளும் அதிமதுரத்தை எவ்வித யோசனையும் இன்றி தங்கள் மருத்துவத்தில் பயன்படுத்தி வருகின்றனர் . நமது நாட்டை பொறுத்தவரை நாட்டு மருத்துவத்திலும் மிக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
Recent Comments