Ashwagandha Benefits | அஸ்வகந்தா மருத்துவ குணம்

நம் நாட்டில் காணப்படும் மலைப் பிரதேசங்களிலும் வனப் பகுதிகளிலும் எண்ணிலடங்கா மூலிகைப் பொருட்கள் விளைகின்றன. சுக்கு, மிளகு,திப்பிலி, அதிமதுரம், அஸ்வகந்தா ( Ashwagandha ) ,வெட்டி வேர் போன்ற மருத்துவ குணம் நிறைந்த மூலிகை பொருட்களின் கூடாராமாக விளங்குகிறது இந்தியா.

Ashwagandha Benefits

நம் நாட்டில் விளையும் இக் மூலிகை குணம் நிறைந்த பொருட்களை பயன்படுத்தி நம் முன்னோர்கள் ஆயுர்வேதமும் சித்த வைத்தியமும், செய்து வந்துள்ளனர். தங்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு மருந்தாக வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே மருத்துவம் செய்து வந்துள்ளனர் நம் முன்னோர்.

நாட்டு மருத்துவத்தைப் பொறுத்த வரையில் கிராமப்புறங்களில் கிடைக்கும் மூலிகை குணம் நிறைந்த இலைகளையும், வேர்களையும், தண்டு பகுதிகளையும், பூக்களை கொண்டே மருத்துவம் செய்து வந்துள்ளனர். அஸ்வகந்தாவை பொறுத்தவரையில் அதன் முழு தாவரமும், மூலிகை பயன்பாடு நிறைந்தது.

Ashwagandha Plant

நமது தமிழகத்தில் அஸ்வகந்தா அமுக்கிரா கிழங்கு என்று அழைக்கப்படுகிறது. நாட்டு வைத்தியத்தில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் மூலிகை ஆகும். இதன் பயன்களை இப்பொழுது காணலாம்.

அஸ்வகந்தாவின் மற்ற பெயர்கள் மற்றும் பெயர் காரணம்:

குதிரையின் வடமொழி சொல்தான் அஸ்வம். கந்தம் என்றால் கிழங்கு கிழங்கு என்று பொருள். அஸ்வகந்தாவை பயன்படுத்தினால் குதிரைக்கு நிகரான பலம் பெறலாம் என்று கூறுவர். மேலும் அதனை முகர்ந்து பார்த்தால் குதிரையின் வாசனைபோல் மணப்பதால் இதனை இவ்வாறு அழைக்கின்றனர். தமிழகத்தைப் பொருத்தவரையில் அஸ்வகந்தாவை பெருமளவில் அமுக்கிரா கிழங்கு என்று அழைக்கிறோம். வராககர்ணி, அசுவகந்தி, அசுவம், அமுக்குரவி, அமுக்கிரி, இருளி செவி, ஆசிவகம், என்ற பல பெயர்களாலும் இதனை அழைக்கின்றனர்.

இருதயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு அஸ்வகந்தா:

உடலில் அதிகப்படியாக சேரும் கொழுப்புகள் ரத்தக்குழாய்களை அடைத்து இதயத்திற்கு தேவையான ரத்த ஓட்டத்தை தர இயலாமல் போவது மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணமாகும்.

Heart Problem

அஷ்வகந்தாவில் அதிக அளவில் காணப்படும் ஆன்டி ஆக்சிடன்ட் இன் காரணமாக உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கிறது.இதன் மூலமாக இருதயம் தொடர்பான பிரச்சினைகள் அதாவது இருதய அடைப்பு, ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகள் சரி செய்யப்படுகின்றன. மேலும் அஸ்வகந்தா மன அழுத்தம், மனப் பதற்றம் ஆகிய பிரச்சனைகளை சரி செய்வதிலும் பெரிய அளவில் பயன்படுகிறது.

புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு:

அஸ்வகந்தாவின் அதிக அளவில் காணப்படும் ஆன்ட்டி ஆக்சிடன்ட் காரணமாக புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்கப்படுகிறது. அஸ்வகந்தாவை பயன்படுத்த புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகின்றன.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் அஸ்வகந்தா :

நம் அன்றாட வாழ்வை கண்ணுக்கு தெரியாத வைரஸ்களிடமிருந்து காத்துக்கொள்ள நமக்கு மிக அதிக அளவில் தேவைப்படுவது நோய் எதிர்ப்பு சக்தியாகும். பேரிடர் காலத்தில் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு அனைத்து வீடுகளிலும் கஷாயம் நாட்டு மருத்துவ முறைகளை மேற்கொண்டதை நாம் அனைவரும் அறிவோம். அஸ்வகந்தா வில் காணப்படும் மூலப்பொருட்கள் நம் உடலின் நோயெதிர்ப்பு செல்களை அதிகரிக்கச் செய்கின்றன.

அஸ்வகந்தா மருத்துவ

நம் உடலில் நோய் எதிர்ப்பு செல்கள் அதிகரிப்பதால் வைரஸ்களால் ஏற்படும் உடல் உபாதைகள் தவிர்க்கப்படுகின்றன. கொரானாவை எதிர் கொள்வதற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அஸ்வகந்தாவில் உள்ளதா என்று பல்வேறு ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. நாட்டு மருத்துவத்தைப் பொறுத்த வரையில் காய்ச்சல் ,சளி ,இருமல், நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளுக்கு முதலில் பயன்படுத்தப்படும் மூலிகை பொருள் அஸ்வகந்தா எனப்படும் அமுக்கிரா கிழங்கு தான் . இதன் பொடியை நெய்யோடோ அல்லது தேனோடோ கலந்து சாப்பிட்டு வர உடலில் கணிசமான அளவு நோயெதிர்ப்பு சக்தி பெருகும்.

தைராய்டு தொடர்பான பிரச்சினைகளுக்கு:

இன்றைய நாட்களில் பெண்களை மிகுந்த அளவில் பாதிக்கும் ஒரு பிரச்சினையாக இருப்பது தைராய்டு தொடர்பான பிரச்சினையாகும்.அமுக்கிரா கிழங்கு என அழைக்கப்படும் அஸ்வகந்தாதினை அதிக அளவில் சேர்ப்பதன் மூலம் தைராய்டு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். இதன் மூலம் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றம் பிரச்சினைகள் சரிசெய்யப்படுகின்றன.

நீரழிவு நோய்க்கு பயன்தரும் அஸ்வகந்தா :

உடலில் சுரக்கும் இன்சுலின் அளவு குறைவாக இருப்பது இன்றைய நாட்களில் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. இதனால் இந்தியாவை பொருத்தவரையில் பெரும்பாலான மக்கள் நீரிழிவு நோய்க்கு ஆட்பட்டு பாதிப்படைந்துள்ளனர். நீரழிவு நோயை கட்டுப்படுத்துவதற்கு மிக சிறந்த நாட்டு மருந்து அஸ்வகந்தா விளங்குகிறது. அஸ்வகந்தா ( Ashwagandha ) பொடியை மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான அளவில் எடுத்துக் கொண்டு வந்தால் உடலில் சுரக்கும் இன்சுலின் அளவு கட்டுக்குள் வைக்கப்படுகிறது.

முக்கிய வழிகாட்டுதல்:

அஸ்வகந்தா மிக முக்கியமான மூலிகைப் பொருள் என்றாலும் அதனை யாரும் மருத்துவரின் ஆலோசனை இன்றி எடுத்துக் கொள்ளக் கூடாது.

Ashwagandha Benefits

கர்ப்பிணிப் பெண்கள் அஸ்வகந்தா உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். வயிற்றுப்புண் குடல்புண், ரத்த கொதிப்பு நோய் உள்ளவர்கள் அஸ்வகந்தா ( Ashwagandha ) பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் இதனை உட்கொண்டால் வாந்தி, மயக்கம், வயிற்றுப் போக்கு போன்ற உடல் உபாதைகள் ஏற்படக்கூடும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *