தொண்டை சதை வளர்ச்சி | Tansil Problem Home Remedies in tamil
தொண்டை சதை வளர்ச்சி பெரும்பாலும் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது, காரணம் அதிக அளவில் ஐஸ்கிரீம், இனிப்பு, மிட்டாய், குளிர்பானங்கள் ஆகியவை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படுகிறது.
![]() |
Tansil Treament |
தொண்டை சதை வளர்ச்சி முக்கியமாக 7 மற்றும் 8 வயது சிறுவர்களுக்கு அதிகமாக இருக்கும். இது உள் தொண்டையில் உள்ள சதையில் ஏற்படும் அலர்ஜி தான் தொண்டை சதை வளர்ச்சிக்கு முக்கியமான காரணம்.
இந்த தொண்டை சதை வளர்ச்சியை குணமாக்குவதற்கு நமது வீட்டில் உள்ள உணவு பொருட்களை கொண்டு நாட்டு மருத்துவம் மூலம் மிக எளிமையாக குணமாக்கலாம்.
அதிமதுரம் 50 கிராம், சித்தரத்தை 50 கிராம் எடுத்துக்கொண்டு ஓமவள்ளி சாற்றுடன் ஊறவைத்து வெயிலில் காயவைத்து அதை பொடியாக்கி கொண்டு பயன்படுத்தலாம்.
ஏழு வயது உட்பட்ட குழந்தைகளுக்கு 1/4 ஸ்பூன் தேனில் கலந்து கொடுக்க வேண்டும், பெரியவர்களுக்கு ஒரு ஸ்பூன் கொடுக்கலாம்.
இந்த மருந்தை தேனில் கலந்து குடிப்பதற்கு காரணம் தேன் தொண்டையில் உள்ள கரகரப்பு மற்றும் கிருமிகளை சரி செய்வதற்கு தேன் அபூர்வமான மருந்து.
இந்த மருந்தை 48 நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் தொண்டையில் ஏற்பட்ட சதை மற்றும் அலர்ஜி பூரணமாக குணமடையும்.
![]() |
Tansil |
பொதுவாக குழந்தைகளுக்கு குறிப்பாக 6 வயதில் இருந்து 12 வயது வரை உள்ளவர்களுக்கு இனிப்பு, மிட்டாய்கள், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், குளிர்ச்சியான உணவுப் பொருட்கள் அதிகம் கொடுக்காமல், அளவோடு கொடுத்து உண்ணச் செய்வது மிகவும் நல்லது.
மருந்தை பயன்படுத்துவதற்கு முன்பு வெந்நீரில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் கலந்து வாயை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். தொண்டையில் ஏற்பட்ட அலர்ஜியை நீக்கும் திறன் மிக அதிகம்.
இதை தினமும் காலையில் எழுந்தவுடன் பல் துலக்கிய பின்பு வெண்ணீரில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் கலந்து வாயை சுத்தம் செய்வது மிகவும் நல்லது.
இந்த மருந்தை பயன்படுத்தும் போது பேக்கரி உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது ஏனென்றால் பேக்கரி உணவுகளில் அதிகமாக சோடியம் சிட்ரேட் மற்றும் சோடியம் பென்சோவேட் போன்றவை அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
Recent Comments