Nattu Maruthuvam for cough in tamil

குறிப்பு 1 – இருமல் Cough  இதை சரி செய்வதற்கு வீட்டில் உள்ள உணவுப் பொருட்களை மருந்தாக பயன்படுத்தலாம். இதற்கு ஒரு ஸ்பூன் சுத்தமான தேன் மற்றும் ஒரு ஏலக்காய் எடுத்துக்கொள்ளவும், ஏலக்காயை நன்றாக பொடிப் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஏலக்காய் பொடியை தேனில் நன்றாக கலந்து சாப்பிட வேண்டும். ஏலக்காயை தேனில் கலப்பதன் மூலம் தேன் தொண்டையில் உள்ள கரகரப்பு மற்றும் கிருமிகளை குறைப்பதற்கு பயனுள்ளதாக உள்ளது.

மேலும் ஏலக்காய் உடம்பில் உள்ள சளியை நீக்குவதற்கு பயன்படுகிறது இந்த மருந்தை குழந்தைகளுக்கு 1/4 ஸ்பூன் கொடுக்க வேண்டும் பெரியவர்களுக்கு ஒரு ஸ்பூன் அளவு கொடுக்க வேண்டும்.

இருமல் (Cough) அதிகமாக இருந்தால் ஒரு நாளைக்கு மூன்று முறை அல்லது ஐந்து முறை சாப்பிட்டு வந்தால் இருமல் பூரணமாக குணமடையும்.

 

குறிப்பு 2 – ஆடாதொடை இலையை பொடி செய்து கொள்ள வேண்டும் அதை அதில் 5 கிராம் அளவு எடுத்துக்கொண்டு தேனில் கலந்து காலையில் சாப்பிட வேண்டும் இதை தொடர்ந்து மூன்றிலிருந்து ஐந்து நாட்கள் சாப்பிடவேண்டும் 

ஆடாதொடை இலையானது இருமல், சளி மேலும் ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு பிரத்தியேகமாக பயன்படுத்தக்கூடிய ஒரு அபூர்வமான மூலிகை ஆகும்.

ஆடாதொடை இலையானது கிராமப்புறங்களில் அதிக அளவில் கிடைக்கக் கூடிய ஒரு மூலிகை ஆகும், இல்லாவிட்டால் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ஆடாதொடை தேனில் கலந்து சாப்பிடுவதால் இருமல் மற்றும் சளி ஆகிய அனைத்தும் பூரணமாக குணமடையும்.

 

குறிப்பு 3 – வரட்டு இருமல் மற்றும் தொண்டையில் ஏற்பட்ட வலிகளை எளிதாக குணமடைய செய்ய, 

மிளகு, திப்பிலி, சுக்கு மூன்று பொருட்களையும் 2 கிராம் அளவு எடுத்துக்கொண்டு,  தேன் கலந்து காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளையும் சாப்பிட வேண்டும்.

இவ்வாறு சாப்பிட வேண்டியது இருமலுடன் தொண்டையில் ஏற்பட்டிருக்கும் வலியும் எளிமையாக குணமடையும்.

 

குறிப்பு 4 – முதலில் மிளகு நான்கு அல்லது ஏழு எடுத்துக்கொண்டு, அதை பொடியாக்கிக் கொள்ள வேண்டும் பின்பு சிறிதளவு மஞ்சள் பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதை இரண்டையும் சேர்த்து ஒரு டம்ளர் பாலில் சேர்த்து காய்ச்சி சிறிதளவு பனை வெல்லம் கலந்து இரவு தூங்குவதற்கு முன்பு குடிக்க வேண்டும்.

இதை தொடர்ந்து மூன்று நாட்களில் இருந்து ஐந்து நாட்கள் குடித்து வர இருமல் மற்றும் சளி இரண்டும் மிக எளிமையாக குணமடையும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *