ஜலதோஷம் | Nattu maruthuvam for Cold
ஜலதோஷத்தை வீட்டில் இருக்கக் கூடிய அல்லது எளிதாக கிடைக்கக்கூடிய நாட்டு மூலிகைகளை வைத்து (Nattu Maruthuvam) நாட்டு மருத்துவம் மூலம் எளிமையாக குணப்படுத்தலாம்.
![]() |
Cold Treatment |
இதற்கு முதலில் தைல மரத்து இலை, வேப்ப மரத்து இலை, புளிய மரத்தை இலை, சிறிதளவு துளசி இலை, மற்றும் மஞ்சள் தூள் சிறிதளவு இவற்றை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அனைத்து இலைகளையும் தண்ணீரில் போட்டு பாத்திரத்தை மூடி கொதிக்க வைக்க வேண்டும்.
பிறகு அந்தப் பாத்திரத்தை எடுத்து சென்று தனி அறையில் வைத்து நாம் அருகில் அமர்ந்து தங்களையும், நீர் கொதிக்க வைத்த பாத்திரத்தையும் சேர்த்து, ஒரு கனமான துணியைக் கொண்டு மூடிக் கொள்ள வேண்டும்.
பிறகு பாத்திரத்தில் உள்ள மூடியை மெதுவாக திறக்கவேண்டும், திறக்கும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடனே முழுமையாக திறந்தாள் ஆவி முகத்தில் அடித்து முகத்தில் காயம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே அந்த பாத்திரத்தில் உள்ள மூடியை மெதுவாக திறந்து வரக்கூடிய ஆவியை மூக்கினால் இழுத்து வாய் வழியாக மூச்சை விட வேண்டும்.
இவ்வாறு இருபதிலிருந்து முப்பது முறை செய்யவேண்டும். பிறகு வாய் மூலமாக மூச்சை இழுத்து மூக்கு மூலமாக மூச்சை விட வேண்டும்.
பிறகு ஒரு மூக்கை மூடிக்கொண்டு மற்ற மூக்கு மூலமாக இழுத்து மூடிக்கொண்ட மூக்கின் மூலமாக மூச்சை வெளியே விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக இலைகளில் உள்ள மூலிகை மிக எளிமையாக நமது நுரையீரலுக்குச் சென்று எளிதில் ஜலதோஷத்தை நீக்க மிகவும் உதவுகிறது.
இவ்வாறு செய்வதால் உடல் வியர்த்து வியர்வையாக வெளியேறுகிறது. இவ்வாறு காலை மாலை இரு வேளையும் ஆவி பிடித்தால் மிக எளிமையாக ஜலதோஷம் குணமடையும். இதை தொடர்ந்து மூன்று நாட்கள் செய்ய வேண்டும்.
Recent Comments