Jallikattu | ஜல்லிக்கட்டு பற்றி தகவல்

ஜல்லிக்கட்டு (Jallikattu) தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் முதன்மையாகவும், பிரபலமாகவும் விளையாடப்படும் ஒரு  வீர விளையாட்டு. இந்த விளையாட்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு நடத்தப்படும் மிகப்பெரிய திருவிழா.

இந்த விளையாட்டு தை மாதம் மூன்று நாட்கள் மிக சிறப்பாக நடைபெறும். இந்த விளையாட்டில் முதன்மையாக ஒரு காளை மாடு விளையாடும் இந்த காளை மாட்டின் திமிலை  கட்டி அணைக்கும் வீரனுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்.

ஜல்லிக்கட்டு (Jallikattu) சில வகைகளாக பிரிக்கப்பட்டு விளையாட்டை நடத்துகிறார்கள். அதாவது சில ஊர்களை பொருத்தவரை அவர்கள் விரும்பும் வகையில் விளையாட்டை நடத்தி மகிழ்வார்கள்.

பொங்கல் திருநாள் இந்தியாவில் கொண்டாடப்படும் முதன்மையான பண்டிகையாகும். இந்தப் பண்டிகை தை மாதம் முதல் மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த மூன்று நாட்களுக்கு முன்பு போகி என்னும் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை மார்கழி மாதம் கடைசி நாள் கொண்டாடப்படுகிறது.

எனவே பொங்கல் திருநாள் கொண்டாட்டம் போகியுடன் சேர்த்து நான்கு நாட்களாகக் கொண்டாடப்படுகிறது.

  • போகி
  • தை பொங்கல்
  • மாட்டுப்பொங்கல்
  • காணும் பொங்கல்,

எனும் பெயர்களால் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்தப் பக்கத்தில் நாம் காணப்போவது மாட்டுப் பொங்கல் பண்டிகை மட்டுமே இந்த மாட்டுப் பொங்கல் நாட்டு மாடுகளுக்காக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இந்த பண்டிகையை வைத்தே ஜல்லிக்கட்டு (Jallikattu) போட்டிகள் அனைத்தும் நடைபெறுகிறது. காரணம் என்னவென்றால் பெரும்பாலும் நம் முன்னோர்கள் உழவுத் தொழில் வேளாண்மை தொழிலை முக்கிய தொழிலாக செய்து வந்தார்கள். இந்த உழவுத் தொழிலுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது, நமது நாட்டு மாடுகள். இந்த நாட்டு மாடுகளை பொங்கல் தினத்தன்று நன்றி சொல்லும் வகையில் இந்த மாட்டுப் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டி 2000 ஆண்டுகளுக்கு முன் இருந்தே காளைகளின் உரிமையாளர்களால் நடத்தபடுகிறது. இந்த காளையை எவர் ஒருவர் திமிலை கட்டி தழுவுகிறாரோ அவருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதை தொடர்ந்து இன்று வரை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டி ஒரு சில குறிப்பிட்ட மாவட்டங்களில் மிக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. மதுரை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் குறிப்பிடத்தக்கது.
ஜல்லிக்கட்டு விளையாட்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கு விருப்பப்பட்ட வகையில் வெவ்வேறு வகையில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் முக்கியமான வகை 

வாடிவாசல் மஞ்சுவிரட்டு

வடமாடு மஞ்சுவிரட்டு

வெளிவிரட்டு மஞ்சுவிரட்டு

இந்த மூன்று வகை ஜல்லிக்கட்டு விளையாட்டுகளில் சிறப்பாக விளையாடும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது. ஜல்லிக்கட்டிற்கு பயன்படுத்தப்படும் நாட்டு மாடுகள் தனித்துவம் வாய்ந்தது.

You may also like...

1 Response

  1. July 6, 2021

    […] நாட்டு மாடுகள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு விழா திருவிழாவாக மிக பிரம்மாண்டமான […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *