அஷ்வின் புகழ் இணைந்து நடிக்கும் திரைப்படம்
விஜய் டிவி, குக் வித் கோமாளி இரண்டாவது சீசன் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு வரும் அனைவருக்கும் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்புகள் அதிகம் வந்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் பிரபலமாக இருக்கக்கூடியவர் புகழ் (Pugazh). இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவருக்கு அதிகப்படியான தனி ரசிகர்கள் உள்ளனர். (Pugazh) புகழ் மற்றும் (Ashwin) அஷ்வின் இருவரும் இணைந்து படம் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.
இந்த படத்திற்கு ” என்ன சொல்ல போகிறாய் ” என்ற தலைப்பும் வெளியாகியுள்ளது. இப்படம் டிரைடண்ட் அர்ட்ஷ் ரவிச்சந்திரன் தயாரிப்பில், இந்தப் படம் ஹரிஹரன் இயக்க உள்ளார். ஹரிஹரன் இந்த படத்தின் மூலம் இயக்குனராக சினிமா துறையில் அறிமுகமாக உள்ளார்.

இந்த படத்திற்கு அஷ்வின் ஹீரோ மற்றும் புகழ் காமெடியன் என தேர்வு செய்துள்ளனர். விவேக் – மெர்வின் இசை அமைப்பாளராகவும், ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவாளராகவும் உள்ளனர். இந்தப் படம் ஜூலை 19ஆம் தேதி இன்று சென்னையில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
Recent Comments