தூங்கும் முறை பற்றி நம் சித்தர் பெருமக்கள் கூறியவை

தூங்கும் முறை பற்றி நம் சித்தர் பெருமக்கள் பல நூல்களில் தெளிவாக கூறியிருக்கிறார்கள்.

நம் தூங்குவதற்கு இரவு மட்டுமே ஏற்ற காலம் என்பது இயற்கை விதிகளில் ஒன்றாகும். காரணம் பூமி தனது தட்பவெட்ப நிலையை மாற்றி குளிர்ச்சி பொருந்தியதாக உருவாக்கி தூங்குவதற்கு ஏற்ற காலமாக உள்ளது.

முக்கியமாக இரவு நேரங்களில் உறங்காமல் இருந்தாள் என்ன தீமைகள் நிகழும் என்பதை பற்றியும் சித்தர் பெருமக்கள் மிகத் தெளிவாக கூறியிருக்கிறார்கள்.

இரவு நேரங்களில் உறங்காமல் இருந்தால் உடல் சோர்வு ஏற்படும், புத்தி மயக்கம், தெளிவின்மை போன்றவை ஏற்படும்.

படபடப்பு செரியாமை பயம் படபடப்பு மலச்சிக்கல் போன்ற அனைத்து நோய்களும் மிக எளிதில் ஏற்படும் எனவே இரவு நேரங்களில் உறங்குவது மிக அவசியமான ஒன்றாகும்.

ஓங்குயிர் தெற்கு, உத்தமம் கிழக்கு, மத்திமம் மேற்கு, மரணம் வடக்கு.

  1. கிழக்கு திசையில் தலை வைத்து உறங்குவது மிகவும் நல்லது.
  2. மேற்கு திசையில் தலை வைத்து உறங்குவது கனவு மற்றும் அதிர்ச்சி உண்டாகும்.
  3. தெற்கு திசையில் தலை வைத்து உறங்குவது ஆயுள் வளரும்.
  4. வடக்கு திசையில் எப்பொழுதும் தலை வைத்து உறங்கக்கூடாது.

வடக்கு திசையில் தலை வைத்து தூங்கும் பொழுது வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதி மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறிவியல் ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு வடக்கு திசையில் தலை வைத்து தூங்கும் பொழுது மூளை பாதிக்கப்படுவதுடன் நரம்புத் தளர்ச்சி மற்றும் இதயக் கோளாறுகள் ஏற்படும்.

மேலும் கால்களையும் கைகளையும் அகட்டி மல்லாந்து படுத்து உறங்கும் பொழுது உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் குறைகிறது இதனால் இதனால் குறட்டை ஏற்படுகிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.