kadhal kavithai | காதல் கவிதை
கற்பனைகள் விற்பனை ஆகின
இரவின் மடியில் நிலவும் ,உன்நினைவின் பிடியில் நானும்,எழுத்தின் அடியில் கவியும்,கவியின் கரத்தில் கற்பனையும் விருந்தாகின…
விடியலை விதைத்த கதிரவன் நிலவை விரட்ட,நாளை விதைத்த காலன்எனை எழுப்ப,எழுத்தில் எழுந்த கவியோ ஏட்டில் முடியாதிருக்க,முடியா கற்பனைகள் மறதிக்கு விற்பனை ஆகின…
அடியில் – சொல்லில் விருந்தாகின, பரிசாகினகாலன் – காலம் – கவி பிரியை
கண்ணீரலையை பரப்பும் ஆழியலை
நீ நடக்கையில் உன் பாதசுவடுகளை முத்தமிட்ட ஆழியலை,
நீ சென்றதும்அவற்றை தேடிவிட்டுபரப்பிச் செல்கிறது கண்ணீரலையை…
ஆழியலை – கடலலை – கவி பிரியை
உன்னத மொழிசிந்தும் ஊமைவிழிகள்
உடையவனைக் கண்டதும் உமையவளின் ஊமைவிழிகள்,தன்னிலையிழந்து தரணிதனை மறந்து உடையவனின் விழிகளிடம் உன்னத மொழிதனை சிந்தத் துவங்கியதோ…!
உமையவளின் – பெண்ணின் தரணிதனை – உலகைதுவங்கியதோ – ஆரம்பித்ததோ – கவி பிரியை
Kadhal Kavithai in tamil
உன் கரம்பிடிக்கையில்
வண்ணங்களில் தோய்ந்த என் காதல் எண்ணங்கள் உன் கரம்பிடிக்கையில்,வானவில்லாய் மிளிர்கின்றன மேகப்படுக்கையில்….
தோய்ந்த – ஊறியமிளிர்கின்றன – ஒளிர்கின்றன – கவி பிரியை
பகலின் முயற்சி
பகல் தன்னை நகலெடுக்கஎண்ணுதடி ,முழுதினமும் உன்னை காண முடியாததால்… – கவி பிரியை
அவளின் விழியறை
என் மொத்த உலகியக்கமும் அகால மரணமுற்று மறையும் கல்லறை,அவளின் விழியறை … – கவி பிரியை
போதுமடி இவையெனக்கு
பார்வை தாங்க உன் விழிகள்,வாழ்வை தாங்கஉன் காதல்போதுமடி இவையெனக்கு…போரினில் மீளவும்,பாரினில் வாழவும் போதுமடி இவையெனக்கு…
பாரினில் – உலகில் – கவி பிரியை
Recent Comments