கொரோனாக்கு நிதி திரட்டும் டீ கடைகாரர்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஒன்றியத்தில் உள்ள காயம்பட்டி ஊராட்சி மாங்கநாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் புதுக்கோட்டை ஆலங்குடி சாலையிலுள்ள வம்பனில் பகவான் டீ ஸ்டால் நடத்திவருகிறார். இவர் சிறந்த சமூக ஆர்வலரும் ஆவார். 

 

 இவர் 2018ல் ஏற்பட்ட கஜா புயலின்போது  வம்பன் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது. பெரிதும் கவலையில் இருந்த மக்களுக்கு உதவ நினைத்த இவர் தனது டீ கடையில் நிலுவையில் இருந்த அனைத்து தள்ளுபடி செய்தார். இதன்மூலம் அப்போது செய்தித்தாள் மற்றும் சமூகவலைத்தளங்களில் பெரிதும் கொண்டாடபட்டார். 

கொரோனா முதல் அலையின்போது மக்களுக்கு இலவசமாக கபசுரகுடிநீர் வழங்கினார்.  மேலும் பச்சிளம் குழந்தைகளுக்கு  அவரது கடையில் பால் இலவசம் என்பது மேலும் அவரின் சிறப்பு

 

இதுபோன்று பல உதவிகளை அவரால் முடிந்த அளவிற்கு  பலவும் செய்துள்ளார். இந்த நிலையில் கொரோனா இரண்டாவது அலையில் டெல்லியில் மக்கள்படும் இன்னலை கண்ட இவர் டெல்லி மக்களுக்கு உதவுவற்காக இப்போது இந்த உத்தியை கையில் எடுத்துள்ளார்.

 

புதுக்கோட்டையின் ஆலங்குடி, வடகாடு, கீரமங்களம் பகுதிகளில் மொய்விருந்து மிகவும் பிரசித்திபெற்ற ஒன்று.

 

பலருக்கும் செய்யும் மொய்யை விருந்து  வைத்து வாங்குவதே மொய்விருந்து. டெல்லி மக்களுக்கு நிதி திரட்ட இவர் டீ விருந்து வைக்கிறார். உதவும் எண்ணம் உள்ளர்கள் தரும் மொய்யினை டெல்லி மக்களுக்கு நிதியாக கொடுக்க உள்ளார்.

 

நாளை(05.05.2021) வம்பனில் உள்ள அவரது பகவான் டீ ஸ்டாலில் நடைபெறுகிறது. அனைவரும் கலந்துகொண்டு தங்களால் முடிந்த உதவியைச் செய்து. சமூக ஆர்வலர் சிவகுமார் அவர்களை வாழ்த்தியும் வாங்க. அவரின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.