காவிரி ஆறு – Kaveri River

கர்நாடகா மாநிலத்தில் குடகு மாவட்டத்தில் தலைக்காவிரி என்னும் இடத்தில் உற்பத்தியாகிறது காவிரி ஆற்றின் நீளம் 800கிமீ தமிழ் இலக்கியங்களில் பொன்னி ஆறு என்று அழைக்கப்படுகிறது. தென்னிந்தியாவின் கங்கை என்றும் அழைக்கப்படுகிறது.

கர்நாடகத்தில் கபினி ஹேமாவதி ஹாரங்கி லட்மண தீர்த்தம் ஆர்க்காவதி சிம்சா சொர்ணவதி இதன் துணை ஆறுகளாகவும் தமிழகத்தில் பவானி அமராவதி நொய்யல் துணை ஆறுகளாகவும் உள்ளது. 

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக மாநிலத்தில் கபினி ஹேமாவதி ஹாரங்கி ஆகிய அணைகளும் தமிழகத்தில் மேட்டூர் அணை கிருஷ்ணராக அணை கல்லணை மேலணை போன்ற அணைகளும் கட்டப்பட்டுள்ளது.

காவிரி வடிநிலத்தின் மேல் பகுதிகள் தென்மேற்கு பருவகாற்று(ஜூன் – செப்டம்பர்) காலத்திலும்

கீழ்பகுதிகள் வடகிழக்கு பருவகாற்று( அக்டோபர் – டிசம்பர்) காலத்திலும் பயன் அடைகின்றன

காவிரி ஆற்றினால் கர்நாடகா தமிழ்நாடு கேரளா புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் பயன் பெறுகின்றன.

காவிரி ஆற்றினால் தமிழகம் 44000 சதுர கிமீ கர்நாடகா 34000 சதுர கிமீ ஆகிய நிலப்பரப்புகள் நீர்பாசன வசதி பெறுகின்றன

காவிரி நீரை பங்கீடு செய்வதற்காக 1990 ஜீன் 2 இல் காவிரி நடுவர் மன்றம் நிறுவப்பட்டது நடுவர் மன்ற உத்தரவின்படி தமிழ்நாட்டிற்க்கு 419 அடி டிஎம்சி கர்நாடகத்திற்க்கு 270 டிஎம்சி கேரளாவிற்கு 30 டிஎம்சி புதுச்சேரி 7 டிஎம்சி நீரும் வழங்கப்பட்டது

2007 ல் காவிரி நதிநீர் பங்கீடு குறித்து தீரப்பே இம் மன்றத்தின் இறுதி தீர்ப்பாகும்

You may also like...

Leave a Reply

Your email address will not be published.