Benefits of Coconut Tree | தென்னை மரம் வளர்த்தால் ஏற்படும் நன்மைகள்

Coconut Tree
தென்னை மரம்
 

கோக்கஸ் நியூசிஃபெராஃ பைகஸ்  என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட தென்னை மரமானது வெப்ப மண்டல நிலப்பரப்புகளில்  வளரக்கூடியது. எரிக்கேசியோ என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. சங்கு நூலில் தென்னை மரமானது தொங்கு என்று அழைக்கப்படுகிறது. இதற்கு தாழை என்ற பெயரும் உண்டு.  

எல்லா வகை மண்ணிலும் உப்பு நீரை தாங்கி வளரக்கூடியது. மழையும் சூரிய ஒளியும் இருந்தால் நன்கு வளரும். தென்னையை இருபது அடி முதல் முப்பது அடி வரை இடைவெளி விட்டு நட வேண்டும். 

15-30 மீ வரை தென்னை மரமானது வளரும். தென்னை மரத்திற்கு கிளைகள் கிடையாது. தென்னவோலை 4-6 மீ நீளம் உடையது. 

தென்னை மரம்
Coconut Tree
 

உலகில் 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் தென்னை மரமானது காணப்படுகிறது. உலகில்   தேங்காய் உற்பத்தி ஆண்டுக்கு 61 மில்லியன் டன் ஆகும். தேங்காய் உற்பத்தியில் இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகியவை முக்கிய நாடுகளாகும். உலகளவில் தேங்காய் உற்பத்தியில் பிலிப்பைன்ஸ் முதலிடம் வகிக்கிறது. அந்நாட்டில் 20 லட்சம் ஏக்கரில் தென்னை பயிரிடப்படுகிறது. 300 கோடி தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. 

 

இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தென்னை மரமானது பரவலாக வளர்க்கப்படுகிறது. இந்தியாவில் தென்னை உற்பத்தியில் கேரளா முதலிடத்தில் உள்ளது. 

தென்னையில் நெட்டை, குட்டை, கலப்பினம் போன்ற ரகங்கள் உள்ளன. 70 முதல் 100 ஆண்டுகள் வரை நெட்டை தென்னையின் ஆயுட்காலமாகும். நெட்டை தென்னையானது 7 வது ஆண்டிலிருந்து 10 வது ஆண்டிற்குள் காய்க்கும். குட்டை தென்னையானது  3 அல்லது 4 ஆண்டிற்குள் காய்க்கும். 30-35 ஆண்டுகள் இதன் ஆயுட்காலமாகும். 

இளநீர், தேங்காய், கொப்பரை, சிரட்டை, தென்னவோலை, மரம், விறகு, குருத்து, விசிறி  என அனைத்து பாகங்களும்  நமக்கு பயனளிக்கிறது. 

தென்னைக்கு பிரச்சனைகளை  ஏற்படுத்தி தேங்காயின் வில்லனாக செம்பான் சிலந்தி உள்ளது. இந்த சிலந்தி தாக்கும் மரங்களின் காய்கள் சொறி சொறியாக , ஒழுங்கீனமான  வடிவில், சூம்பி போயிருக்கும். இந்த வகை சிலந்தி யானது பிரேசிலிருந்து உலகெங்கும் பரவியது. மிகச்சிறியவை என்பதால் கண்ணுக்கு இப்பூச்சிகள் தெரிவதில்லை.மழைக்காலத்துக்கு  முன் இதன் தாக்குதலை நாம் தென்னை மரங்களில் காணலாம். வேப்பெண்ணெய், பூண்டு கரைசல் தெளிப்பதன் மூலம் இதன் பாதிப்பிலிருந்து 60 சதவீதம் தப்பிக்கலாம். தொடர்ச்சியான மழையே இதன் முழுமையான தீர்வாகும். 

Coconut Tree
Coconut Tree
 

தென்னை மரத்தின் அனைத்து பாகங்களும் நமக்கு பயனளிக்கிறது. 

தேங்காயும் அதன் தண்ணீரும் வயிற்று இறக்கம், மயக்கம், படபடப்பு, இதய துடிப்பு அதிகரிப்பு போன்றவற்றை குணமாக்குகிறது. 

தென்னை மரத்தின் வேரை கசாயம் செய்து குடித்தால் படை, சொறி போன்ற தோல் நோய்கள் குணமாகும். 

சாமி பூஜைகளுக்கு  தேங்காய் பயன்படுகிறது. 

தென்னிந்திய சமையலில் தேங்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. 

இத்தனை பயன் தரும் தென்னை மரத்தை நாமும் வீட்டில் நட்டு பயன்பெறுவோம். 

தொகுப்பு : தரணிகா

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *