இந்திய ஏவுகணை நாயகன் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் | APJ Abdul Kalam

ஏ. பி. ஜே. அப்துல் கலாம் : இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர், அற்புதமான பேச்சாளர் என்று அனைவராலும் அழைக்கப்படும் அப்துல் கலாம் அவர்கள் 1931 அக்டோபர் 15 அன்று தமிழ் நாட்டில் உள்ள ராமேஸ்வரத்தில் பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். 

Apj. Abdul Kalam
APJ Abdul Kalam

 

ராமேஸ்வரத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை ஆரம்பித்தார். ஏழ்மையான குடும்பம் என்பதால் பள்ளி நேரம் போக, மீதி நேரங்களில் செய்தி தாள் விநியோகம் செய்து வந்தார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலுக்கான பட்டமும், மெட்ராஸ் தொழில் நுட்ப கல்லூரியில் விண்வெளி  பொறியியலுக்கான பட்டமும் பெற்றிருந்தார். 

பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். வானூர்தி  அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் விஞ்ஞானியான தனது ஆராய்ச்சி வாழ்க்கையை தொடங்கினார். இதில் சிறிய  ஹெலிகாப்டர் ஒன்றை இந்திய ராணுவத்திற்காக  வடிவமைத்து கொடுத்தார். 

இந்தியாவின் முதல் செயற்கை கோள் ஏவுகணை ராக்கெட் எஸ்எல்வி- 3 இவருடைய தலைமையில் விண்ணில் ஏவப்பட்டது. அக்னி, பிரித்வி ஏவுகணை தயாரிப்பில் முக்கிய பங்கு இவருடையதாகும். 

1974 இல் அணு ஆயுத சோதனை நிகழ்த்தப்பட்டது. 1988 இல் பொக்ரான்-2 அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றினார். இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கை கோள்  பாய்ச்சுதல் வாகனம் தயாரிக்கும்  திட்டத்தின் இயக்குனராக செயலாற்றினார். 1980 இல் ரோகிணி செயற்கை கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 

1980 இல் குறைந்த செலவுள்ள கரோனரி  ஸ்டென்ட்- ஐ  இதயம் சார்ந்த மருத்துவர்  சோம ராஜுவுடன் இணைந்து  உருவாக்கினார். அவர்களை பெருமிதப்படுத்தும் வகையில் கரோனரி ஸ்டென்டிற்கு, கலாம் கரோனரி ஸ்டென்ட் என பெயரிடப்பட்டது. 

இந்தியாவின் 11 ஆவது  குடியரசு தலைவராக பொறுப்பேற்றார். சமாஜ்வாடி கட்சி, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இவருக்கு  ஆதரவளித்து வேட்பாளராக அறிவித்தது.18 ஜுன் 2002 இல் வேட்புமனு தாக்கல் செய்தார். நடைபெற்ற தேர்தலில் 1,07,366  வாக்குகளை பெற்று லட்சுமி சாலை தோற்கடித்தார். இவர் மக்களால் அன்போடு மக்களின் ஜனாதிபதி என்று அழைக்கப்பட்டார். 25 ஜுலை 2002 முதல் 25 ஜுலை 2007 வரை இவரது பதவிக்காலம் ஆகும். ஒரு விஞ்ஞானி இந்திய ஜனாதிபதி ஆனது இதுவே முதல் முறையாகும். 

கவிதை எழுவது, வீணை வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். 2003-2006 க்கான  யூத் ஐகான்  விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டார். 

மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில்  உள்ள இந்திய மேலாண்மை  கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரை நிகழ்த்தி  கொண்டிருக்கும்  பொழுது மயங்கி விழுந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராமேஸ்வரத்தில் முழு ராணுவ மரியாதையுடன்  அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

2017 இல் ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் நினைவு மண்டபம் திறக்கப்பட்டது. அப்துல் கலாம் வீட்டின் முதல் மாடியில் மிஷன் ஆப் லைஃப் கேலரி அமைக்கப்பட்டு அதில் அவர் பெற்ற விருதுகள், முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்ற  போது எடுத்து புகைப்படங்கள், அவர் எழுதிய நூல்கள் ஆகியவை இடம்பெற்றிருந்தன. 

பத்ம பூசண் (1981), பத்ம விபூசண் (1990), பாரத் ரத்னா (1997), ஹூவர் பதக்கம் (2009) போன்ற பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். 

இவர் அக்னி சிறகுகள், இந்தியா 2020, எழுச்சி தீபங்கள் போன்ற நூல்களை எழுதியுள்ளார். 

அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை வாசிப்பு நாளாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.                                       உத்தரப் பிரதேசத்தில் உள்ள தொழில் நுட்ப பல்கலை கழகத்திற்கு அப்துல் கலாம் அவர்களின் பெயர் சூட்டப்படும் என்று அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.                                                அப்துல் கலாம் பிறந்த நாளை  இளைஞர் எழுச்சி நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மாணவர் நலன், மனிதவியல் ஆகியவற்றில்  சிறப்பாக செயல்படும் ஒருவருக்கு டாக்டர். ஏ. பி. ஜே. அப்துல் கலாம் விருது வழங்கப்படுகிறது. 

நம்மை விட்டு மறைந்தாலும் அவரின் நினைவுகளால்  நாளும் நாமும் அவரை போற்றுவோம். 

தொகுப்பு : தரணிகா

You may also like...

Leave a Reply

Your email address will not be published.