Thulasi | துளசி

இந்து சமையத்தில் துளசி செடியானது புனிதமானதாக கருதப்படுகிறது. வீட்டு மாடங்களில் துளசி செடியானது நட்டு வளர்க்கப்படுகிறது. 

thulasi
Thulasi –  துளசி
துளசி Thulasi  என்பதன் பொருள் ஒப்பில்லாததாகும். துளசியின் மற்றொரு பெயர் பிருந்தை இது ஒரு மூலிகை செடி, துளசி செடியின் தாயகமாக இந்திய திகழ்கிறது. துளசி மூலிகைகளின் ராணி எனவும் அழைக்கப்படுகிறது.

செம்மண், குறுமண், வண்டல்மண், பாட்டு நிலங்களில் துளசி (Thulasi) செடியானது வளர்கிறது. விதை மற்றும் இளம் தண்டு குச்சிகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யலாம் 50 செமீ வரை துளசி செடியானது வளரும், துளசி செடி வளர 6.5 – 7.5 என்ற அளவில் மண்ணின் கார அமில நிலை இருக்க வேண்டும்.

25 டிகிரி முதல் 35 டிகிரி வரை வெப்பநிலை இருப்பது துளசி (Thulasi) செடி வளர ஏற்றதாகும். 

துளசி செடியின் இலை, தண்டு, பூ, வேர் அனைத்தும் நமக்கு பயன் அளிக்கிறது.துளசி (Thulasi) செடி 24 மணி நேரமும் ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. 

Ocimum, Lamiaceae, Labiatae துளசி (Thulasi) செடியின் தவர பெயராகும்.

துளசி செடியை விஷ்ணு துளசி, ஸ்ரீ துளசி,ராம துளசி, கிருஷ்ண துளசி, துழாய் என்று புராணங்களில் வெவேறு பெயர்கள் இட்டு சிறப்பித்து கூறுகிறார்கள்.

துளசி 300க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. அவற்றில் சில நல் துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள் துளசி, நாய்துளசி, கட்டுத்துளசி என்பதாகும்.

துளசி (Thulasi) செடியை அமாவாசை, பெளர்ணமி, துவாதசி, ஞாயிற்றுக் கிழமைகளில் பறிக்கக்கூடாது. சுமங்கலி பெண்கள் வெள்ளி கிழமையில் பறிக்கக்கூடாது.

இருமல், சளி, ஜலதோஷம், போன்ற நோய்களை குணமாக்க பயன்படுகிறது. வியர்வையை அதிகமாக பேருக்கும் தன்மை கொண்டது. குழந்தைகளுக்கு தளசி சாற்றுடன் தேன் கலந்து கொடுத்தால் சளி, இருமல் போன்ற நோய்கள் குணமாகும். சரும நோய்களை குணப்படுத்த துளசி சாறு பயன்படுகிறது.

ஞாபக சக்தியை அதிகரிக்க துளசி பயன்படுகிறது. உண்ட விஷத்தை முறிக்க, காது வலி குணமாக, பிரசவ வலி குறைய, கெட்டரத்தம் குணமாக, குளிர் காய்ச்சல் குணமாக இது போன்ற பல்வேறு வியாதிகளை குணமாக துளசி Thulasi பயன்படுகிறது. துளசியில் யூஜினால் என்றால் வாசனைப் பொருள் இருப்பதால் அதிகமாக சாப்பிட்டால் விமாறிவிடும்.பார்ப்பிணி பெண்கள் துளசியை அதிகமாக சாப்பிட கூடாது. ஏனெனில் தாய்க்கும், சேய்க்கும் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்து. நாமும் துளசி செடியை வளர்த்து பயன்பெறுவோம்.

துளசி இலையின் மருத்துவ பயன்கள்

  • குளிர் காய்ச்சல் ஏற்பட்டால் நீலதுளசி இலைச் சாறு எடுத்து கொண்டு இரண்டு ஸ்பூன் அளவு வெண்ணீரில் கலந்து மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை அருந்தி வந்தால் குளிர்க்காய்ச்சல் பூரணமாக குணமடையும்.
  • செந்துளசி சாறு எடுத்துக்கொண்டு அதனுடன் மிளகு சேர்த்து கஷாயமாக தயார் செய்து அதை அருந்தினால் நரம்புகள் அனைத்தும் வலிமை பெறும்.
  • நெருப்பு காயம் ஏற்பட்டால் அந்த காயத்தின் மீது துளசி இலைச் சாரு மற்றும் தேனையும் சேர்த்து பூச வேண்டும். இவ்வாறு தொடர்ந்து பூசிவந்தால் தீயினால் ஏற்பட்ட காயங்கள் அனைத்தும் சில நாட்களிலேயே குணமடையும்.
  • 100 கிராம் அளவுக்கு கருந்துளசியை எடுத்துக்கொள்ளவேண்டும். 100 கிராம் கற்கண்டு சேர்த்துக் கொண்டு சர்பத் பதமாக காய்ச்சி இரண்டு ஸ்பூன் பசுவின் பாலில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு செய்தால் மூளை சுறுசுறுப்பாக இயங்கும்.
  • துளசி இலை மற்றும் முற்றிய முருங்கை இலை இரண்டையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை இடித்து 50 மில்லி லிட்டர் அளவுக்காவது அளவு சாறு எடுத்துக்கொள்ளவேண்டும். 2 சிட்டிகை சீரகம் பொடி செய்து கொண்டு இடித்து எடுத்துக்கொண்ட சாற்றுடன் சேர்த்து காலை மற்றும் மாலை என 50 நாட்கள் உட்கொண்டு வந்தால் ரத்த அழுத்தம் சமமாக இருக்கும்.

        இவ்வாறு துளசியின் மருத்துவ பயன்கள் மிக அதிக அளவில் உள்ளது.

                                                                                                                    தொகுப்பு : தரணிகா

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *