செங்காந்தள் மலர்

நமது இலக்கியங்களில் காந்தள் என்று சிறப்பித்து கூறுப்படும் இந்த மலர் கார்த்திகை மாதத்தில்  பூப்பதால் “கார்த்திகைப்பூ” என்று அழைக்கப்படுகிறது.

senkanthal-malar
செங்காந்தள் மலர் 

 

காந்தள் பேரினத்தை சேர்ந்தது ஆப்பிரிக்கா, ஆசியா இதன் தயக்கமாகும். கார்த்திகை திங்களில் முகிழ்விடும். அது அகல் விளக்கு போன்று ஆறு இதழ்கள் கொண்ட பெரிய பூக்கள் செப்டம்பர் மாதத்தில் தொடக்கி ஜனவரி, மார்ச் – ல் மலரும். இதன் பூக்காம்பு 3-6 அங்குல நீளம் உடையது.

 

பொதுவாக பூக்கால் வாடி உதிர்ந்துவிடும், ஆனால் இம்மலர்கள் ஏழு நாட்கள் வாடாமல் இருக்கும், வாடினாலும் உதிர்வதில்லை.

இதழ்களின் நிறம் முதல் பச்சை, பிறகு வெண்மை கலந்த மஞ்சள், பிறகு செம்மஞ்சள், பிறகு துலக்கமான சிவப்பு, பிறகு நீலம் கலந்த சிவப்பு என மாறிக்கொண்டே இருக்கும். 

இலங்கை, இந்தியா, சீனா, மலாக்கா தீபகற்பம், போன்ற இடங்களில் காணப்படுகிறது.

“Glorisa Superba” (குளோரியோசா சூப்பிறர்பா) என்பது செங்காந்தள் மலரின் தாவரவியல் பெயராகும். நம் ஊரில் இதன் பெயர் கண்ணு நோய் பூ என்று அழைக்கப்படுகிறது.

இப்பூவை பார்த்தல் கண் நோய் வரும் என்று நம்பிக்கை. வேறு ஒன்றும் இல்லை இந்த மலர் மலரும் நேரத்தில் நம் மாவட்டத்தில் கண் நோய் சீசனாக இருக்கும். 

senkanthal-malar
செங்காந்தள் மலர் 
கோல்சிசினே  என்று ஆள்களோயட்கள் இம்மலரில் நிறைந்துள்ளது. இதனை உட்க்கொண்டாள் மரணம் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதன் வேர் நச்சு தன்மை மிக்கது.
அக்கினிசலம், கலப்பை, இலாங்கிலி, தலைச்சுருளி, பற்றி, கோடல், கோட்டை, கார்த்திகைப்பூ, தோன்றி, வெண்தோண்டி, வெண்காந்தள் என்று இம்மலருக்கு இது  போன்ற சிறப்பு பெயர்களும் உண்டு.
பிற மொழிகளான சிங்களத்தில் நியன்கலா, சமஷ்கிருத்தில் லன்கலி, இந்தியில் காரியரி, மராத்தியில் மேத்தொன்னி ஈந்தை, கத்தியநாக், கன்னடத்தில் கருதி, கண்ணினஹத்தே என்று இம்மலர் அழைக்கப்படுகிறது. புற்றுநோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. 

  • பிரசவ வழியை தூண்டும் மருந்தாக பயன்படுகிறது.
  • விஷக்கடிக்கு மருந்தாக பயன்படுகிறது.

இதன் விதைகளில் கோல்சிசின் மருந்து மிகுந்து காணப்படுவதால் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கணுக்கள் இருப்பது ஆண் காந்தாள் எனவும், கணுக்கள் இல்லாதது பெண் காத்தாள் என பிரிக்கப்படுகிறது.
தமிழகத்தில் 95% செங்காந்தள் சாகுபடி நடக்கிறது, ஆண்டுக்கு 700 முதல் 1000 டன் விதைகள் தேவைப்படுகிறது.
முதன் முறையாக 1980 – ம் ஆண்டு மூலனூர் பகுதியில் செங்காந்தாள்  சாகுபடி தொடர்கிறது. தமிழத்தில் மாநில மலராகவும், ஜிம்பாவே நாட்டின் தேசிய மலராகவும் உள்ளது.

                                                    தொகுப்பு – தரணிகா

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published.