இந்திய தேர்தலும் அதன் வரலாறும்

ஒரு நாட்டின் மக்கள் பொது வாழ்வில் பதவிகளை நிர்வகிப்பதற்காக ஒரு தனிநபரை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்படும் செயல்முறை தேர்தல் என்பதாகும். 

indian-election

குடவோலை முறை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சோழர்கள் காலத்தில் நிர்வாக சபை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக குடவோலை முறை பயன்படுத்தப்பட்டது. தகுதியான உறுப்பினர்களின் பெயர்களை எழுதி, பானையில் போட்டு குலுக்கல் முறையில் உறுப்பினர்களைத் தேர்வு செய்வர். குடவோலை முறை  9 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை நடைமுறையில் இருந்தது. 

மத்திய சட்டமன்றத்தின் முதல் தலைவராக ஆங்கிலேயர்கள் இருந்தனர். அதன் பிறகு இந்தியர்கள் தலைவர்களாக தலைமை வகித்தார்கள். இரண்டாவது தலைவராக வித்தல்பாய் பட்டேல் தலைவராக பதவி பொறுப்பேற்றார். தமிழ்நாட்டை சேர்ந்த ஆர். கே. சண்முகம் மார்ச் 1933 முதல் டிசம்பர் 1934 வரை பதவி வகித்தார். ஆறாவது சட்டமன்ற நடப்பின் போது பிரிட்டிஷ் அரசின் ஆட்சி 1947 ஆகஸ்ட் 15 அன்று முடிவுக்கு வந்தது. 

1950 ஜனவரி 26 இல் அரசியலமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் முதல் தலைவராக சுகுமார் சென் பொறுப்பேற்றார். சாதி, பாலின, மத, சமூக அந்தஸ்து ஏதுமின்றி 21 வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையை பெற்று தந்தது. 

இந்தியாவில் முதன்முதலில் 1951-52 ஆம் ஆண்டு தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1951 அக்டோபர் 25 முதல் 1952 பிப்ரவரி வரை ஐந்து மாதங்களாக பல்வேறு கட்டங்களாக பல்வேறு சவால்களை கடந்து வெற்றிகரமாக தேர்தல் நடைபெற்றது.  

indian-election

489 தொகுதிகளில் 1849 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். தேர்தலின் போது இந்தியாவில் 17 கோடியே 30 இலட்சம்  வாக்காளர்கள் இருந்தனர். 45.7 சதவீதம் பேர் வாக்களித்தார்கள். தேர்தலின் போது இந்தியாவில் மக்கள் தொகை 36 கோடி ஆகும். 

1951 அக்டோபர் 25 ஹிமாச்சலப் பிரதேசத்தில் முதல் கட்ட தேர்தல்  தொடங்கி 1952 பிப்ரவரி  21 இல் உத்திரப்பிரதேசத்தில் தேர்தல் தேர்தல் நிறைவு பெற்றது. 

 அகில இந்திய காங்கிரஸ் 364 தொகுதிகளில் வெற்றி பெற்று முதல்  பிரதம மந்திரியாக ஜவஹர்லால் நேரு பொறுப்பேற்றார். 1957 இல் 371 தொகுதிகளில் இந்திய தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் தனது ஆட்சியை நிறுவியது. 1962 இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஜவஹர்லால் நேரு பிரதமராக பதவியேற்றார். 

தேர்தலில் காங்கிரஸ், சோஷலிஸ்ட், ஜன சங்கம், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் பல சுயேட்சை  கட்சிகள் போட்டியிட்டாலும் காங்கிரஸ் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. 

ஜவஹர்லால் நேரு மறைவுக்குப் பின் லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக பொறுப்பேற்றார். பதவியேற்ற இரண்டு  ஆண்டுகளில் லால்பகதூர் சாஸ்திரி மறைந்தார். 

இந்திரா காந்தியை பிரதம வேட்பாளராக காங்கிரஸ் முன்னிறுத்தியது. இந்திரா காந்தி வெற்றி பெற்று பிரதம மந்திரியாக பொறுப்பேற்றார்.  1967 இல் 283 தொகுதிகளிலும், 1971 இல் 352 தொகுதிகளிலும் வெற்றி பெற்று பிரதமராக பொறுப்பேற்றார். 

1977 இல் நடைபெற்ற ஆறாவது மக்களவைத் தேர்தலில் ஜனதா கட்சி 345 தொகுதிகளில் வெற்றி பெற்று மொரார்ஜி தேசாய் பிரதமராக பொறுப்பேற்றார். ஆனால் இவரது ஆட்சி இரண்டு ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை. இவருக்கு அடுத்தபடியாக லோக் தளம் சரண் சிங் பிரதமர் ஆனார். 

1980 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏழாவது மக்களவை தேர்தலில் இந்திரா காந்தி வெற்றி பெற்று நான்காவது முறை பிரதமராக பொறுப்பேற்றார். 

இந்திரா காந்தி படுகொலைக்கு பின்னர், எட்டாவது மக்களவை தேர்தலில் 400 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ராஜீவ்காந்தி பிரதமராக பொறுப்பேற்றார். 1991 மே 21 இல் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். 1991 ஜுன் 15 இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று பி. வி. நரசிம்ம ராவ் பிரதமராக பொறுப்பேற்றார். 

இவ்வாறு பல்வேறு ஆண்டுகளாக இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை என இரு வகைகளாக பிரிக்கிறார்கள். மக்களவையிலன் 543 உறுப்பினர்களைத் தேர்தல் மூலம் மக்கள் தேர்வு செய்கிறார்கள். மாநிலங்களவை உறுப்பினர்களை மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து தேர்வு செய்கிறார்கள். 

தமிழக சட்டமன்றத்தை தேர்ந்தெடுப்பது  ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. 1952,1957,1962 மற்றும் 1967 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல் சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல் என்று அழைக்கப்படுகிறது. 

மதராஸ் மாகாணத்தில் 1952 இல் நடைபெற்ற முதல் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜகோபாலாச்சாரி வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்றார். 

இதுவரை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மூன்று முறையும், திராவிட முன்னேற்றக் கழகம் நான்கு முறையும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஐந்து முறையும் வெற்றி பெற்றுள்ளது. 

1991 ஆம் ஆண்டு பெண் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றார். தமிழக சட்டமன்றத்தில் முதன்முதலாக பெண் ஒருவர் எதிர் கட்சி தலைவராக இருந்தவர் என்ற சிறப்பு இவருக்கு…

தொகுப்பு : தரணிகா

You may also like...

Leave a Reply

Your email address will not be published.