பெட்ரோல் விலை இன்னும் ஏறிடுமோ..?

சூயஸ் கால்வாய் எகிப்தில் அமைந்துள்ளது. இது மத்தியத்தரைகடலையும் செங்கடலையும் இணைக்கிறது. இதன் மூலம் ஆசியா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையே கப்பல் போக்குவரத்து நடைபெறுகிறது.
petrol-image
இந்த கால்வாயின் வழியே கடந்த 2020ஆம் ஆண்டில் மட்டுமே 19000 கப்பல்கள் பயணித்துள்ளன. இந்த கால்வாய் இல்லையெனில் ஆசியா ஐரோப்பா இடையே கப்பல் போக்குவரத்திற்கு ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கைமுனையை சுற்றிவந்தால் இரண்டு வாரகாலம் கூடுதலாக ஆகும். சூயஸ் கால்வாய் வழியே ஆண்டுக்கு 12% வாணிபம் நடைபெறுகிறது.
சூயஸ் கால்வாய்
இந்த கால்வாயில் கடந்த 23ம் தேதி சீனாவில் இருந்து நெதர்லாந்துக்கு பயணித்த எவர்கிவன் என்ற கப்பல் கடுமையான புளுதிப்புயல் காரணமாக குறுக்கு நெடுக்காக தரைதட்டி நிற்கிறது. இந்த எவர்கிவன் கப்பலானது 400மீ நிளமும் 59மீ அகலமும் கொண்டது. ஒரே நேரத்தில் 20000 கண்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு மணிக்கு 42கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்ககூடியது.
சூயஸ் கால்வாய்
ஜப்பான் நாட்டின் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த கப்பலை தைவான் நாட்டின் எவர்கிரீன் மரைன் கார்பரேசன் என்ற நிறுவனம் குத்தகைக்கு எடுத்துள்ளது. இதில் கேப்டன் உட்பட 25பேர் இந்தியர்கள் ஆவார்கள். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக கூறப்படுகிறது. கப்பலில் தொழில்நுட்ப கோழாறுகளோ, இன்ஜின் கோழாறுகளோ விபத்துக்கு காரணமில்லை என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சூயஸ் கால்வாய்
இதுவரை கப்பலில் எண்ணெய் கசிவும் ஏற்படவில்லை. சூயஸ் கால்வாயில் இந்த எவர்கிவன் கப்பலால் 200க்கும் மேற்பட்ட கப்பல்கள் சம்பித்தது நிற்க்கின்றன. எவர்கிவன் கப்பலை அகற்றுவதற்க்கு இதில் சிறந்த நெதர்லாந்து நாட்டின் வல்லுநர்கள் வந்துள்ளனர். இந்த போக்குவரத்து பாதிப்பினால் கச்சா எண்ணெய் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெயின் விலை 4% உயரக்கூடும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக பெட்ரோல் விலை இன்னும் அதிகரிக்குமோ என்ற ஐயம் எழுகிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.