67வது தேசிய திரைப்பட விருதுகள்

 67 வது தேசிய திரைப்பட விருதுகள்
இந்தியாவில் லூமியர் பிரதர்ஸ் சினிமாகிராபி என்ற நிறுவனத்தால் வாட்சன் விடுதியில் ஆறு சிறிய ஊமை படத்தை வெளியிட்டனர். இதுவே இந்தியாவில் முதலில் வெளியிட்ட திரைப்படங்களுக்கும்.
 
national-film-award
67th Nation Film Awards
 

இந்திய கலை மற்றும் பண்பாட்டை வளர்க்கும் விதமாக இந்திய அரசாங்கத்தால் 1954 -ம்  ஆண்டு தேசிய விருதுகள் நிறுவப்பட்டது. இந்திய அரசின் திரைப்பட விழாக்கள் இயக்கம் 1973 -ம் ஆண்டு முதலில் இதனை நிறுவகித்து வருகிறது.

 
குடியரசுத் தலைவரால் புது டெல்லியில் இவ்விருதுகள் வழங்கப்படுகிறது. இது இந்தியாவின் ஆஸ்கர் விருது அன்று அழைக்கப்படுகிறது.
 
இவ்விருதினை இரண்டு வகையாக பிரிகிறார்கள். தங்கத்தாமரை விருது மற்றோன்று வெள்ளி தாமரை விருது. 
 
தங்க தாமரை விருதின் அதிகாரபூர்வமான பெயர் சுவர்ண கமல். சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த இயக்கம், சிறந்த குழந்தைகள் இதில் அடங்கும்.
 
வெள்ளி தாமரை விருதின் அதிகாரபூர்வமான பெயர் இரசத் கமல். ஒவ்வரு மொழியிலும் தயாரிக்கப்படும் சிறந்த திரைப்படங்களுக்கான விருது.
 

67 – வது தேசிய திரைப்பட விருதுகளில் 7 விருதுகளை தமிழ் திரையுலகம் வென்றுள்ளது. 

  • வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் திரைப்படம் சிறந்த திரைப்படதிற்கான விருதினை பெற்றுள்ளது.
  • தமிழில் “அசுரன் ” திரைப்படத்திற்காக தனுஷ் அவர்களும், இந்தியில்  “பொன்ஸ்லே” திரைப்படத்திற்காக மனோஜ் பாஜ்பாய் அவர்களும் சிறந்த நடிகர்களுக்கான விருதினை பெற்றுள்ளார்கள். 
  • “மணிகர்ணிகா : ஜான்சி ராணி ” “பங்கா ” போன்ற படங்களில் நடத்த கங்கனா ரணாவத் சிறந்த நடிகைக்கான விருதினை பெற்றுள்ளார்.
  • விஜய் சேதுபதி “சூப்பர் டியூலெக்ஸ்” படத்திற்காக சிறந்த துணை நடிகர் விருதினை பெற்றுள்ளார்.
  • விசுவாசம் படத்திற்காக டி.இமான் சிறந்த இசையமைப்பாளர் விருதினை பெற்றுள்ளார்.
  • சிறந்த திரைப்பட விருது, நடிகர் பார்த்திபன் தயாரித்து இயக்கிய “ஒத்த செருப்பு அளவு 7” என்ற படத்திற்கு கிடைத்துள்ளது.
  • ரசூல் பூக்குட்டி சிறந்த ஒலிக்கலவை விருதினை “ஒத்த செருப்பு அளவு 7” என்ற படத்திற்காக பெற்றுள்ளார்.
  • சிறந்த குழந்தை நட்சத்திரம் விருதினை “கருப்பு துரை ” படத்திற்காக நாகா விஷால் பெற்றுள்ளார்.
  • சிறந்த நடன அமைப்பு விருதினை சுந்தரம் “மகரிஷி” என்ற தெலுங்கு படத்திற்காக இவ்விருதினை பெற்றுள்ளார்.
 தொகுப்பு : தரணிகா
 

You may also like...

Leave a Reply

Your email address will not be published.