முதல்வரையே எதிர்க்கும் தேர்தல் மன்னன் பத்மராஜன்

கஜினி முகமதுவின் படையெடுப்பையே மிஞ்சும் இந்த சேலம் மாவட்டம் குஞ்சாண்டியூரை சேர்ந்த எட்டாம் வகுப்பு மட்டுமே படித்திருக்கும் தேர்தல் மன்னன் பத்மராஜனின் படையெடுப்பு.
இவன் வார்டு கவுன்சிலர் முதல் குடியரசு தலைவர் வரையிலான தேர்தலில் 216 முறை வேட்புமனு தாக்கல் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
election-king
தேர்தல் மன்னன் பத்மராஜன்
 
உள்ளாட்சி தேர்தல், கூட்டுறவு  சங்க தேர்தல், சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், குடியரசு தலைவர் தேர்தல், துணை குடியரசு தேர்தல் ஆகிய அணைத்து வகை தேர்தல்களிலும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
 
1988 முதல் இவரது தேர்தல் பயணம் தொடங்கியுள்ளது. குடியரசு தலைவர் போட்டியில் அப்துல் கலாம் KR. நாராயணன், ராம்நாத் கோவிந்த் , கிருஷ்ண காந்த, ஷேகவத் ஆகியோரை எதிர்த்து ஐந்து முறை போட்டியிட்டுள்ளார். 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு , ஆந்திர, கர்நாடக, கேரளா, புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் ஒரே சமயத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
 
இதன் பின்பே, தேர்தல் ஆணையம் ஒரு சமையத்தில் இரண்டு இடங்களில் மட்டுமே போட்டியிடலாம் என சட்ட திருத்தம் கொண்டு வந்தது.
 
2014-ல் நடைபெற்ற தேர்தலில் நரேந்திர மோடி அவர்களை எதிர்த்து வதோதரா தொகுதியில்  போட்டியிட்டார் . 2019 – யில் ராகுல் காந்தியை எதிர்த்து கேரளா மாநிலத்தில் வயநாடு தொகுதியில் போட்டியிட்டார்.
 

2019 – வது ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரியில் 200 -வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.

இவர் போட்டியிட்ட அத்தனை தேர்தலிலும் தோல்வியையே தழுவியுள்ளார் என்பதற்காக 2004-ம் ஆண்டு லிம்கா உலக சாதனை புத்தகத்தில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது.
தற்போது நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தலில் மேடடூர் மற்றும் எடப்பாடி தொகுதியில் வேட்ப்புமனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
 
தொகுப்பு : தரணிகா
 

You may also like...

Leave a Reply

Your email address will not be published.