உடல் எடையை குறைக்க வெண்ணீர் சிறந்த தீர்வு – Weight Loss Tips in tamil

உடல் எடையை குறைக்க வெண்ணீர் மிக முக்கியமான மருந்தாக பயன்படுகின்றது. ஆனால் இந்த வெண்ணீரை இந்த நேரத்தில் அருந்த வேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்று.

 

Weight Loss Tips
Weight Loss
 
 
 

முதலில் (Metabolism) மெட்டபாலிசம் பற்றி தெரிந்து கொள்வோம், (Metabolism) மெட்டபாலிசம் என்பது நமது உண்ணும் உணவை உடலுக்கு தேவையான (Energy) சக்தியாக மாற்றும் செயல்முறையை (Metabolism) மெட்டபாலிசம் என்கிறோம்.

 

 

  1. (Metabolic level high) மெட்டபாலிக் அளவு அதிகமாக இருந்தால் நாம் உண்ணும் உணவு எவ்வளவு அதிகமாக இருந்தாலும் உடல் எடை அதிகரிக்காது. காரணம் மெட்டபாலிக் அளவு அதிகமாக இருப்பதால் உணவை விரைவாக (Energy) சக்தியாக மாற்றி உடலுக்கு அனுப்புகிறது. எனவே எந்தவித தேவையற்ற கொழுப்புச் சத்துக்களும் உடலில் தங்காது.
  2. (Metabolic level low) மெட்டபாலிக் அளவு குறைவாக இருந்தால் உணவை (energy) சக்தியாக மாற்ற முடியாமல் அது உடலில் (Fat) கொழுப்புச் சத்தாக சேகரிக்கப்படுகிறது. இதனால் நமது உடல் எடை அதிகரிக்கிறது.
தற்போது வெண்ணீரை அருந்துவதால் உடல் எடை எவ்வாறு குறையும் என்பதை பற்றி பார்க்கலாம், நாம் வெண்ணீரை அருந்துவதால் உடல் உஷ்ணம் ஆகிறது, இந்த உஷ்ணத்தை சமநிலைக்கு கொண்டுவர நமது உடல் முயற்சிக்கிறது.
 
மெடாபோலிக் அளவை அதிகரித்து, உடலில் அதிக சக்தியை உருவாக்க முயற்சிக்கிறது. உடல் பயிற்சி செய்யும்போது நமது உடல் அதிக உஷ்ணம் ஆகின்றது. இதனால் நமது உடல், உடலை சமநிலைக்குக் கொண்டு செல்ல மெட்டபாலிக் அளவை அதிகரித்து, அதிக சக்தியை உருவாக்க முயற்சி செய்கிறது.
 

 

இதனால் நமது உடலில் எந்தவித கொழுப்புகளும் சேராமல் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறது. வெண்ணீரை எந்தெந்த நேரத்தில் அருந்த வேண்டும் என்றால், காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் வெண்ணீரை குடிக்க வேண்டும்.
 
அதேபோன்று நாம் உணவு உட்கொள்ளும் முன்பு அரை மணி நேரத்திற்கு முன்பு குடிக்க வேண்டும், உணவு உட்கொண்ட பிறகு அரை மணி நேரம் கழித்து ஒரு டம்ளர் வெண்ணீரை குடிக்க வேண்டும்.
 
இதேபோன்று ஒவ்வொரு முறை உணவு உட்கொள்ளும் பொழுது இதை செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு ஏழு முறை ஒரு டம்ளர் விகிதம் வெண்ணீரை பருக வேண்டும்.
 
இவ்வாறு பருகுவதால் உடல் எடையானது எளிதில் குறைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் துரித உணவுகளை உண்பதை தவிர்ப்பது நல்லது. அதேபோன்று ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது மிக முக்கியம்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.