Kidney Stone Pain – சிறுநீரக கல்லடைப்பு குணமடைய எளிய முறை.
Kidney Stone Pain – சிறுநீரக கல்லடைப்பு குணமடைய எளிய முறை.
சிறுநீரக கல் (Kidney Stone) அடைப்பு எதனால் ஏற்படுகிறது என்று முதலில் பார்ப்போம். நமது உடலில் உள்ள கழிவுகளை சுத்தம் செய்வதில் சிறுநீரகம் மிக முக்கிய பங்களிக்கிறது. அதாவது உடல் இயக்கத்தின்போது ரத்தத்தில் உள்ள கழிவுகளை ( வேதிப்பொருட்களை) பிரித்தெடுத்து அதை வெளியேற்றுகிறது.
![]() |
Kidney Stone |
இவ்வாறு ரத்தத்தில் உள்ள கழிவுகளை சுத்தம் செய்யும் வேலையில் சில வேதிப் பொருட்கள் சிறிது சிறிது துகள்களாக சிறுநீரகத்தில் தங்கிவிடுகிறது. இது நாளடைவில் ஒரு கல் போன்று உருவெடுத்து, சிறுநீரக கழிவுகளை வெளியே செல்லவிடாமல் சிறுநீரகத்தில் வலியை ஏற்படுத்துகிறது.
இந்த வலி முதலில் முதுகு பக்கம் அல்லது இடுப்பின் பின்புறம் ஆரம்பிக்க தொடங்குகிறது. மேலும் சிறுநீரகப்பை போன்ற உறுப்புகளில் இந்தக் கல் சென்று வலியை ஏற்படுத்துகிறது. இந்த வழியானது சிறுநீர் கழிக்கும்போது வலியை ஏற்படுத்துகிறது.
இந்த சிறுநீரக கல் நமக்கு ஏற்பட முக்கியமான காரணம் நம் உடலில் உள்ள உப்பே காரணம். நான் சரியான நேரத்தில் நீர் அருந்தாமல் இருப்பதுதான் மிக முக்கியமான காரணம். அதாவது சிறுநீரகம் ரத்தத்திலிருந்து கழிவுகளை பிரித்தெடுக்கும் பொழுது உடலில் நீர்சத்து குறைவாக இருப்பதனால் அந்தக் கழிவுகளை முழுமையாக வெளியே அகற்ற முடியாமல், சிறுநீரகத்தில் கழிவுகள் தங்கிவிடுகின்றது. இதுவே சிறுநீர் கல் அடைப்பிற்கு முக்கியமான காரணம்.
![]() |
Drink Water |
சிறுநீரக கல் அடைப்பு முழுமையாக உங்களுக்கு ஏற்படக்கூடாது என்றால் சிறந்த வழி சுத்தமான நீரை ஒரு நாளைக்கு குறைந்தது 4-லிருந்து 5 லிட்டர் குடித்து வந்தால் சிறுநீர் கல் ஏற்பட வாய்ப்பில்லை.
ஒருவேளை சிறுநீர் கல் வலி ஏற்பட்டுவிட்டால் அதற்கு சிறந்த தீர்வு நமது தமிழ் மருத்துவத்தில் உள்ளது.
முதலில் நெருஞ்சி முள் செடியின் வேரை எடுத்துக் கொள்ளவும், சிறுபிள்ளை செடியின் வேரை எடுத்து எடுத்துக் கொள்ளவும், இந்த இரண்டு செடிகளின் வேர்களையும் சம அளவில் இருக்க வேண்டும்.
அதாவது இரண்டு இரண்டு வேர்களை எடுத்து அதில் இரண்டு டம்ளர் நீரை சேர்த்து மெதுவாக கொதிக்க வைக்க வேண்டும் கொதித்து முடித்ததும் அதை முழுமையாக ஆறவைத்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும், அதேபோன்று மாலை நேரத்தில் குடிக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு இந்த நீரை காலை மற்றும் மாலை வேலையில் மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்தாள் இந்த சிறுநீரக கல் வெளியே சென்று, வலியானது முழுமையாக குறையும். மேலும் இந்த நீரை மூன்று நாட்கள் மட்டுமே பயன்படுத்தாமல் குறைந்தது 7 முதல் 10 நாட்கள் தொடர்ந்து குடிப்பது மிகவும் நல்லது.
Recent Comments